ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

தமிழரின் கணித அறிவு – கணக்கதிகாரம் பூசனி விதை கணிதப்புதிர்

,

ஓர் பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால்
 கூற முடியுமா ?    

தமிழரின் பாடல் வரிகள்

கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்

ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து,  இவற்றால் பெருக்கி  வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை  X என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது 90X  ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது 45X ஆகும் அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது 135X  ஆகும்
ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை  X=6  ஆறு  எனக்கொண்டால் (135 * 6 = 810)   135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது  810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின்  எண்ணிக்கை 810 ஆகும்
அடுத்த முறை பூசனி வாங்கும் போது  சரிபாருங்கள்

3 கருத்துகள் to “தமிழரின் கணித அறிவு – கணக்கதிகாரம் பூசனி விதை கணிதப்புதிர்”

 • 21 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:33
  senthil says:

  மிக அருமை...

  பாராட்டுக்கள்.

  இதன் மூலத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

  மிக நன்றி!

 • 20 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:00

  அட்டகாசம்! நண்பரே அட்டகாசம்! கணக்கதிகாரத்திலிருந்து நீங்கள் வழங்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அயர்த்துகின்றன! மிக்க நன்றி! மேலே திரு.செந்தில் கூறியது போல் அந்த மூல நூலை நீங்கள் இங்கே வழங்கலாமே! மேலும் 'மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்' என்றொரு இணையத் தளம் இருக்கிறது. அங்கே இதை நீங்கள் பதிவேற்றினால் உலகெங்குமுள்ள தமிழர்கள் அனைவரையும் இந்த அரிய நூல் சென்றடைய ஏதுவாகும். அதன் முகவரி: http://pm.tamil.net/

 • 24 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:17

  பூசனிக்காயின் கீற்றுகளை என்று வருகிறதே இதில் கீற்று என்பது எதை_?

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates