ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்

,
யுரேகா ! யுரேகா என்ற வார்தையின் மூலம்  வரலாற்றின்  சாதனை பக்கத்தில் பதிவான ஆர்கிமிடிஸ் கணிதம் , இயற்பியல் , வானியல் போன்றவற்றிற்கு சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார். கிரேக்க நாட்டின் சிசிலியிலுள்ள ஸைரக்யூஸ் என்னும்  நகரில் கி.மு 287 ல் பிறந்தார் ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்  என்பதை  தெரிந்து கொள்ளும் முன் அவரின் சாதனைகள்  சிலவற்றை பார்போம்
கணித சாதனைகள்
 பை(π) என்பதின்  மதிப்பை துல்லியமாக கண்டறிந்தார்  இந்த மதிப்பு மூலம் வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு போன்றவற்றை கண்டுபிடித்தார் .மேலும் கோளத்தின் மேற்பரப்பிற்கும் கனஅளவிற்கும்  உள்ள தொடர்பையும் கண்டறிந்தார் . இன்றும் வட்டம், கோளம், உருளை போன்றவற்றின் கனஅளவு, பரப்பளவை கண்டுபிடிக்க பை மதிப்பைதான்  நாம் பயன்படுத்துகிறோம்
யூக்ளிட் கண்டுபிடித்த ஜியோமிதி எனும் வடிவ கணிதத்தை நன்கு ஆராய்ந்து பல தேற்றங்களையும் தீர்வுகளையும் கூறி ஜியோமிதியை அடுத்த அடுத்த படிநிலைக்கு  உயர்த்தினார் .  கணிதம் பற்றிய பல நூல்
இயற்பியல்  சாதனைகள்
 ஒரு திடப்பொருள் நீரில் மூழ்கும்போது அதனால் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு அந்த திடப்பொருளின் எடைக்கு சமமாக இருக்கும் என்ற ஆர்கிமிடிஸின் மிதக்கும் விதி அடிப்டையில் தான்  இன்றைய  நவீன கப்பல் போக்குவரத்து செயல்படுகிறது .
நிற்பதற்கு ஒரு இடத்தையும் ஒரு இரும்புக்கம்பியும்  தந்தால் பூமியையே புரட்டிக்காட்டுவேன் என்று  நெம்புகோல் தத்துவத்தை கூறினார் .இந்த நெம்புகோல் தத்துவ அடிப்படையில் போர்க்கருவிகள் பலவற்றையும்  கண்டுபிடித்தார் 
ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்  என்னவென்று அறிய வந்தால்  பள்ளிக்கூடத்தில் செல்லித்தந்ததை எங்களுக்கு மீண்டும்
 சொல்லி தந்து கலாய்க்கிறீங்களே  அப்படினு சொல்றீங்களா ?  
சரி சரி வாங்க ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம் பற்றி  தெரிந்து கொள்வோம் .
இரண்டாம் நூற்றான்டில் இத்தாலியில் உள்ள சிரகாஸ் நாட்டை ஆர்கிமிடிஸின் உயரிய நண்பர் சிரகாஸ் ஆண்டு வந்தார் அப்போது சிரகாஸ் மீது  ரோமானியர்கள் போர்தொடுத்தனர் ரோமானியர்களின் படை பலமோ மிகப்பெரியது . சிரகாஸினுடைய படையோ சிறியது  வலிமை வாய்ந்த  ரோமானிய படைகளை வீழ்த்த ஆர்கிமிடிஸ் மிகச்சிறப்பான போர் யுத்தியை கண்டுபிடித்தார் பரவளைய வடிவில் மிகப்பெரிய  கண்ணாடிகளை நிறுவினார் அதன் மீது  சூரிய  ஒளியை பட வைத்து எதிரொளிக்கும்  சூரிய ஒளியை  ரோமானியர்களின்  கப்பல் மீது குவியச்செய்தார்  இதனால் ரோமானியர்களின்  கப்பல்கள்  பற்றி எரிந்தது ரோமானியர்களுக்கு பெருத்தசேதம் ஏற்பட்டது  . கண்ணாடிகளை பயன்படுத்தி  ரோமானியர்களின் படைகளை நடுங்கச்செய்த  ஆர்கிமிடிஸின் இச்சாதனை வரலாற்றின் பக்கங்களில்  கண்ணாடி போர் யுத்தம் என்று அழைக்கப்படுகிறது . ஆர்கிமிடிஸ் தன்னுடைய 75 வயதில்  ரோமானிய படை வீரனால் கொல்லப்பட்டார் . ஆர்கிமிடிஸ் பற்றி  மேலும் அறிய  ஒரு பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன்  பதிவிட்டு உள்ளேன்  பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்

0 கருத்துகள் to “ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates