வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

முதல் நானோ தொழில்நுட்ப செயற்கை உயிரியும் – பேரழிவு ஆயுதங்களும்

,

100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளில் செய்யப்படும் அதி நுட்பமான பொருள்களை குறிப்பது நானோ தொழில் நுட்பம் ஆகும்
ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரை 1,000,000,000 பாகமாக பிரித்தால் கிடைக்கும்  ஒருபகுதி அதாவது ஒரு பில்லியனில் ஒரு பங்கு   ஒரு நானோ மீட்டரில்  10 அணுக்களை மட்டுமே நிரப்ப முடியும் மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர்  தடிமன் கொண்டது.  நானோ தொழிநுட்பம் உயிரியல் , இயற்பியல் , வேதியியல்   என  அறிவியலின் அனைத்து துறைகளிலும் விரைவான  புதிய புதிய வியக்கத்தக்க மாற்றங்களை கொண்டுவருகிறது.

நாம்  எந்த ஒரு  தொழில் நுட்பத்தையும்  ஆக்கசக்திக்கு பயன்படுத்துவதை காட்டிலும் அழிவுப்பாதைக்கு தானே பயன்படுத்துவோம் அந்த வகையில்  நானோ தொழில் நுட்பமும் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்று விடுமோ என பயமாய் இருக்கிறது ஏன் எனில் இன்றைய  இணையதள வளர்ச்சியின் காணமாக பல்வேறு உயிரிகளின் மரபனுத்தொடர்கள்  இணையத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது . இணையத்தில் உள்ள  மரபனுத்தொடர் மூலம்  எளிதாக உயிரியல் ஆயுதங்களை  செய்ய முடியும்  என அமெரிக்காவின் இரு மாணவர்கள்  நிரூபித்து உள்ளனர் . 

போரழிவை  உண்டாக்கும் அணு ஆயுதங்களை வெடிக்கச்செய்ய அந்த  அணு ஆயுதங்களை தொடர் பிளவிற்க்கு உட்படுத்த வேண்டும் ஆகையால் அதற்கு முதலில் தொடக்கசக்தி  தரவேண்டும்   இந்த தொடக்க சக்தியை  நானோ தொழில் நுட்பம் மூலம் அளிக்க முடியும்  இதன் மூலம் ஒரு சிறிய அறைக்குள்  இருந்தே மிகப்பெரிய வல்லரசுகளையே  நடுங்கச்செய்யலாம்  இத்தகைய அபாயகரமான போக்கை தடுப்பது மிக மிக சிக்கலானதாக மாறிவிடும். 

நானோ  தொழில்நுட்பம் என்பது வருங்கால  தொழில்நுட்பம் ஆகவே  பல்வேறு  நாடுகள்   நானோ தொழில்நுட்பத்தை  இரகசிமாக  நடத்தி வருகிறது .  நானோ தொழில் நுட்பம் மூலம் பயாலஜிக்கல் வெப்பன்ஸ்  எனப்படும் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கவும்   அணு ஆயுதங்களை கையாண்டு உலகை அழிக்க முடியும் என்பதாலும் கண்டுபிடிக்கப்படும் நானோ தொழில்நுட்ப கருத்துக்கள்  இரகசியமாய் அறிவியல் அறிஞர்களால் காக்கப்படுகிறது. 

நானோ தொழில் நுட்பம் மூலம்  மைகோபிளாஸ்மா ஜெனிடாலியம் என்ற செயற்கை உயிரி உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் ஓர் அணு பூஞ்சையின் உட்கருவை மாற்றியமைக்க முடியும் என்பது  நிரூபிக்கப்பட்டுள்ளது  இது பல்லாயிரக்கணக்கான  ஆண்டுகளாக  நடைபெற்றுவரும் பரிமாண தத்துவத்தையே மாற்றியமைக்கும் காரணியாகி உள்ளது மேலும் இதன்மூலம் மனித நடத்தையையும் குழந்தை பிறப்பு நிகழ்வையும் மாற்றியமைக்க முடியும்  என்பதால்  சமூக ஆர்வலர்கள்  கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்  ஆனல்  அறிவியலை யாராலும் தடுக்க முடியாது மாற்றம் ஒன்று மட்டுமே இந்த உலகில் மாறாத ஒன்று . 

2 கருத்துகள் to “முதல் நானோ தொழில்நுட்ப செயற்கை உயிரியும் – பேரழிவு ஆயுதங்களும்”

  • 26 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:36

    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.

  • 28 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:43

    குரு கடின உழைப்பு எதையும் சாதிக்க செய்யும்..... வாழ்த்துக்கள்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates