Tuesday 25 October 2011

கிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்

,
புத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக  இருந்துவரும் வழக்கம் .தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்விரும்பப்படுவது மூன்று வகைகள் ஆகும்
1.கிரீன் டீ
2.ஊலாங்
3.பிளாக் டீ
கிரீன் டீகேமிலியா சைனன்ஸிஸ்  எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது .கிரீன் டீயில் ஆறுவிதமான பாலிஃபீனால்கள் உள்ளன அவைகள்
1.எபிகேட்சின்
2.கேலோகேட்சின்
3.கேட்சின்
4.எபிகேட்சின் கேலட்
5.எபிகேட்சின்கேலோகேட்சின்
6.எபிகேலோ கேட்சின்
மேலும் கேஃபின் , தியோபுரோமின் , தியாஃபிலின் போன்ற ஆல்கலாய்டுகளும் உள்ளன  இவைகள் மனித உடலுக்கு புத்துணர்சி தருவது மட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் சஞ்சீவிகளாக உள்ளன . கிரீன் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறியியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்படுவது ஆகும்  .
விஞ்ஞானிகள் பரிந்துரைத்த சில பரிந்துரைகள்
வாழ்நாளை அதிகப்படுத்த
கிரீன் டீயில் அதிகமாக காணாப்படும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையும் ஆரோக்கியத்தையும் நீடிக்கச்செய்கிறது
 உடல் எடையை குறைக்க
உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலினை சமச்சீராக பராமரிக்கிறது
நினைவுத்திறன் அதிகப்படுத்த
கிரீன் டீயில் உள்ள எபிகேலோ கேட்சின்  மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவற்றலை பெருக்குகிறது
புற்று நோய்களுடன் போராடுகிறது
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்று நோய்செல்களை வளரவிடாமல் அழிக்கிறது தீங்கிழைக்கும் என்சைம்களின் வளர்ச்சியை தடுத்து ரத்தப்புபுற்று, நுரையீரல் புற்று, தொண்டைபுற்று, வயிறு,குடல்,ஈரல் புற்று மற்றும் மார்கப்புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது
சர்கரை நோயை குறைக்க
கிரீன் டீயில் உள்ள தியோபிளவின்கள் இரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து குளுகோஸ் வினையை ஊக்கப்படுத்துகிறது
மன அமைதிக்கு
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் மன இறுக்கத்தை போக்கி மூளையில் ஆல்பா அலைகளை தூண்டி மனதுக்கு அமைதியை தருகிறது
தோல் பாதுகாப்பு
முகப்பரு, வறன்ட சருமம், சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது
இரத்த அழுத்தம், பக்கவாதம் அல்சைமர்  போன்றவற்றை தவிர்க்கிறது  எலும்புகள் பலமடையவும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது
டிஸ்கி – 1
உண்மைதாங்க நானும் ஆறு மாதமாய் கிரீன் டீ குடிக்கறேன் எனது உடலின் ஆரோக்கிய மாற்றங்கள் எனக்கே புரிகிறது அதனாலதான் இந்த பதிவையே போட்டேன் இந்த பதிவை படிச்சுட்டு நீங்களும் கிரீன் டீ குடிக்க ஆரம்பிச்சு உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஆரம்பிச்சா அதுதான்  இந்த  பதிவின் உண்மையான வெற்றி  . வாழ்க வளமுடன்






6 comments to “கிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்”

  • 25 October 2011 at 09:36

    கிரீன் டீயின் மகத்துவத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் பயன்படுத்துவார்கள். சர்க்கரையைக்கொட்டி குடிப்பார்கள். அருமையான தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.

  • 25 October 2011 at 11:44

    //கோவை எம் தங்கவேல் சொன்னது…
    கிரீன் டீயின் மகத்துவத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் பயன்படுத்துவார்கள். சர்க்கரையைக்கொட்டி குடிப்பார்கள். அருமையான தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.// நான் கிரீன் டீ பருகி வருகிறேன்.இதனால் உடல் மாற்றங்கள் உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை.தாயத்து நம்பிக்கை மாதிரியான நம்பிக்கையாக கூட சிலருக்கு நம்பிக்கையினால் கூட நன்மைகள் கூடலாம்:)சர்க்கரை கொட்டாமல் வெந்நீரில் அருந்துவதுதான் சிறந்தது என நினைக்கிறேன்.

  • 25 October 2011 at 13:18

    கிரீன் டீ அப்படி ஒன்னு இருக்கா ...

  • 31 October 2011 at 22:47
    Guru says:

    வாசிப்புக்கும் நேசிப்புக்கும் நன்றி அன்பு உள்ளங்களே

  • 8 September 2012 at 21:11
    Anonymous says:

    எந்த பிராண்டு கிரீன் டீ நல்லது ? எங்கே கிடைக்கும்னு சொல்லுங்க

  • 22 November 2012 at 02:19
    THIRUMAL says:

    எந்த பிராண்டு கிரீன் டீ நல்லது ? எங்கே கிடைக்கும்னு சொல்லுங்க

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates