எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் நமது பூமியை போன்ற உயிர்க்கோளம் எங்கேயாவது உள்ளதா ? கன்னித்தீவை தேடும் சிந்துபாத் போல விஞ்ஞானிகளின் நெடுநாளைய ஆராய்ச்சி வினா . இந்த ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு தற்போது விடை கிடைத்து உள்ளது . நாம் வாழும் பூமியில் இருந்து 20.5 ஒளியாண்டுகள் தொலைவில் ( ஒளி ஒரு வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடியது அப்படி எனில் ஒரு மணியில் 18000000 கிலோ மீட்டர் போகும் அப்படிஎனில் ஒளி ஒரு வருசம் எவ்வளவு தூரம் போகும் என்பதைதான் ஒளி ஆண்டு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் என்னங்க நினைச்சு பார்த்தாலே கண்னை கட்டுதா எனக்கும்தாங்க இதுக்கெல்லால் ரூம் போட்டு யோசிக்கராங்க நாம நம்பித்தான் ஆகனும் வேற என்ன செய்யறது )
துலா என்ற வின்மீன் திரளில் Gliese 581 g என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதுல முக்கியமான விஷயம் இந்த Gliese 581 g என்பது நமது பூமியை ஒத்தது . இந்த கோள் Gliese 581 என்ற சூரியனை ( நமது சூரியன் கூட ஒரு வின்மீன்தாங்க நமது பிரபஞ்ச வெளியில் இது போல ஆயிரக்கணக்கான சூரியன்கள் இருக்கின்றன ) சுற்றி வருகிறது நமது பூமியை விட நான்கு மடங்கு பெரியது இதில் பாறைகள் அதிகமாக காணப்படுகிறது மிக முக்கியமாக வளிமண்டலத்தை கொண்டிருக்க தேவையான ஈர்ப்பை கொண்டு இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது .
இந்த Gliese 581 g கோளின் ஒரு பக்கம் எப்போதும் அதன் சூரியனை நோக்கி உள்ளது இதனால் கோளின் ஒரு பக்கம் முழுவதும் வெளிச்சம் மறுபக்கம் முழுவதும் இருட்டு எனவே இந்த இரு பக்கத்திற்கும் இடையே நிழலும் வெளிச்சமும் உள்ள பகுதியில் உயிரினங்கள் செழித்து வளர வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகளால் உறுதியாக நம்பப்படுகிறது .
நாம் பொருத்திருந்து பார்ப்போம் Gliese 581 g கோளில் நம்மை விட அதிநுட்ப உயிரினங்கள் இருக்கிறதா இல்லை இயற்கை நம்முடன் கண்ணாமூச்சு ஆடுகிறதா என்று