ஞாயிறு, 9 அக்டோபர், 2011

அரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD

,

தமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாளர்களும் பெற்றோர்களும் தற்போது  தவிக்க ஆரம்பித்து விட்டனர் . இதற்கு மிக முக்கிய காரணம் பள்ளி மாணவர்களிடையே  வேகமாக பரவ ஆரம்பித்து இருக்கும் 50 ரூபாய் ஆபச DVD தான் மிக முக்கிய காரணம்
ஒரு காலத்தில் ஆபசபடங்களை காணுவது என்பது குதிரை கொம்பு ஆனால் கணிப்பொறியும் இணையமும் கை கோர்த பிறகு ஆபச படங்களை காணுவது எளிதானது மொபைலும் மெமரி கார்டும் கைகோர்த பிறகு கதையே மாறிவிட்டது . இந்நிலையில்  இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு அரசு லேப்டாப்பில் கோலோச்சப்போகிறது 50 ரூபாய் ஆபச DVD
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச்சேர்ந்த மாணவ மாணவியர் சேலம் மற்றும் நாமக்கல்லில் உள்ள  தனியார் பள்ளிகளில் அதிக அளவில் பயின்று கொண்டு உள்ளனர்  . இம்மாணவர்களை குறி வைத்து ஆபச DVD தயாரிக்கும் கும்பல் ஒன்று 50 ரூபாயில் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆபச குறும்படங்கள்  அடங்கிய டிவிடிகளை விற்பனைக்கு விட்டுள்ளது . விற்பனையோ சக்கை போடு போடுகிறது  மேலும் தமிழகாம் முழுவதும் காவல் துறையின் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு கனஜோராக கல்ல கட்ட காத்து இருக்கிறது  இக்கும்பல் .
ஒரு தனியார் பள்ளியில் சில மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து கும்பலாக ஆபச வீடியோக்களை மொபைலில் பார்த்துள்ளனர் இதை அறிந்த பள்ளி நிர்வாகம் அவர்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்துள்ளது சில நிமிட சந்தோஷத்திற்காக விட்டில் பூச்சிகளைப்போல் வாழ்கையை தொலைத்துள்ளனர்  அந்த மாணவ மாணவியர் .
அரசு லேப்டாப் எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு தலைவலி அரசு லேப்டப்பில் இணைய  இணைப்பு கொடுத்து விட்டால் விடலைகள் யாருமற்ற  தனிமையை பயன்படுத்திக்கொண்டு  சாட்டிங்கில் ஆரம்பித்து  ஆபச வீடியோக்களை டவுன்லோடிங் செய்வது வரை சும்மா புகுந்து  விளையாட ஆரம்பித்து விடுவார்கள் .
அரசு கொண்டுவந்த மிக உயரிய திட்டம் மிக மிக மோசமான பின் விளைவுகளை  சமுதாயத்தில் ஏற்படுத்தி விடும்
நமது மாணவச்செல்வங்கள்  ஆபச படு குழியில் விழாமலிருக்க கல்வியாளர்கள் தரும் பரிந்துரைகள்

* இலவச லேப்டாப் பதினோறாம் வகுப்பு சேரும் மாணவ மாணவியருக்கு இலவசமாக தரும் போது அதை வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க கூடாது . பள்ளியிலேயே இலவச லேப்டாப் இருக்க வேண்டும் +2 முடிக்கும் போது வீட்டுக்கு எடுத்து சென்றுவிடலாம் என திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

* பெற்றோர்களை அழைத்து மாணவர்களின் லோப்டப்  செயல்பாடுகளை கண்காணிக்கச்செய்ய வேண்டும்

* தகுந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி போதனை செய்யப்பட வேண்டும்

* மாணவர்களுக்கு  ஒழுக்க கல்வியை போதிக்கும் விழுமக்கல்வி முறை பரவலாக்கப்பட வேண்டும்

* காவல் துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் லேப்டாப் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தவறான பாலியல் வீடியோக்கள் லேப்டாப்பில்  இருப்பது அல்லது டெலிட் செய்தது  கண்டு பிடிக்கப்பட்டால் லேப்டாப் பறிமுதல் செய்யப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்

* வீடியோ ஷோரூம்கள் மற்றும் மொபைல் ஷாப்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்  ஆபச டிவிடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் மிக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

* பள்ளி மாணவர்களை தவிர்த்து  கல்லூரி மாணவ , மாணவியருக்கு  மட்டும் இலவச லேப்டாப் கொடுத்தால் வயது முதிர்ச்சியின் காரணமாக ஆக்கச்செயல்பாடுகளுக்கு மட்டும் பாயன்படுத்துவர்.

5 கருத்துகள் to “அரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD”

 • 10 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:52
  MUTHARASU says:

  தாங்கள் கூறுவது உண்மைதான். அது அணைத்து மாணவர்களுக்கும் பொருந்தாது. வேலி தாண்ட நினைப்பவர்களுக்கு வேலி போடுவது முறையா...? GPRS Mobile, Browsing center என ஏராளம். பெற்றவர்களும் ஆசிரியர்களும் தகுந்த விழிப்புடன் தங்கள் பிள்ளைகளை கையாள வேண்டும். பள்ளிகளில் ஏற்கனவே லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது.

  போதுமான முன்னறிவு பெற்றுவிட்டனர். இப்பொழுது தகுந்த வழிகாட்டல் தேவை. நாளைய உலகம் மாணவர் கையில். இருப்பினும் எச்சரிக்கையுடன் கையாள வருமுன் தடுப்போம் எனும் அடிப்படையில் தாங்கள் கூறியிருப்பதை அனைவரும் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். மாணவ சமுதாயத்தை மீட்க இப்பதிவு ஓர் எச்சரிக்கை மணி.
  பகிர்வுக்கு நன்றி.

 • 10 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:43

  உண்மைதான் நண்பரே நல்ல விளைநிலத்தில் சில சமயம் வேர்விடும் விஷ செடிகளை பிடுங்காவிட்டால் விளைச்சல் பாதிக்குமல்லவா ? எனது பதிவு மூலம் இப்படியும் ஓர் அபாயம் உண்டு அதற்கான தடுப்புமுறைகள் என்ன என்பதையும் கண்டுபிடித்து விட்டால் வருங்கால இந்தியா வல்லரசாக மட்டுமில்லாமல் நல்லரசாகவும் உருவெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை தங்களின் வருகைகளுக்கும் மதிப்பு மிக்க கருத்துகளுக்கும் நன்றிகள் கணக்கதிகார கதாநாயகனே

 • 9 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 11:26
  பெயரில்லா says:

  "பள்ளி மாணவர்களை தவிர்த்து கல்லூரி மாணவ , மாணவியருக்கு மட்டும் இலவச லேப்டாப் கொடுத்தால் வயது முதிர்ச்சியின் காரணமாக ஆக்கச்செயல்பாடுகளுக்கு மட்டும் பாயன்படுத்துவர்"

  உங்களை நினைச்சா பாவமா இருக்கு சார். நீங்க இவ்ளோ பெரிய அப்பாவியா?

 • 5 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 3:17
  aa. ira. victor johnson says:

  aakkap poorvamaana sinthanaiyai veliyittirukkum ungalukku nantri.

 • 21 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 7:42
  Selvadurai says:

  இலவச லேப்டாப் தேவையற்றது. அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியிலேயே நல்ல கம்ப்யூட்டர் ஹால் ஒன்று நிறுவி (இணைய இணைப்புடன்) தினமும் ஒரு மணி நேரம் தக்க மேற்பார்வையுடன் இணைய உலவுதடலுடன் வசதி செய்து கொடுத்தால் போதுமானது.
  செல்வதுரை

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates