Friday 12 August 2011

அன்று உணவே மருந்து இன்று உணவே நோய்

,

இன்றைய நவீன சூழலில் நம்முடைய உணவுப்பழக்கம் அடியோடு மாறி வருகிறது .நமது பாரம்பரிய உணவுமுறைகளை விட்டுவிட்டு ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு மாறிவிட்டோம்  .தெரிந்தோ தெரியாமலோ நமது பாரம்பரிய உணவு முறையில் புரதம், வைட்டமின்கள்,தாதூப்புகள்,கார்போஹைடிரேட்கள், நார்சத்து போன்றவை சரிவிகித அளவில் பெற்று வந்தோம் .

ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில்  சுவைக்காக அளவுக்கு அதிகமான மசாலா,காரம் சேர்க்கப்படுவதால் வயிற்று புண், நெஞ்சு எரிச்சல் , அஜீரண கோளாறுகள் போன்றவற்றை காசு கொடுத்து நாம் விலைக்கு வாங்குகிறோம்
கண்ணை கவரும் நிறங்களுக்காக சேர்கப்படும் நிறமூட்டிகளும் , கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள்களும் உடற்செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை தேற்றுவிக்கின்றன . பல்வேறு ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள் சாக்கடை ஓரங்கள், பேருந்து நிலையங்களின் ஒதுக்குப்புறங்கள், குப்பைகள் மிகுந்த சாலை ஓரங்கள், போன்ற சுகாதாரமற்ற இடங்களில்தான் இயங்குகின்றன இவைகளிள் பொரிப்பதற்காக பயன்படுத்தும் எண்ணைகள் மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தப்படுகிறது  இதனால்  உணவே நஞ்சாகா மாறும் அபாயம் உள்ளாது .  நாமோ சூடாகவும் சுவையாகவும் தருகிறார்கள் என்பதற்காக சுகாதாரத்தையெல்லாம் பார்பது இல்லை .
அதிலும் சில்லிசிக்கன் என்ற பெயரில் சாயங்காலம் ஆனால் போதும் சாலையோரங்களில் சிறு சிறு தள்ளுவண்டிகளில் வியாபாரம் கன ஜோராக நடக்கிறது . கோழிகள் நல்ல ஆரோக்கிய நிலையில் இருந்ததா  அதை சமைக்கும் முன்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்டதா  என்று யாரும் கவனிப்பது இல்லை சுவை ஒன்றே போதும் அதுவே நமது இலட்சியம் கூட . இது போல சுகாதாரம் அற்று இருப்பதால் மஞ்சள்காமாலை  , அமீபிக்சீதபேதி,டைபாய்டு போன்ற நோய்கள் வந்தாலும் யாரும் திருந்துவதாக இல்லை

ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில்  மசாலா உணவு, மாமிச உணவு, ரொட்டி,பன்,ஜாம்,பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவு போன்றவை தவிர்க்க முடியாதவை . இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்திற்க்கு இவைகள்தான் ஏற்றவை என்று பொய் சமாதனங்கள் கூறப்படுகின்றன .
ஃபாஸ்ட் ஃபுட் நம்முடைய ஆரோக்கியத்தில் , ஊட்டச்சத்து மதிப்பீடுகளில் அக்கறை கொண்டுள்ளதா என்று பார்த்தால் கண்டிப்பாகா இல்லை என்றுதான் கூற முடியும்.

அன்று உணவே மருந்து இன்று உணவே நோயாக மாறிப்போனாலும் யாரும் கவலைப்பட போவது கிடையாது இருக்கவே இருக்கிறது மாத்திரைகள் . அதை சாப்பிட்டு தற்காலிக நிவாரணம் கிடைத்தால் போதும் என்ற மனோபாவம் நம்மில் வேரூன்றி விட்டது . இதனால் உள்நாட்டு உணவக முதலாளிகள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை கொள்ளை இலாபம் அடித்து கொழுக்கின்றன   நாமோ ஊட்டச்சத்து இல்லாமல் சவலைக்குழந்தைகள் போல் ஆகின்றோம் .
அடுத்த முறை ஃபாஸ்ட் ஃபுட்ல் சாப்பிடும் போது சிந்தியுங்கள் நண்பர்களே….
மெய்ப்பொருள் காண்பது அறிவு .

0 comments to “அன்று உணவே மருந்து இன்று உணவே நோய்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates