நம்ம வாத்தியார் சுஜாதா மனித மூளையை பற்றி தலைமைச்செயலகம் எனும் நூலில் தந்துள்ள “ காக்டெய்ல் செர்ரி” எனும் புதிரை அவர் கூறியவாறே கூறுகிறேன் விளக்கம் மட்டும் அடியேனுடையது (வாத்தியார் சொன்ன விளக்கம்தான் இருந்தாலும் கொஞ்சாம் சிஷ்யனுடைய பங்களிப்பும் கொஞ்சம் இருக்கிறது சுஜாதா அபிமானிகள் மன்னிக்க )
தலைமைச்செயலகத்திலிருந்து வாத்தியார் என்ன சொல்லி இருக்கார்னு பார்ப்போம்
“காக்டெய்ல் செர்ரி” என்கிற இந்த புதிர் மிகவும் பிரசித்தம் ஆனது .புத்திசாலிகளே திணறிப்போய் இதற்கு விடை கிடையாது என்று கைவிட்டிருக்கிறார்கள்.புதிர் மிக எளியது நான்கு தீக்குச்சிகளை படத்தில் உள்ளவாறு வைக்க வேண்டும் .உள்ளே ஒரு செர்ரி பழம் ,ஆப்பிள், ஆரஞ்சு ஏதாவது பழம்.புதிர் என்னவெனில் இரண்டே இரண்டு தீக்குச்சிகளை மட்டும் இடம் மாற்ற வேண்டும் .பழம் கிளாஸுக்கு வெளியே இருக்க வேண்டும் .கோப்பையின் வடிவம் மாறக்கூடாது.
விளக்கம்
வாத்தியார் கூறிய புதிரில் மேலே வலது இடது என இரண்டு தீக்குச்சிகள் உள்ளது .அதை தாங்கி பிடித்தவாறு நடுவில் ஒரு தீக்குச்சியும் கோப்பையின் கைப்பிடி போல ஒரு தீக்குச்சியும் ஆக மொத்தம் நான்கு தீக்குச்சிகள் உள்ளது
இப்போது முதல் நகர்தலாக தாங்கி பிடித்தவாறு உள்ள தீக்குச்சியை வலப்புறமாக நகர்துங்கள் எதுவரை தெரியுமா .மேலே வலப்புறம் உள்ள தீக்குச்சிவரை .முதல் நகர்த்தலின் முடிவில் கீழ்கண்டவாறு படம் மாறி இருக்கும்
இரண்டாவது நகர்தலாக மேலே இடதுபுறம் உள்ள தீக்குச்சியை எடுத்து கீழ்புறம் நோக்கி வைக்க வேண்டும் .இரண்டுதீக்குச்சிகளை மட்டும் நகர்த்தியதில் செர்ரி பழம் வெளியே வந்து விட்டது .ஆனால் “ஷேப்” அதாங்க வடிவம் மாறவில்லை படம் கீழே கண்டவாறு மாறி இருக்கும்
விளக்கியதில் பிழையிருந்தால் அடியேனை மன்னிச்சுக்குங்க விளக்கம் புரிஞ்சு இருந்தால் நம்ம வாத்தியாருகு ஒரு “ ஜே “ போடுங்க.
:-)