Saturday 3 September 2011

மொபைலின் பேட்டரி திறனை உயர்த்தும் வழிமுறைகள்

,
மனிதனின் ஆறாவது விரலாக மாறிவிட்ட மொபைலின்  உயிர்நாடி என்பது பேட்டரி ஆகும் .பேட்டரியை நாம் சரிவர பராமரிக்காவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து விரைவில் செயல் இழந்து விடும்  பின் வரும் குறிப்புகளை பின் பற்றினால் உங்களின் பேட்டரி நீண்ட நாளுக்கு வரும்

புதிய மொபைல் வாங்கும்போதோ அல்லது புதிய பேட்டரி வாங்கும் போதோ  முதலில் 8 மணி நேரம் சார்ஜ் செய்வது மிகவும் அவசியம் 1 மணி அல்லது 2 மணியில் பேட்டரி புல் என காட்டினாலும் சார்ஜ்செய்வதை நிறுத்தாதீர்கள் 8 மணிநேரம் முடிந்த பின்பே சார்ஜரை நீக்குங்கள் .
முதல் சார்ஜிக்கு பிறகு எப்போது மொபைல் “பேட்டரி Low “  என காட்டுகிறதோ அப்போதுதான் சார்ஜ்செய்ய ஆரம்பிக்க வேண்டும்  ஒரு பாயின்ட் அல்லது  இரண்டு பாயின்ட் குறைந்தாலோ உடனே சார்ஜ் செய்ய ஆரம்பிக்க கூடாது

உங்களது மொபைலின் பேட்டரி mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரியா என சோதித்து பார்த்து வாங்குங்கள் ஏன் எனில் ஆடியோ , வீடியோ, இணையவசதி உள்ள மல்ட்டிமீடியா மொபைலுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரி தேவை

இரவு சார்ஜரில் போட்டுவிட்டு காலையில் எடுக்கும் வழக்கத்தை தயவு செய்து தவிர்த்து விடுங்கள் ஏன் எனில்  நீங்கள் இப்படி சார்ஜ் செய்தால் உங்களது பேட்டரி விரைவில் உப்பிவிடும் பின் பயன்படாமல் போகும்
புளூடூத் வசதி , வை-பை வசதி மற்றும் இணைய வசதியை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள் மற்ற நேரங்களில் அணைத்து வையுங்கள் எப்போதும் திறந்தே வைத்திருந்தால் போட்டரியின் திறன் குறைந்து கொண்டே வரும்
ரிங்டோனுக்கு முழு பாட்டையும் வைக்காதீர்கள் “கட்சாங்ஸ்” எனப்படும் குறுகிய பாடல்களையே ரிங்டோனாக வையுங்கள் இதனால் பேட்டரியின் திறன் அதிகமாக செலவழிக்கப்படுவது தவிற்கப்படும்

மொபைலை FM ரேடியா போல் எப்போதும் பாடல்களை பாட விடதீர்கள்

உங்களது மொபைலின் திரை வெளிச்சத்தை குறைத்து வையுங்கள் அனேகமாக அனைத்து மொபைல்களிலும் பவர்சேவர்மோட்  இருக்கும் அதை ஆக்டிவேட் செய்யுங்கள் இதனால் உங்களது பேட்டரி நீண்ட காலத்திற்கு வரும்
வால்பேப்பர் மற்றும் ஸ்கீரின்சேவர்களில்  பிக்ஸ்ல்கள் அதிகமுடைய படங்களை வைக்காதீர்கள்  இதனால் பேட்டரி விரைவில் தீரும்
அதிக வெப்பமுள்ள இடங்களில் மொபைலையோ பேட்டரியையோ வைக்காதீர்க்கள் இதனால் உங்களது பேட்டரி திறன் குறையக்கூடும்

கூடுமான வரையில் கம்பெனிகளின் ஒரிஜினல் பேட்டரிகளையே வாங்குங்கள் 30 ரூபயில் கிடைக்கிறது 40 ருபயில் கிடைக்கிறது என்று தரமற்ற பேட்டரிகளை வாங்காதீர்கள்  இத்தகைய பேட்டரிகள் வெடித்து உங்களுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் அது போல கம்பெனிகளின் ஒரிஜனல் சார்ஜர்களையே பயன்படுத்துங்கள்  இதனால் மின் விபத்துக்களை தவிர்க்க முடியும்

இந்த குறிப்புகளை பின் பற்றினால் உங்களின் பேட்டரி நீண்ட நாளுக்கு வரும். 

4 comments to “மொபைலின் பேட்டரி திறனை உயர்த்தும் வழிமுறைகள்”

  • 3 September 2011 at 23:15

    நல்ல பகிர்வு

    நன்றி நண்பரே..

    தங்களுக்கும் தங்கள் ஆசிரிய நண்பர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நழ்வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

  • 5 September 2011 at 21:11
    Unknown says:

    nice brother....

  • 5 September 2011 at 21:47

    good article thanks to writter

    gvr pudukkottai

  • 5 September 2011 at 22:43
    Guru says:

    வாசித்தது மட்டுமல்லாமல் எனை நேசித்து கருத்துரை வழங்கிய நெஞ்சங்கள் சம்பத்குமார்,RDS,Gவரதராஜன் ஆகியோருக்கு நன்றிகள்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates