Wednesday 24 August 2011

களிமண் பொம்மைகளின் காயாத நினைவுகள்

,

மழை  விட்டு விட்டு  பெய்து கொண்டு இருந்தது
ஊரெங்கும் சேறும் சகதியுமாய் கிடந்ததுமுருகனும்  சேகரும் என்னை தேடிக்கொண்டு வந்தார்கள்நானோ பழைய சைக்கிள்  டயரை குச்சியால் தட்டி , தட்டி மதுரைவீரன் கோயில் கிட்ட ஓட்டிக்கிட்டு இருந்தேன் அவர்களைப் பார்த்ததும் எனது டயர் வண்டியை  நிறுத்தினேன் சேகர் தான் கூப்பிட்டான்   “ டேய் வாடா நம்ப   ஊர்க்கிணற்றில் தண்ணி வந்து ரெம்புதாம்என்று  நாங்க பொட்டல் வெளியாய் கிடந்த காட்டுக்குள் ஓடினோம்  வரப்போரத்தில்   இரயில் பூச்சிகள் கருப்பும் சிவப்பும் கலந்த கலரில் மெதுவாய்  ஊர்ந்துகொண்டு இருந்தன.

ஒரு காலத்தில் எங்களோட ஊரின் தாகத்தை தணிச்சது  தொப்புழான் கிழவனோட ஊர்கிணறுதானாம் கந்தாயி என்கிற  கன்னி பொண்னை   ஊரே சேர்ந்து வேசின்னு பட்டம் கட்டியதால அவமானம் தாங்க முடியாம ஊர்கிணற்றில் விழுந்து தற்கொலை பன்னிக்கிட்டாளாம். அவ  செத்து போனதற்க்கு பின்புதான் அவ உத்தமினு   ஊருசனத்திற்க்கு தெரிஞ்சுதாம் அவளை அடைய முடியாத ஆத்திரத்தில் யாரோ வீண்பழியை கந்தாயி மேல போட்டு இருக்காங்க. அந்த கன்னி பொன்னு விட்ட சாபம் தான்  ஊர்க்கிணறே தூர்ந்து போயிருச்சாம் .

நாங்க  ஓடிப்போய் கிணற்றைப்பார்த்தோம்  கிணற்றுல தண்ணியையே பார்க்க முடியல . இழை , தழை எல்லாம் மறைச்சு  இருந்தது   நாங்க மூனு பேரும் கை நிறைய களிமண்ணை அள்ளினோம் சேகருக்கு களிமண்ணுல குட்டை மனுஷன் , காட்டேரி , ரேடியோப்பெட்டி , சோளக்கொள்ளபொம்மை  மாதிரி  நெறையா நெறையா பொம்மை  செய்யதெரியும்  எனக்கோ பொம்மை செய்ய தெரியாது . தீப்பெட்டி சைஸ்ல சின்ன சின்ன சதுரம் செஞ்சு  விளக்குமாறு குச்சியை  நடுவில விட்டு அதுக்கு இரு  புறமும் சக்கரம் வச்சு இரயில் வண்டி செய்ய எனக்கும் முருகனுக்கும்  சொல்லிக்கொடுத்தது  சேகர்தான் .

களிமண்ணை எடுத்து வந்து சவ்வுகயிதத்தில் போட்டுகட்டி  வீட்டுல  யாருக்கும் தெரியாம பெட்டி சந்துல மறைச்சு வைத்தேன் . ஊர்கிணற்றுக்கு போயி களிமண்  எடுத்து வந்ததை அம்மா பார்த்திருச்சுன்னா அவ்வளவுதான்  அடி பின்னி எடுத்திரும்  ஆன  மறைவாக வைச்சு இருந்ததை  தங்கை கண்டுபிடித்து  அம்மாகிட்ட சொல்லி விட்டாள் . அம்மா களிமண்ணை எடுத்து வெளியில வீசிட்டாங்க எனக்கோ தங்கச்சி மேல பயங்கரமான கோவம் வீட்டுக்கு போன அடி விழும்னு  நினைச்சுக்கிட்டு  சேகர் வீட்டுக்கு போனேன்  சேகரோ புதுசா டீவி செஞ்சுக்கிட்டு இருந்தான்  . என்னை பார்த்ததும்  எனக்கும் ஒரு டீவி செஞ்சு தந்தான் அவன் செஞ்ச டீவியை எடுத்துக்கிட்டு சாயங்காலமா வீட்டுக்கு வந்தேன்  நான் எடுத்து வந்த டீவியை தங்கை  பார்த்துவிட்டாள்  ஆனால் என்னிடம் அதை கேட்காமலே  ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருந்தாள் நானோ தங்கையை பார்த்தேன் அவளை கூப்பிட்டு சேகர் செஞ்சுதந்த டீவியை அவளிடம் தந்தேன் அவளோ பாவடையில் வைத்திருந்த வேக வைத்த நிலக்கடலையை எனக்கு தந்தாள் .

1 comments:

  • 25 August 2011 at 00:45

    payam thaan ilamaiyil athikam..anaal intha ilamai thaan vaalvil paasaththai valarkkirathu..vaalththukkal

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates