Wednesday, 26 December 2012

ஆன்ட்ராய்ட் OS இலவச பதிவிறக்கம் - ANDROID OS Free Download

,
    நண்பர்களே BSNL விலை குறைந்த டேபிளட்களை வெளியிட்டாலும் அவற்றில் சில டேபிளட்களில் ஆன்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் தீடீரென்று ஹேங் ஆகிவிடுகிறது . ஆர்வக்கோளாறு காராணமாக நான் வாங்கிய டேபிளட்டும் ஒரே வாரத்தில் ஹேங் ஆகிவிட்டது . இதற்கிடையில் பிரபல பதிவர் ரகிம்கஸாலி இணையம் மூலம் புக் செய்து வாங்கிய டேபிளட்டும் இது போல மக்கர் செய்ததை பற்றி வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு வேறு நினைவுக்கு வந்தது  நல்லவேளை  இணையம் மூலமாக நான் புக்கிங் செய்திருந்தாலும் அதன் மூலம் வாங்காமல்  டீலரிடம் வாங்கியிருந்தேன் அதனால் அவரிடம் சென்றேன் . நான் டேபிளட் வாங்கியதற்கான சான்றுகளின் நகலை பெற்று கொண்டு அவர் வைத்திருந்த ஆண்டிராய்ட் OS ஃபேக்கப் மெமரி கார்டு மூலம் டேபிளட்டில் OS சரி செய்து தந்தார் அவரிடம்  அந்த OS யை பென்டிரைவில் காப்பி செய்து...

Friday, 14 December 2012

கவனிக்க தவறிய இந்திய கணித மேதை காப்ரேகர்

,
பூச்சியத்தை கண்டறிந்து கணிதம் தழைத்தோங்க இந்தியா உதவினாலும் ஆர்யப்பட்டர், பாஸ்கரர், பிரம்மகுப்தர், சீனிவாச இராமானுஜம் போன்ற ஒரு சில இந்திய கணிதமேதைகளே புகழ் அடைந்தனர் . அவர்களின் வரிசையில் கணிதத்தில் பல ஆய்வுகள்  செய்த காப்ரேகர் எனும் இந்திய கணிதமேதையை கவனிக்க தவறிவிட்டோம் வாருங்கள் நண்பர்களே அவரின் வரலாற்றினை புரட்டிப்பார்ப்போம் பிறப்பும் இளமைபருவமும் காப்ரேகர் 1905 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மும்பாய்க்கு அருகில் தஹானூ என்னுமிடத்தில்  இராமசந்திர தேவகாப்ரேகருக்கும் ,ஜானகிபாய் என்பவருக்கும் மகனாய் பிறந்தார் . தந்தை ஜாதக தொழில் செய்து வந்தாலும் குடும்பம் என்னவோ  ஏழ்மையில் சிக்கிதவித்தது தனது 8 வயதில் தாயை இழந்த காப்ரேகர்  தன் மாமாவின் அரவணைப்பில் உயர்நிலைப்பள்ளி படிப்பை தொடர்ந்தார்  வகுப்பில் மிக சாதாரண மாணவனான...

Monday, 22 October 2012

திசைமாறும் பறவைகள் அறிவியல் விளக்கம் - வலைசைபோதல்

,
பண்டைய தமிழர்கள் ,கிரேக்கர்கள்,ரோமானியர்கள், எகிப்தியர்கள் பறவைகளை செய்தி அனுப்ப பயன்படுத்தி வந்தனர் பறவைகள் வலசைபோதலைப்பற்றி நமது இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்வோம் . பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல்  பூமியின் வடதுருவத்தில் தோன்றிய பறவையினம் பிளிஸ்டோசின் காலத்தின் இறுதிப்பகுதி வரை வசித்தபின்  அங்கே பனிக்கட்டிகள் தோன்றிய பூமியின்  தென் அரைக்கோளத்திற்கு சென்றுவிட்டு வடதுருவத்தில் பனி குறைந்தபின் மீண்டும் வடதுருவத்திற்கு திரும்பின மீண்டு திரும்பும் பறவைகள் பறவைகள் அற்புதமான வழியறியும் உயிரினம் ஆகும் வலசை செல்லும் பறவைகள் சூரியன், காற்றுவீசும் திசை ,நிலக்குறியீடுகள், நிலா , நட்சத்திரங்கள் , புவியீர்ப்புவிசை , பூமியின் காந்தப்புலம் போன்றவற்றை...

Sunday, 14 October 2012

பிரியங்களில் ஒளிந்திருக்கும் பிரிவுகள்

,
காமம் தின்ற பின்னிரவின் கடைசி வினாடியை நீளச்செய்யும்..... உன் பிரியங்களில் ஒளிந்திருக்கிறது என்னை உதாசீனப்படுத்தும் போது உதிர்க்கும் வார்த்தைகள் ...

காற்றில் அலையும் பித்தனின் மொழி

,
போகுமிடமெல்லாம் அந்தரத்தில் கையையாட்டியபடி காலத்தின் பக்கங்களில் தன் வாழ்வை கிறுக்கிச்செல்லும் பித்தனின் மொழி காற்றிலெங்கும் அலைகிறது மனிதத்தின் முகவரி தேட...

Monday, 1 October 2012

Tower of Hanoi - கணிதப்புதிர்

,
நண்பர்களே நாமது குழந்தைகள் செய்து மகிழ மிகவும் சுவையான கணிதப்புதிர் விளையாட்டினை பார்ப்போம் இந்த புதிர் இந்தியாவின் காசி நகரை மையமாக வைத்து தோன்றியது நிலையாக நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று குச்சிகள் உள்ளது அதில் ஒரு குச்சியில் ஒரு சிறு தட்டு அதன் மேல் சற்று பெரிய தட்டு அதன் மேல் இன்னும் கொஞ்சம் பெரிய தட்டு என வரிசைகிரமமாக ஏறு வரிசையில் அமைந்த சில தட்டுகள் உள்ளது இப்போது புதிர்  என்னவெனில் மேலிருந்துதான் தட்டுக்களை  வரிசையாகத்தான் எடுக்க வேண்டும். நடுவில் உள்ளதையோ அடியில் உள்ளதையோ மாற்றி மாற்றி  எடுக்க கூடாது. ஒருமுறை ஒரு தட்டை மட்டும்  எடுத்து மற்றொரு குச்சியில் பொருத்த வேண்டும். பெரியதட்டின் மேல்தான் சிறிய தட்டை வைக்க வேண்டும் சிறியதட்டின் மேல் பெரிய தட்டினை வைக்க கூடாது . அருகில் உள்ள படத்தினை பாருங்கள்...

பாதசாரிகளின் கவனத்திற்கு கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை !

,
அதிகாரவர்க சாக்கடைப்புழுக்களின் சல்லாபதேவைக்கு காக்கிச்சட்டைகளால் ஜனநாயகம் கதற கதற கற்பழிக்கப்படுவதால் பாதசாரிகளின் கவனத்திற்கு கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை ...

Tuesday, 25 September 2012

ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரியா சமாதானத்தின் தூதுவரா ?

,
நோபல் பரிசு இந்த ஒரு அங்கீகாரத்திற்காக உலகின்  அனைத்து விஞ்ஞானிகள் மட்டுமல்ல இலக்கியவாதிகளும்,  சமூகவியல் அறிஞர்களும் அயரது பாடுபட்டு வருகின்றனர் . ஒவ்வொரு நாட்டின் குடிமகனும் தனது நாடு நோபல் பரிசு வாங்கி விட்டால் பெருமிதம் கொள்கிறான் . ஆனால் இந்த நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரி என உலகமே அவரை  திட்டித்தீர்த்தது  என உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே வரலாற்றை புரட்டிப்பார்ப்போம் ஆயுதவியாபாரியின் மகன் கிபி 1833 அக்டோபர் மாதம் 21 தேதி ஸ்வீடனின் ஸ்டாக்கோம் நகரில் பிறந்தார் தந்தை இம்மானுவேல் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களைச்செய்யும் ஒரு புகழ்பெற்ற ஆயுதவியாபாரி தந்தையுடன் சேர்ந்து போர் ஆயுதங்கள் செய்யும் தொழிலில் ஆல்பிரட்  ஈடுபட்டார் ஆயுத தயாரிப்பு தந்தைக்கும் மகனுக்கும் பெரும் பொருள்...

Monday, 17 September 2012

TNPSC போட்டித்தேர்விற்கான தமிழ் இலக்கண ஒலி நூல்கள் TNPSC Tamil Ilakkanam Audio Book

,
நண்பர்களே TNPSC போட்டித்தேர்விற்காக தமிழ் இலக்கன மென்நூல்களை ஒலி வடிவில் பதிவிட்டு  உள்ளேன் . இதில் தமிழ் இலக்கணம்  ஒலி  வடிவில் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது  இணைய தேடலில் எனக்கு  கிடைத்த ஒலி  நூல்களை  உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்   கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி  பயன் பெறுங்கள் http://adf.ly/Hjz5G ...

Wednesday, 12 September 2012

TNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF

,
நண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில் தமிழ் இலக்கணப்பகுதிகள் முழுமையாக விளக்கப்பட்டு உள்ளது இணைய தேடலில் எனக்கு கிடைத்த நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி எனக்கு கீழே உள்ள  பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள் http://www.mediafire.com/?846pcilu3u2hzj...

Saturday, 8 September 2012

ஏழ்மையினால் படிப்பை கைவிட்டாலும் உலகை திகைக்க செய்த விஞ்ஞானி

,
அமெரிக்காவின் தலைசிறந்த அரசியல் அறிஞரும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான பெஞ்சமின் பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை கைவிட்டு பத்து வயதிலே வேலைக்கு பேனவர் என்று உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே அந்த வியத்தகு விஞ்ஞானியின் வரலாற்றை புரட்டிப்பார்ப்போம் . அமெர்க்காவின் பாஸ்டன் நகரில் எளியகுடும்பம் ஒன்றில் பிறந்த பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை கைவிட்டு விட்டு 10 வயதிலே தனது தந்தையுடன் மெழுகுவர்த்தி தொழிலை மேற்கொண்டார் . ஆனால் அவருக்கு அந்த தொழில் பிடிக்கவில்லை ஆதலால் அச்சுக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார் . சிறு வயதிலே அச்சுக்கூடத்தை தனியாக நிர்வாகாம் செய்யும் அளவிற்க்கு திறமையை வளர்த்துக்கொண்டார் . பட்டினி இருந்தும் அறிவை வளர்தவர் அச்சுத்துறையில் பணியாற்றியதால் பலவகையான் நூலக்ளை வாசிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது...

Friday, 7 September 2012

தொலைந்து போன நாட்குறிப்பின் கடைசி பக்க காதல்

,
தொலைந்து போனநாட்குறிப்பின் கடைசி பக்கத்திலிருக்கும் உன் புகைப்படத்திற்குதெரியுமா ?தொலைந்து போனது நீயும் தானென்று...

Wednesday, 5 September 2012

ஐன்ஸ்டீன் ஒளியை வளைத்தாரா ?

,
ஒளி நேர்க்கோட்டில்தான் செல்லும் மின்விசையோ, காந்த விசையோ ஒளியை வளைக்க முடியாது என்பது பள்ளில் நாம் படித்தது ஆனால் ஐன்ஸ்டீனோ ஒளியை வளைக்க முடியும் என்று கூறினார் அக்கூற்று மெய் எனவும் நிறுபிக்கப்பட்ட  நிகழ்வு உங்களுக்கு  தெரியுமா ?முதலில்  ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் பற்றி தெரிந்து கொள்வோம் ஒரு இரப்பர் விரிப்பின் நடுவே இரும்பு குண்டை வைத்தால் அதன் விளைவாக ஒரு பள்ளம் ஏற்படும் . அதன் அருகே வேறு ஒரு குண்டை வைத்தால் வளைவில் வளைந்தோடும் அல்லவா அது போல வின்வெளியில் உள்ள நிறை மிகுந்த கோள்கள், வின்மீன்தொகுதிகள் போன்றவற்றால் நமது வின்வெளியே ஆங்காங்கே குழி போல குழிந்து காணப்படும் அதன் அருகே வேறு எந்த பொருள் வந்தாலும் மிகுந்த நிறை காரணமாக அந்த பொருள்  ஈர்க்கப்படும்   ஆக மொத்ததில் வெளியின் வடிவம்எப்படி இருக்க வேண்டும் என பருப்பொருள்(Matter) ...
Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates