நானோ டெக்னலாஜி பற்றி வாத்தியார் சுஜாதா என்ன சொல்றானு முதல்ல பார்போம் நண்பர்களே “நானோ டெக்னலஜி என்பது மனிதனை சைன்ஸ்பிக்ஸனுக்கு அருகில் அழைத்து செல்லும் சாத்தியங்களை காட்டுகிறது .தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் பாக்டீரியாக்கள், தானகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள் , பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள் வயதாவதை தாமதப்படுத்தும் நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாக சொல்கிறார்கள் இதில் எது நிகழும் எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும் இந்த புதிய தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளா விட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் , நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள் . உலகம் நம்மை புறக்கணித்துவிட்டு எங்கே ஓடிபோய்விடும் “ நன்றி நானோடெக்னாலஜி – உயிர்மை பதிப்பக வெளியீடு
நண்பர்களே நானோ டெக்னாலஜி பற்றி விக்கிபீடியாவின் அறிமுகத்தையும் எனது முந்தைய பதிவுகளையும் படித்து பார்க்க கீழே உள்ள சுட்டிகளை இயக்கி படித்து பாருங்கள்
மேற்கண்ட சுட்டிகளின் மூலம் நானோ டெக்னாலஜி பற்றிய புரிதல்கள் கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன் வாருங்கள் நண்பர்களே இந்தியர் ஒருவர் நானோ டெக்னாலஜியில் செய்த அளப்பறிய சாதனையை தெரிந்து கொள்வோம் கேரளாவை சேர்ந்த அஜயன் என்ற விஞ்ஞானி பயோடெக்னாலஜியில் பயன்படும் கார்பன்நானோ டியூப்களை தயாரிக்க புதிய கருமையான உலோகத்தை கண்டுபிடித்துள்ளார்.
அருகில் உள்ள புகைப்படத்தில் அஜயன் தான் கண்டுபிடித்த கருப்பு உலோகத்தை கையில் பிடித்து உள்ளார் அருகில் அவரது ஆராய்ச்சி உதவியாளர் திரு Lijie Ci . இவர் கண்டுபிடித்த கருப்பு உலோகமானது 99.9 சதவீதம் ஒளியை உட்கவர்ந்து கொள்கிறது . இதன் மூலம் சூரிய ஆற்றலை மின் சக்தியாக மாற்றி பல சாதனைகளை செய்யமுடியும் தற்போது அமெரிக்காவின் Rice பல்கலைகலத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் அஜயன் நானோடெக்னாலஜியில் வியத்தகு சாதனைகளை படைக்க அவரை வாழ்துவோம்.