வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மொபைல்களை அழகுறச்செய்யும் சிறந்த பத்து இலவச மென்பொருள்கள்

,

மனிதனின் ஆறாவது விரலாக மொபைல்  மாறிவிட்டது .போசுவதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் இன்று தன்னுடைய பயன்பாடுகளை ஒவ்வொறு நாளும் விரிவடையச்செய்து கொண்டே போகிறது . மொபைல்களுக்கென்று ஜாவா, சிம்பியான் , ஆன்ட்ராய்ட் போன்ற  இயங்கு தளங்களும் அதற்கான மென்பொருள்களும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன .
விலை உயர்ந்த மொபைல்களை பொருமைபட்டுக்கொள்ளவே பலரும் வாங்குகின்றனர் அதற்கான  உரிய மொன்பொருள்களை பயன்படுத்தினால் மட்டுமே மொபல்களின்  உன்மையான பயன்கள்  நமக்கு கிடைக்கும் . கணிப்பொறி மென்பொருள்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் ஆனால் மொபைகளுக்கான் மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாக கூவி கூவி விற்கின்றனர்.
மொபைல்களுக்கான மிகச்சிறந்த பத்து இலவச மொன்பொருள்களை பட்டியலிடுகின்றேன் இவைகள் சிம்பியான் இயங்குதளத்தில் சிறப்பாக இயங்கினாலும் பரவலாக அனைத்து மொபைகளிலும் பயன்படுத்தப்படும் ஜாவா இயங்குதளத்திலும்  இயங்குகின்றன . பட்டியலின் கீழே  மென்பொருள்கள் கிடைக்கும்  இணையத்தின் பட்டியல் தந்திருக்கிறேன் இவற்றை உங்களது மொபைல் மூலமாக நேரிடையாகவும் அணுகலாம்.
1.நியூஸ்ஹன்ட்(News hunt)
தமிழ் , ஆங்கிலம் மட்டுமல்ல இந்தி , மலையாளம், தெலுங்கு , குஜராத்தி போன்ற இந்திய மொழிகளின் செய்திதாள்களையும் தினமும் இலவசமாக படிக்கலாம்
2. நிம்புஸ்(Nimpuz)
நீங்கள்  பேஸ்புக் ,ஆர்குட் போன்ற எந்த ஒரு சமூகவலைதளத்தில் உறுப்பினராக இருந்தாலும் நிம்புஸ் மூலம் உடனுக்குடன் சாட் செய்ய முடியும் அது மட்டுமல்ல உலக அளவில் உங்களின் சமூகவலைத்தள நண்பர்களுடன் இலவசமாக பேச முடியும் , ஆடியோ , வீடியோ , புகைப்படங்கள் இலவசமாக பகிரவும் முடியும்.
3 .ஓபரா மினி(Opera mini)
உங்களது இணைய பயன்பாட்டை  நிறைவு செய்யும் ஒரு கருவி  ஓபராமினி ஆகும்  இந்த Browser மூலமாக தமிழ் வலைப்பக்கங்களை கூட காண முடியும் . இதை பற்றி மேலும் அறிய மொபைலில் தமிழ் வலைப்பக்கங்களை காண்பது எப்படி என்ற எனது வலைப்பதிவிடலை காணவும் .
4. கூகுள் மேப்(Google map)
கூகுள் மேப் உங்களிடம் இருந்தால் உலகமே உங்களின் கைப்பிடிக்குள்    GPS ன்  பயன்பாட்டை முழுவதாக உங்களுக்கு தருகிறது  . இதன் மூலம் உலகின் எந்த ஒரு பகுதியையும் நொடிப்பொழுதில் பல்வேறு தகவல்களுடன் உங்களுக்கு தறுகிறது .
5.திருக்குறள்
உலகப்பொதுமறையாம் திருக்குறள் எளிய விளக்கங்களுடன் கிடைக்கிறது
6.ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 
இதன் மூலம் உங்களின் ஆங்கில அறிவு பல மடங்கு பெருகும்
7. ஸ்மார்ட் மூவி
இந்த மென்பொருள் மூலம் பலவகையான வீடியோ பார்மெட்களையும் பார்க்களாம் .வழக்கமான  நமது மொபைல் 3GP பார்மெட்டை மட்டுமே ஆதரிக்கும்
8 புளூடூத் FDP
இதன் மூலம் பல பைல்களை ஒரே சமயத்தில் மற்றவருக்கு அணுப்பவும் ,பெறவும் முடியும் . இவ்வகையில் தற்போது புளூடூத் எல்லைக்குள் உள்ள உங்களின் நண்பர்கலுக்கு இலவசமாக Message அனுப்பகூட முடியும்.
9. மீடியா சேப்(Media safe)
உங்களின் ஆடியோ , வீடியோக்களை ரகசியமாக பாஸ்வேர்ட் கொடுத்து பாதுக்காக்க முடியும்  இது கிரிப்டோகிராபி முறையில் செயல்படுவதால் உங்களது ஆடியோ , வீடியோக்களை மற்றவர்கள் பர்வையிட முடியாது
10 கார்டியன்  (Guardian)
இது சிம்பியான் வகை மொபைல்களுக்கானது . உங்களிடம் சிம்பியான் வகை மொபைல் இருந்தால் கட்டாயம் இந்த மென்பொருளை வைத்திருக்க வேண்டும் .ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மொபைல் தொலைந்து விட்டாலோ . அல்லது திருடப்பட்டாலே  நீங்கள் பயன்படுத்திருக்கும் Sim ஐ கழற்றி வேறு  Sim ஐ பொருத்திய உடனே புது   Sim ன் எண், மொபைல் புரவைடர், எந்த தொலைதொடர்பு ஏரியா போன்ற பல தகவல்களை  ஏற்கனவே பதிந்து வைத்திருக்கும் உங்களின் வேறு எண்ணுக்கு Message அனுப்பிவிடும் .இதற்கு இணய இணைப்பு தேவை இல்லை என்பது இதன் சிறப்பம்சம்  ஆகும்.
இது போல ஆயிரக்கணக்கான இலவச மொன்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது  உங்களுக்கு தேவையானா மென்பொருளை அறியா கூகிளில் சென்று  Free Mobile software என்று தேடுங்கள் ஆயிரக்கணக்கான மென்பொருள்கள் கிடக்கும்.1 கருத்துகள்:

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates