செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தமிழர்களின் கணித அறிவு – கணக்கதிகாரம் பலாச்சுளைகள் – கணிதப்புதிர்

,


பலாப்பழத்தை அறுக்காமல் எத்தனை சுளைகள்  இருக்கிறது என்று உங்களால் கூறமுடியுமா  ? 


நமது பழந்தமிழ் கணித  நூலான கணக்கதிகாரத்தில் பாடல் ஒன்று  உங்களுக்கு விடை கூறும் .
பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணிவருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி அதை     6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும்  ஈவே(quotient) பலாப்பழத்தினுள் உள்ள சுளையாகும் .

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள  சிறு முட்களின் எண்ணிக்கை 130 எனக்கொண்டால் 130  6 ஆல் பெருக்க வேண்டும் கிடைக்கும் விடை 780 ஆகும் .இந்த விடையை  5  ஆல் வகுக்க கிடைப்பது  156 ஆகும் எனவே  பலாப்பழத்தினுள் உள்ள சுளைகள்  156  ஆகும்
டிஸ்கி -1
ஒரு நிமிஷம் கணவன்மார்கள் கவனிங்க பாஸ் . இதை உங்க மனைவி கூட பலாப்பழம் வாங்கும் போது யூஸ் பன்னுங்க  உங்க  ரேஞ்சே வேறதான்  . இதை ஏற்கனவே  முயற்சித்த  நண்பர்  “ இது மாதிரி  வேற ஐட்டம்  இருக்காப்பா  மனைவியை இம்ப்ரெஸ் பண்ணஅப்படின்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டார்  எனவே  நீங்க தாராளமா முயற்ச்சிக்கலாம் . முயற்ச்சித்து ஓகே ஆயிடுச்சுன்னா  உங்களோட  ஓட்டை இன்ட்லி யும் தமிழ்மணத்துலயும்  குத்துங்க  எஜமான் குத்துங்க .

0 கருத்துகள் to “தமிழர்களின் கணித அறிவு – கணக்கதிகாரம் பலாச்சுளைகள் – கணிதப்புதிர்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates