நாம்மில் பலர் பயன்படுத்துவது நோக்கியாவின் மொபைல்களையே ஆனால் நோக்கியாவின் பாதுகாப்பு குறியீடுகள் பலருக்கும் தெரிவது இல்லை . சுருக்கமாக IMEI எண்கள் கூட தெரிவது இல்லை இந்த எண் தெரிந்தால் நமது மொபைல் தொலைந்து போனால் கூட மீட்பது எளிதாகும் .இது போல மொபைல் செட்டிங்ஸ் மாறி விட்டால் நமது மொபைலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர மொபைல் சர்வீஸ் தோடி போவோம் இந்த குறைபாடுகள் இனி உங்களுக்கு இல்லை கீழே தரப்பட்டு இருக்கும் பாதுகாப்பு குறீயீடுகளை பயன்படுத்தி பாருங்கள் . இந்த குறியீடுகள் அனைத்து வகை மொபைல்களிளும் வேலை செய்யாது இருப்பினும் உங்களுக்கான பயன்பாடுகளை சொந்த முயற்ச்சியில் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ , நண்பர்களுக்கோ பயன்படக்கூடும்
உங்களுக்கு தெரியுமா நாம் பெயர் சொன்னால் போதும் , பெயர் சொல்லியவர்களுக்கு call போகும் அது மட்டுமல்ல மொபைலின் மெனுவை கூட பேச்சின் மூலம் தேர்ந்தெடுக்கலாம் நோக்கியாவின் பல்வேறு மாடல்களில் இந்த அற்புத வசதி உள்ளினைக்கப்பட்டுள்ளது . இந்த வசதி பலருக்கும் தெரிவது இல்லை. இந்தவசதியை பெற சிகப்பு பட்டனுக்கு அதாங்க off பன்றோமில்ல அந்த கீ . அதற்கு மேலே உள்ள கீயை சிறிது நேரம் அழுத்தி பிடியுங்கள் இப்போது speak now எனும் மெனு வரும் இப்போது உங்களது Cotact இல் உள்ள பெயர்களை சொன்னால் போதும் அவர்களுக்கு call போகும் இதை போலவே மெனுக்களையும் தேர்ந்தெடுக்க முடியும்.
உங்களது மொபைல் செட்டிங்ஸ் மாறி விட்டதா மெனு மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியவிலையா அப்படி எனில் உங்களது மொபைலின் settings எனும் பகுதியில் உள்ள Restore factory setting எனும் இடத்தில் 12345 என்று கொடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் இதை செய்ய முற்படும் போது மிகவும் கவனம் தேவை .ஏன் எனில் உங்களது மொபைலில் உள்ள contact , Data , போன்றவை அழிந்துவிடும் என்பதால் ஒரு Backup எடுத்து வைத்துக்கொண்டு Restore factory setting ஐ செயல்படுத்திபாருங்கள்.
*#06# என அழுத்துவதின் மூலம் IMEI (International Mobile Equipment Identity) அறியலாம்.
*#0000# என அழுத்துவதின் மூலம் மொபைலின் MODEL மற்றும் தயாரிக்கப்பட்ட தேதி போன்றவற்றை அறியலாம்
*#92702689# என அழுத்துவதின் மூலம் நீங்கள் பின்வருனற்றை அறியலாம்.
1.மொபைலின் serial எண்
2.மொபைல் தயாரிக்கப்பட்ட வருடமும் தேதியும்
3. நீங்கள் மொபைல் வாங்கிய தேதி ( இதை அதிகமாக எந்த கடைகளும் உள்ளிட்டு தருவதில்லை எனவே Empty ஆகதான் இருக்கும்)
4.உங்களது மொபைலில் ஏதாவது ரிப்பேர் இருந்தால் அது தெரியும் .
5. இதுவரை எவ்வளவு நேரம் மொபைலில் பேசி இருக்கிறீர்கள் என தெரியும்.
உங்களது மொபைலில் உள்ள Browser உடனே திறக்க 0 வை சிறிது நேரம் அழுத்தி பிடியுங்கள் .
thanks
go on
senthil, doha
super news for every one
keep going
sambathkumar.b
டயல் செய்யாமலே பேச்சின் மூலம் call செய்வது எப்படி?