1. நல்லவைகளை கூட்டிக்கொள்ளுங்கள்(கூட்டல்)
2. தீயவைகளை கழித்துக்கொள்ளுங்கள்(கழித்தல்)
3. அறிவை பெருக்கிக்கொள்ளுங்கள்(பெருக்கல்)
4. நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்(வகுத்தல்)
5. இன்பங்களையும் துன்பங்களையும் சமமாக கருதுங்கள்(சமம்)
6. செலவை குறைத்து வரவை பெருக்குங்கள்(லெஸ்தன்)
7. அன்பை பெருக்கி ஆணவத்தை குறையுங்கள்(கிரேட்டர்தன்)
8. வாழ்க்கை முடிவுள்ளது எனவே முடிந்தவரை மற்றவர்க்கு உதவுங்கள் ( அடைப்புக்குறி )
9. கடுமையான உழைப்பினால் வளர்பிறைபோல வளருங்கள் (சம்மேஷன்)
10. பிறரை மட்டுமே நம்பி வாழும் வாழ்வு நிலையற்றது ( பிளஸ் ஆர் மைனஸ் )
கணிதம் மட்டுமல்ல நமது முன்னோர் கூறும் நல்லுரைகள் எல்லாமே இவைதான்.விட்டுக் கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் என்று இரண்டாகவும் கூறலாம். பாதிக்கப்படும்பொழுது ஒரு கண நேரம் யோசித்தால் என்று ஒரே சிந்தனையாகவும் கூறலாம். எப்படியும் அருள் கூறியதை அப்படியே rssairam.blogspot.com எனது வலைப்பூவில் அப்படியே பதிவு செய்து விட்டேன். நல்லது தேவையான இடங்களில் ஒற்றேழுத்துக்களை மட்டுமே சேர்த்துள்ளேன்.மேலும் நான்கு பேர் கண்களில் படட்டுமே என்பதற்காக! நன்றி. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் . ஒற்றெழுத்துகளா / ஒற்றெழுத்துக்களா என்பதில் மட்டும்! கருத்துகள்/ கருத்த்துக்கள் என்பது போன்று.