Friday, 13 April 2012

முகம் பொலிவு பெற மூலிகை ப்ளீச் செய்யும் முறைகள்

,
வீட்டில் கிடைக்கும் எளிய மூலிகை பொருட்களின் மூலம் மூலிகை ப்ளீச் நாமே தயாரிக்கலாம் இது எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது . கடைகளில் கிடைக்கும் விதவிதமான கிரீம்களை வாங்கி பூசுவதன் மூலம்  நமது முக அழகை நாம் கெடுத்துக்கொள்கிறோம் இந்த மூலிகை ப்ளீச்சை ஆண்களும் பயன்படுத்தலாம்
மூலிகை ப்ளீச்  செய்ய தேவையான பொருட்கள்
தக்காளி -1
ஆரஞ்சு-1
பப்பாளி -1 துண்டு
வாழைப்பழம் -1
வெள்ளரிக்காய்-1 துண்டு
கேரட் -1  
எழுமிச்சை - 1
முள்தானி மட்டி பவுடர் -1 பாக்கெட்
( பேன்ஸி ஸ்டோர்களில் எளிதாக கிடைக்கும் )

செய்முறை
தக்காளி ,ஆரஞ்சு,பப்பாளி,வாழைப்பழம்,வெள்ளரிக்காய்,கேரட் , எழுமிச்சை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து அதில் முள்தானி மட்டி பவுடர் சேர்த்து கலக்கவும் . இந்த கலவையை முகம் முழுவதும் பூசி ஒரு அரை மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும் .  இதை ஒரு சில வாரங்கள்  தொடர்ந்து  செய்யவும் உங்களின் முகம் பொலிவாக மாறும் .
உடனடி ப்ளீச் செய்ய சில குறிப்புகள்.
* உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து  முகத்தில் பூசி 15 நிமிடங்கள் பின்பு கழுவினால், முகம் ப்ளீச் செய்யப்பட்டு  புத்துணர்ச்சியாக காணப்படும்

* வெள்ளரிச்சாறு , எழுமிச்சைச் சாறு  இரண்டையும்  கலந்து பூசி 15  நிமிடங்கள் பின்பு கழுவினால் , முகம் ப்ளீச் செய்யப்பட்டு  புத்துணர்ச்சியாக காணப்படும்

2 comments to “முகம் பொலிவு பெற மூலிகை ப்ளீச் செய்யும் முறைகள்”

  • 19 April 2012 at 16:32

    ஆகா முகத்தை அழகு படுத்த எளிமையான குறிப்புகள் ..

    பகிர்வுக்கு நன்றி சகோ

  • 24 March 2013 at 17:39
    Guru says:

    Thank u Stalin

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates