நமது பழங்கால தமிழ் இலக்கியங்களை சுவைக்க வேண்டுமெனில் நமக்கு யாப்பு முறையாக தெரிந்து இருக்க வேண்டும் . யாப்பு என்பதற்கு பொருள் கட்டுதல் என்பதாகும் அதாவது செய்யுளை கட்டுவதாகும் யாப்பினால்தான் கலங்களை கடந்தும் கட்டழகு குலையாமல் தமிழ் விளங்கி வருகிறது . எழுத்து, அசை , சீர் , தளை, அடி தொடை என்பன யாப்பின் உறுப்புகள் வாருங்கள் நண்பர்களே யாப்பு எனும் கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம் .
எழுத்து
செய்யுளை இயற்ற அடிப்படையானது எழுத்து ஆகும் .உயிரெழுத்துகள் , மெய் எழுத்துகள் , உயிர்மெய் எழுத்துகள் ஆகியன இவற்றில் அடங்கும்
அசை
எழுத்து தனித்து நின்றோ , பல எழுத்து சேர்ந்து நின்றோ ஓசை உண்டாகுமாறு நிற்பது அசை ஆகும் . இது நேரசை , நிரையசை என இருவகைப்படும் நேரசை கண்டு பிடிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளும் முன் குறில் , நெடில் ஒற்று என்பதை அறிவோம்
குறில் : குறுகிய ஓசை உடையது குறில் ஆகும்
நெடில் : நீண்ட ஓசை உடையவை நெடில் ஆகும்
ஒற்று : புள்ளி வைத்து எழுதப்படும் எழுத்து
நேரசை கண்டு பிடிக்கும் வழிமுறைகள்
குறில் தனித்து வருவதும் , குறிலை அடுத்து ஒற்று வருவதும் , நெடில் தனித்து வருவதும் , நெடிலை அடுத்து ஒற்று வருவதும் நிரையசை ஆகும்
சொல்/க = குறிலை அடுத்து ஒற்று /குறில் தனித்து
மா = நெடில் தனித்து
மான் = நெடிலை அடுத்து ஒற்று
நிரையசை கண்டு பிடிக்கும் வழிமுறைகள்
இரு குறில் தனித்தும் , இரு குறில் அடுத்து ஒற்று வருவதும் , குறில்நெடில் தனித்தும் , குறில் நெடில் அடுத்து ஒற்று வருவதும் நிரையசையாகும்
பல – இரு குறில் தனித்து வருவது
மலர் – இரு குறில் அடுத்து ஒற்று வருவது
பலா – குறில் நெடில் தனித்து வருவது
வரார் – குறில் நெடில் அடுத்து ஒற்று வருவது
சீர்
அசை ஒன்றோ பலவோ சேர்ந்து அடிக்கு உறுப்பாவது சீர் ஆகும் இது ஓரசை சீர் , ஈரசை சீர் , மூவசை சீர் , நான்கசை சீர்
ஓரசை சீர்
நேர் – நாள்
நிரை – மலர்
ஈரசை சீர்
நேர்/நேர் – தேமா
நிரை/நேர் – புளிமா
நிரை/நிரை – கருவிளம்
நேர்/நிரை – கூவிளம்
மூவசைசீர்
நேர்/நேர்/நேர் – தேமாங்காய்
நிரை/நேர்/ நேர் – புளிமாங்காய்
நிரை/நிரை/நேர் – கருவிளங்காய்
நேர்/நிரை/நேர் – கூவிளங்காய்
நேர்/நேர்/நிரை – தேமாங்கனி
நிரை/நேர்/நிரை – புளிமாங்கனி
நிரை/நிரை/நிரை – கருவிளங்கனி
நேர்/நிரை/நிரை – கூவிளங்கனி
தளை
நின்ற சீரின் ஈற்றசையும் ,வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோ வருவது தளை ஆகும் இது ஒன்றிய வஞ்சித்தளை , ஒன்றாவஞ்சித்தளை , கலித்தலை ,வெண்சீர் வெண்டளை , நேரொன்றாசியத்தளை , நிரையொன்றாசிரியத்தளை என ஏழு வகைப்படும்
அடி
சீர்கள் தொடர்ச்சியாக அமைவது அடியாகும்
இரண்டு சீர்க்களால் ஆகிய அடிக்கு குறளடி என்று பெயர்
மூன்று சீர்களால் ஆகிய அடிக்கு சிந்தடி என்று பெயர்
நான்கு சீர்களால் ஆகிய அடிக்கு அளவடி என்று பெயர்
ஐந்து சீர்களால் ஆகிய அடிக்கு நெடிலடி என்று பெயர்
ஆறு சீர்களால் ஆகிய அடிக்கு கழிநெடிலடி என்று பெயர்
தொடை
எழுத்துகள் ஒன்றி வர தொடுப்பது தொடை ஆகும் செய்யுளுக்கு ஓசை நயத்தை கொடுப்பவை தொடை ஆகும் இவை எதுகைத்தொடை , மோனைத்தொடை, முரண்தொடை, இயைபுதொடை, அளபெடைத்தொடை என ஐந்து வகைப்படும்
அன்புள்ள நண்பர்களே …
யாப்பு என்பது ஒரு கடல் அதில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் எனில் யாப்பின் உறுப்புகளுக்கு செய்யுள்களுடன் விளக்கமளிக்க வேண்டும் எனவே யாப்பின் உறுப்புகள் பற்றி ஒரு தொடர் பதிவு இடலாம் என கருதியுள்ளேன் இதற்கு உங்களின் ஆதாரவு மிக மிக அவசியம் மேலும் உங்களின் மேலான கருத்துகளை எதிர் நோக்குகிறேன்
//எனவே யாப்பின் உறுப்புகள் பற்றி ஒரு தொடர் பதிவு இடலாம் என கருதியுள்ளேன்//
ஆசிரியரே! காத்திருக்கிறேன்! வகுப்பு ஆரம்பியுங்க! :-)
It will very useful for TNPSC exam candidates.
nagu.
www.tngovernmentjobs.in
super Please do it quickly.
All Messages are very useful.And Help to TNPSC Exam preparation. Thank u.
நன்றி மிகவும் எளிமையாக உள்ளது புரித்து கொள்ள.... மிக்க நன்றி