உலகம் முழுவதும் நேத்தை கணக்கிட ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை கிரீன்விச் முறை . இதன் மூலம் நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
பூமி தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 24 மணிநேரம் (1440 நிமிடங்கள் ) ஆகிறது அதாவது சூரிய ஒளி பூமியில் ஒரு இடத்தில் பட்டு மீண்டும் அதே இடத்தில் பட ஒரு நாள் ஆகிறது பூமியின் மேல் வடக்கு தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகளே தீர்க்கரேகைகள் . இங்கிலாந்து நாட்டில் கிரீன்விச் எனுமிடத்தை 0 தீர்க்க ரேகையாக கொண்டும் அதற்கு கிழக்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் மேற்க்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் ஆக மொத்தம் 360 தீர்க்கரேகைகளும் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டது .
பூமி உருண்டையின் மேல் உள்ள 360 தீர்க்கரேகைகளின் மீதும் ஒளிபட 24 மணிநேரம் அல்லது 1440 நிடங்கள் ஆகின்றது
360 தீர்க்கரேகைக்கு =1440 நிமிடம் எனில் ஒரு தீர்க்கரேகைக்கு
1440*1/360= 4 நிமிடங்கள்
சூரிய ஒளி ஒரு தீர்க்கரேகையை கடக்க நான்குநிமிடங்கள் ஆகின்றது 15 தீர்க்கரேகைகளை கடக்க 15*4=60 நிமிடங்கள் ஆகின்றது இதன் அடிப்படையில் ஒரு ஊர் எந்த தீர்க்கரேகையில் அமைந்துள்ளது என்பதை வைத்து அந்த ஊரின் நேரம் கணக்கிடப்படுகிறது ஒரு ஊர் 45 தீர்க்கரேகையில் இருந்தால் 0 தீர்கரேகையில் இருந்து அந்த ஊரை சூரிய ஒளி கடக்க ஆகும் நேரம் 45*4=180 நிமிடங்கள் அதாவது மூன்று மணிகள் ஆகும் அந்த ஊர் தீர்க்க ரேகையின் கிழக்கு பக்கம் இருந்தால் 12 மணியை கூட்டிக்கொள்ள வேண்டும் , மேற்க்குபக்கம் இருந்தால் 12 மணியை கழித்துக்கொள்ள வேண்டும்.
இந்தியா கிழக்கு மேற்காக 68 கிழக்கு தீர்க்கரேகையில் இருந்து 97 கிழக்கு தீர்க்கரேகை வரை பரவியுள்ளது ஒவ்வொரு தீர்க்கரேகைக்கும் நேரம் கணக்கிட்டால் இந்தியாவில் வட , தென் மாநிலங்களில் வேறு வேறு நேரம் கிடைக்கும் அதனால் நேர குழப்பம் ஏற்படும் எனவே இந்தியாவில் அலகாபாத் அருகே செல்லும் 82 1/2 தீர்க்கரேகையை மத்தியதீர்க்கரேகையாக கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரே நேர அளவு கணக்கிடப்படுகிறது
இந்தியா 82 1/2 கிழக்கு தீர்க்கரேகையில் உள்ளதால்
82 ½*4 =330 நிமிடங்கள் அதாவது 5 மணி 30 நிமிடங்களை கிரீன்விச்நேரத்துடன் கூட்டிக்கொள்ள வேண்டும்
என்ன நண்பர்களே நேரத்தை இப்படித்தான் வகுத்து தந்து இருக்கின்றனர் விஞ்ஞானிகள் ஆனால் நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என வகுத்து செயல்பட்டால் தான் வாழ்வில் உயரமுடியும்
அனைவரும் அறிவேண்டிய ஒன்று ..
நல்லா பதிவு நண்பரே