நம்மில் பலர் ஜில்லுனு கூல்டிரிங்ஸை குடித்தால் உடல் சூடு குறைஞ்சிடும்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கோம் உண்மையில் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் உடல் வெப்பம் குறையாது.
மனிதனின் சராசரி உடல் வெப்பம் 36.8 டிகிரி செல்சியஸ் ஆகும் . 60 கிலோ எடை கொண்ட ஒருவர் கூல்டிரிங்ஸ் குடிப்பதாக கொள்வோம் இதனால் அவரின் உடல் வெப்பம் 0.1 டிகிரி செல்சியஸ் மட்டுமே குறையும் . உயிரோட்டமுள்ள மனிதனுக்கு இது போல சராசரி கணக்குகள் போடக்கூடாது . வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலில் வறட்சி ஏற்பட்டு தாகம் ஏற்படுகிறது ஆகவே கூல்டிரிங்ஸ் குடிப்பதால் நமது தாகம் தணிக்கப்படுகிறது மேலும் கூல்டிரிங்ஸ்ஸில் உள்ள சர்கரை ஆற்றலாக எரிக்கப்படுவதால் உடலுக்கு சிறுது புத்துணர்வு போன்ற உணர்வு கிடைக்கிறது வேறு எந்த பயன்களும் கிடைக்கப்போவது இல்லை கூல்டிரிங்ஸில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாதா வேதிபொருள்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதுதான் நிதர்சனமான உண்மை.
விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள் குடிக்கிறார்கள் சினிமா கதாநாயகன்கள் குடிகிறார்கள் அதுபோல நாமும் கூல்டிரிங்ஸ் குடித்தால் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறோம் என்று அர்தம் எனவே வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு , தர்பூஸ் பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்