Friday, 9 December 2011

நீங்கள் பயன்படுத்தும் வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் வரலாறு

,
மக்களின்  அன்றாட பயன்பாட்டிற்க்கு இருபதாம் நூற்றான்டு கொடுத்த அறிவியல் கொடை ஜிப்(Zip) எனப்படும் இழுப்பான் ஆகும்  இரண்டு துணிகளை  இணைக்க ஜிப் பயன்படுகிறது அறிவியல் மேலும் மேலும் வளர புதிய வகை ஜிப் கண்டுபிடிக்கப்பட்டது அதன்  பெயர் வெல்க்ரோ ஜிப் ஆகும் . இதில் ஒரு பக்கம்  குட்டி குட்டி வளையங்களுடனும் மறுபக்கம் பிளாஸ்டிக்கிலான கொக்கிகளும் உள்ளது  இரண்டையும் அழுத்தி இணைக்கும் போது ஒன்றுடன் ஒன்று சிக்கி கொள்கிறதுமேலும் அவற்றை இலுக்கும் போது பிரிந்து கொள்கிறது தற்போது கைப்பை , ஷூ , புத்தகப்பை , பைல்  என பல பொருள்களிலும்  இணைப்பானாக பயன்படுகிறது .

வெல்க்ரோ ஜிப் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு தற்செயலான நிகழ்ச்சி , ஸ்விஸ் நாட்டின் ஜார்ஜ் டி மெஸ்ட்ரால் என்ற பொறியாளர் தன்னுடைய செல்ல  நாயுடன் ஆல்ப்ஸ் மலையில் தன்னுடைய வழக்கமான  மலையேற்ற பயிற்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார் தன்னுடைய நாயின் உடம்பிலும் தன்னுடைய பேன்ட்-சட்டையிலும் விதை கொக்கிகள்  ஒட்டி இருப்பதை கண்டார் அவற்றை  நுண்னோக்கி மூலம் ஆராய்ந்தார் . அவரின் மூளையில் திடீரென மின்னல் அடித்தது ஜிப்புக்கு போட்டியாக  பயன்படுத்த அதை விட எளிதான வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் அடிப்படையை கண்டுகொண்டார்.

விதைகொக்கியை நுண்ணோக்கி மூலம் ஆராயும் போது குட்டி குட்டி வளையங்கள் ஒரு பக்கமும் மறுபக்கம் கொக்கிகள் இருப்பதும் கண்டுகொண்டார் இந்த கண்டுபிடிப்பை தன்னுடைய நண்பர்களிடம் சொன்ன போது ஜார்ஜ் டி மெஸ்ட்ராலை பயங்கரமாக கிண்டலடித்தார்கள் ஆனால் ஜார்ஜ் டி மெஸ்ட்ரால் மனம் தளரவில்லை  8 வருட கடின முயற்ச்சிக்கு பின் வெல்க்ரோ ஜிப்பினை கண்டுபிடித்தார்  உலகப்புகழ் அடைந்தார்
மக்களின் அன்றாட பயன்பாட்டில் வெல்க்ரோ ஜிப் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன . இராணுவத்தில் சைலன்ட் வெல்க்ரோ ஜிப்கள் பயன்படுத்தப்படுகிறது





டிஸ்கி
அன்புள்ள சகோ ஸ்டாலின் மீண்டும் பதிவிட ஆரம்பித்துவிட்டேன் கனிவான விசாரிப்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

2 comments to “நீங்கள் பயன்படுத்தும் வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் வரலாறு”

  • 11 December 2011 at 07:00

    really good news.. thanks to share... please read my tamil kavithaiga in www.rishvan.com

  • 11 December 2011 at 13:36

    புதுபுது வியக்கதக்க விடயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் தொடருங்கள் ..

    பகிர்வு-க்கு நன்றி நண்பா

Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates