1. இலவசம் என்ற காரணத்திற்காக கிடைக்கும் எல்ல மென்பொருள்களையும் டவுன்லோடிங் செய்யாதீர்கள் தேவையற்ற மென்பொருள்கள் உங்கள் கணினியின் வேகத்தை குறைத்து விடும்.
2. ஒரு மென்பொருளை ஒரு முறைதான் பயன்படுத்தவேண்டும் எனும் சூழ்நிலையில் அந்த மென்பொருளை டவுன்லோடிங் செய்வதைவிட ஆன்லைனில் அந்த வேலையை செய்துகொள்ளுங்கள் .
3. ஒரு தளத்தில் இருந்து மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் அந்த மென்பொருளை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துள்ளனர் அதற்கு யாரவது கருத்து சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள் குறிப்பாக அதிகம் டவுன்லோடிங் செய்யப்பட்ட மென்பொருளை டவுன்லோடிங் செய்யுங்கள்
4. நீங்கள் மென்பொருள் டவுன்லோடிங் செய்யும் தளம் வைரஸ் , மால்வேர் போன்ற தாக்குதல் இல்லதவையா என உறுதி செய்துகொள்ளுங்கள்
5. ஒரே தேவைக்கு பல மென்பொருள்கள் பயன்படுத்துவதை தவிருங்கள் உதாரணமாக player , cleaner , போட்டோவை மாற்ற செயல்பாடுகளுக்கு பல மென்பொருளை பயன்படுத்தாதீர்கள்
6. எந்த ஒரு மென்பொருளையும் அதன் தயாரிப்பு தளத்தில் இருந்து டவுன்லோடிங் செய்வதை தவிருங்கள் ஏன் எனில் அவர்களின் மென்பொருளை அவர்கள் உயர்த்திதான் சொல்வார்கள்
7. கேம்ஸ் போன்றவற்றை டவுன்லோடிங் செய்யும் போது மிக கவனம் தேவை ஏன் எனில் சில கேம்ஸ்வுடன் இணைந்து வரும் மால்வேர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு எண் முக்கியமான பாஸ்வேர்டு போன்றவைகளை திருடி அதை தயாரித்தவருக்கு தெரியபடுத்திவிடும்
8. குறிப்பிட்ட தேவைக்கு உங்களின் நண்பர்கள் என்ன வகையான மென்பொருளை பயன்படுத்துகிறார்கள் அதனால் அவர்களுக்கு பயன் கிடைத்ததா எனக்கேட்டுபாருங்கள் அல்லது கூகுள் மூலம் அந்த மென்பொருளின் Review வை தேடி படித்துபார்த்து பின் டவுன்லோடிங் செய்யுங்கள்
அனைத்தும் பயனுள்ள குறிப்புகள்-அண்ணா
பகிர்வுக்கு நன்றி
தமிழ் மணம் 2
அனைத்துமே பயனுள்ள அவசியமான தகவல்கள்
கருத்துரைக்கு நன்றிகள் ஸ்டாலின் , சீனு