சனி, 7 ஜனவரி, 2012

குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் பூக்கள், கனிகள் தோன்றுவது ஏன் ?

,

மனிதர்களின் பாலின பண்புகளுக்கு காரணமான ஹார்மோன்களை போல தாவரங்களுக்கும் ஹார்மோன்கள் உள்ளான.இந்த ஹார்மோன்கள்தான் குறிப்பிட்ட பருவத்தில் பூக்கள், கனிகள் தோன்றுவிக்கிறது. ஆக்ஸின்கள், ஜிப்ரலின்கள் , சைடோகைனின் புளோரிஜென் போன்றவை குறிப்பிட்த்தக்க தாவர வளர்ச்சி ஹார்மோன் ஆகும் .

தாவர வளர்ச்சி ஹார்மோன் என்பது தாவரங்களில் மிக குறைந்த அளவில் செயல்புரியும் அங்ககப்பொருள்கள் ஆகும் .பொதுவாக தாவர ஹார்மோன்கள் ஒரு பகுதியில் உற்பத்தியாகி மற்றொரு பகுதிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து அங்கு குறிப்பிட்ட உயிர்வேதிச்செயல்கள் , வாழ்வியல் செயல்பாடுகள்  மற்றும் புறத்தோற்ற அமைப்பின் பல விளைவுகளை சீராக்கும் அல்லது கட்டுப்படுத்தும் செயல்களை செய்கின்றன.
ஆக்ஸின்கள் வளர்ச்சியை தூண்டுகின்றன ,
ஜிப்ரலின்கள் வேர்கள், தண்டுத்தொகுதி ,இலைகள், கனிகள் போன்றவற்றின் திறனை தூண்டுகின்றன ,
புளோரிஜென்கள் பூக்கள் பூப்பதை ஊக்குவிக்கின்றன.

2 கருத்துகள் to “குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் பூக்கள், கனிகள் தோன்றுவது ஏன் ?”

  • 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:09

    அறிவியல் தகவல்களை தருகிறீர்கள்

    நன்றி நண்பா ....

  • 17 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 6:01

    தங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக அறிவித்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு வழங்கியிருக்கிறேன். எனது தளத்தில் வந்து பாருங்கள்.
    http://kavipriyanletters.blogspot.in/

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates