இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் கொள்கை சுதந்திரம் வழங்குவதே நவரத்தின தகுதி இந்திய அரசின் பப்பிளிக்என்டர்பிரைசஸ் துறையே இந்த நவரத்தின தகுதியை வழங்குகிறது இந்த தகுதியை பெறும் நிறுவனங்கள் 1000 கோடி ரூபாய் வரை அரசு அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ வெளிநாட்டிலோ எந்தவிதமான திட்டங்களிலும் முதலீடு செய்யலாம் மேலும் வெளிநாடுகளுடன் கூட்டுத்தொழில் தொடங்கலாம்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிகல் , பாரத்பெட்ரோலியம், கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் போன்ற பதினெட்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்தின தகுதியை பெற்று உள்ளன