உடலை குறைப்பது எப்படினு புத்தகம் தேட நூலகத்திற்கு போகிறார் சர்தார்ஜி
சர்தார்ஜி: சார் போன தடவ எடுத்துக்கிட்டு போன இந்த புத்தகத்த முழுசா படிச்சுட்டேன் நெறைய்யா கேரக்ட்டர்கள் வருது ஆன கதையே இல்ல ?
நூலகர் : வாட என் கொய்யால உன்னைதான் தேடிக்கிட்டு இருந்தேன் டெலிபோன் டைரக்டரியை காணும்னு தேடிக்கிட்டு இருந்தேன் அதை எடுத்துக்கிட்டு போனவன் நீதானா
சர்தார்ஜி கடுப்பாகி உடலை குறைக்க ஒரு டாக்டரிடம் போகிறார்
டாக்டர் : உங்க உடம்பு குறையனும்னா தினமும் ரெண்டு மைல் நடக்கனும்
சர்தார்ஜி : அய்யய்யோ டாக்டர் எங்கிட்ட மயில் எல்லாம் இல்லை வேனும்னா ஒரு கோழியையும் , ஒரு வாத்தையும் நடக்கவுடறேன்
டாக்டர் : யோ நீ தினமும் ரெண்டு மைல் நடக்கனும்யா
( ஒரு மாதம் கழிச்சு சர்தார்ஜி டாக்டருக்கு போன் பன்னுகிறார் )
சர்தார்ஜி : ஹலோ டாக்டரா நீங்க சொன்ன மதிரி ஒரு நாளைக்கு ரெண்டு மைல் நடந்து ஒரு மாசத்துல 60 கிலோமீட்டரை ஐ தாண்டி நடந்துகிட்டு இருக்கேன் அடுத்து என்ன பன்னனும் ?
டாக்டர் : யோ சாவு கிராக்கி உன் கூட ரோதனையா போச்சுய்ய திரும்பி ஹாஸ்பிடலுக்கே வா
சர்தார்ஜி ஹாஸ்பிடலுக்கு திரும்பி வரும் போது டாக்டர் அங்கு இல்லை ஒரு சீனா நோயாளி மட்டும் ஹாஸ்பிடலில் படுத்து இருக்கிறார்
சர்தார்ஜி: ஏங்க டாக்டர் எங்கு இருக்கிறார்
சீன நோயாளி : ஜிங் ஸோங் சௌ ஸஸி
சர்தார்ஜி : நான் உங்களை பார்க்க வரலீங்க டாக்டரை பார்க்க வந்தேன் ?
சீன நோயாளி : ஜிங் ஸோங் சௌ ஸஸி
சர்தார்ஜி : ஓ என்னை பத்தி கேக்கிறீர்களா நான் நல்ல இருக்கேங்க நீங்க நல்ல இருக்கீங்களா ? சீக்கிரம் குணமாகிடுவீங்க பயப்படதீங்க
சீன நோயாளி : ஜிங் ஸோங்…………….
சீன நோயாளி இறந்து விடுகிறார்
சீன நோயாளியின் இறுதி விருப்பமான ஜிங் ஸோங் சௌ ஸஸி என்பதின் அர்தம் புரிந்து அதை நிறைவேற்ற சீனவுக்கு போக விமான நிலையம் போகிறார்
சர்தார்ஜி:ஏங்க இங்கிருந்து சீனா போக எவ்வளவு நேரம் ஆகும்
ரிஷப்ஸினிட் பெண் : வெயிட் எ நிமிட் சார்
சர்தார்ஜி : அய்யய்யோ ஒரு நிமிஷத்திலே சீனாவுக்கு போயிருமா இவ்வளவு வேகம் என் உடம்புக்கு ஒத்துக்காதும்மா
ரிஷப்ஸினிட் பெண் : நோ சார் பிளீஸ் வெயிட் எ நிமிட் சார்
சர்தார்ஜி : ஓ என்னோட வெயிட்டை கேக்கிறீங்களா 76 கிலோங்க
எப்படியோ பல சிக்கலுக்கு இடையில் சீன சென்று சீன நோயாளி இறுதி விருப்பமாக கூறிய ஜிங் ஸோங் சௌ ஸஸி என்பதிற்கு அர்தம் தேடுகிறார்
கடைசியில் ஜிங் ஸோங் சௌ ஸஸி என்பதற்கு அர்தம் கண்டு பிடிக்கிறார்
அர்தம் : யோ முண்டம் ஆக்ஸிஜன் சிலின்டரில் இருந்து சீக்கிரம் காலை எடுய்யா உயிர் போக போகுது.