Sunday, 2 October 2011

கலைடாஸ்கோப் செய்வது எப்படி

,

கலைடாஸ்கோப் எனும் சின்னஞ்சிறு கருவி உங்களின் குழந்தைளின் படைப்பாற்றலை தூண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ? 


கலைடாஸ்கோப் கி.பி 1800 ஆண்டுவாக்கிலே  கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது  கலைடாஸ்கோப் எளிய கணித தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது  . கலைடாஸ்கோப்பில் உள்ள மூன்று பட்டை வடிவ கண்ணாடிகளும் 45 கோண அளவில் அமைக்கப்பட்டுள்ளது . கலைடாஸ்கோப்பில் ஒரு பொருள் வைக்கப்பட்டால் அப்பொருளின் எட்டு மாய பிம்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன மேலும் கலைடாஸ்கோப்பினை உருட்டும் போது பல்வேறு வடிவிலான வடிவங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன பழங்காலத்தில் விளையாட்டு கருவியாகவும் , நெசவுத்தொழிலில் பல்வேறு வண்ண வடிவங்கள் உருவாக்கவும் பயன்பட்டவை கலைடாஸ்கோப் ஆகும் .

செய்யும் முறை

கலைடாஸ்கோப் அமைப்பது மிக மிக எளிது ஒரே அளவுள்ளா மூன்று பட்டை வடிவ கண்ணாடிகளை எடுத்துக்கொள்ளுங்கள் . ( பட்டைவடிவ கண்ணாடி தேவை எனில் போட்டோபிரேம் போடும் கடைகளில் கேட்டு பாருங்கள் அவர்களிடம் அறுபட்டவைகளில் பயன்படாத பட்டை வடிவ கண்ணாடிகள் ஏராளமாக இருக்கும்)  அவைகளை முக்கோணவடிவில் பொருந்துமாறு அதாவது கீழே ஒரு கண்ணாடி இருபுறமும் இரண்டு கண்ணாடி வையுங்கள் உங்களுக்கு முக்கோண வடிவம் கிடைக்கும்
இருபுறமும் திறப்புகள் இருக்கும் ஒரு திறப்பை ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக்காகிதத்தால் மறைத்து கட்டுங்கள் பின்பு மேற்புறத்தை ஒளி ஊடுருவாதா காகிதம் கொண்டு சுற்றுங்கள் கடைசியாக திறந்து இருக்கும் திறப்பு வழியாக சிறு சிறு மணிகளையோ அல்லது உடைந்த கண்ணாடி துண்டுகளையோ உள்ளே போடுங்கள் பின்பு கலைடாஸ்கோப்பினை மெல்ல சுழற்றுங்கள் உங்கள் கற்பனைக்கே எட்டாத வண்ண வடிவங்கள் தோன்றும் .
இந்த எளிய கலைடாஸ்கோப்பினை கடைகளில் இருந்து வாங்கி உங்களின் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள் . பட்டை வடிவ கண்ணாடிகளை வாங்கி உங்களின் குழந்தைகளுக்கு செய்ய சொல்லி கொடுங்கள் அவர்களாகவே செய்யட்டும் அவர்களாகவே வண்ண வடிவங்களை உருவாக்கட்டும்  இவ்வாறு சிறு கருவிகள் செய்து அதை பயன்படுத்தி பார்க்கும் போது அவர்களின் நுண்ணறிவு கூர் தீட்டப்படுவதோடு அறிவியல் ஆர்வம் பல மடங்கு பெருகும் .

2 comments to “கலைடாஸ்கோப் செய்வது எப்படி”

  • 3 October 2011 at 16:15

    நல்ல தகவல்களை அள்ளி கொடுக்கிறீர். எனவே வாழ்த்துக்கள் நண்பா.... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.... தங்கள் வலைத்தளம் அழகாக உள்ளது.

  • 21 April 2012 at 08:44
    Rathna says:

    Good Effort ...... Rathinavel

Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates