திங்கள், 1 ஆகஸ்ட், 2011

சுடோகு புதிர் தீர்க்கும் வழிமுறைகள்

,
இன்று உலகம் முழுவதும் சிறுவர்களாளும் பெரியவர்களாளும் விரும்பி ஆடப்படும் கணித விளையாட்டு சுடோகு ஆகும்.சுடோகு என்பதின் பொருள் எண் – இடம் என்பதாகும். 1980 ன் ஆரம்பத்தில் ஜப்பானில் தொடங்கிய சுடோகு விளையாட்டு 2000 ஆண்டு வாக்கில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவியது.

9 * 9 = 81 அமைப்பு கொண்ட சதுரங்களை கொண்டது எனவே இதில் 81 சதுரங்கள் உள்ளது. இதில் 3 * 3 = 9 சதுர அமைப்பு கொண்டது ஒரு அறை ஆகும் எனவே ஒரு சுடோகில் மூன்று அறைகள் இருக்கும்
இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் பள்ளிகூடங்களில் சுடோகு சொல்லி தரப்படுகிறது . சுடோகு புதிரை தீர்ப்பதின் மூலம் தர்க்க ரீதியான அறிவு பல மடங்கு பெருகுகிறது என்பது அறிவியல் மூலம்  நிரூவிக்கப்பட்டுள்ளது.
சுடோகு புதிரை தீர்க்க மிகநுண்ணிய கணித அறிவு கூட்டல் , கழித்தல் பெருக்கள் செயல்பாடுகளும் தேவையில்லை என்பது சுடோகின் சிறப்பம்சம்
தர்க்க ரீதியாக எண்களின் இடம் பற்றி சிந்திக்கும் எவரும் சுடோகு புதிரை எளிதில் தீர்க்க முடியும்
சுடோகு புதிரில் 6,670,903,752,021,072,936,960 தீர்வுகள் இருக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது நமது அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகம்

                                                                           
விளையாடும் முறை
1. ஒவ்வொறு அறையிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்களை ஒரு முறை மட்டுமே எழுத வேண்டும்.
2.ஒவ்வொரு கிடைமட்ட(Row) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
3. ஒவ்வொரு நெடு(column) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
சுடோகு புதிரை தீர்க்கப்பழகுங்கள் வாழ்கையில் தீர்க்கமான முடிவை எடுக்கும் தர்க்க அறிவை பெற்று உயருங்கள் .
வாழ்த்துகளுடன்
அ.குரு

1 கருத்துகள்:

  • 1 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:07

    அன்பின் குரு - தீர்க்கும் வழி முறைகள் என்ற தலைப்பினைப் பார்த்ததும் ஓடோடி வந்தேன் - பதிவைப் பார்த்த்தும் ஏமாந்தேன். சுடோகு என்றால் என்ன என்று தான் விளக்கி இருக்கிறீர்கள் - வழி முறைகள் ஒன்றும் சொல்லவில்லையே ? தலைப்பினை மாற்றுக ! நட்புடன் சீனா

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates