Monday, 22 October 2012

திசைமாறும் பறவைகள் அறிவியல் விளக்கம் - வலைசைபோதல்

,

பண்டைய தமிழர்கள் ,கிரேக்கர்கள்,ரோமானியர்கள், எகிப்தியர்கள் பறவைகளை செய்தி அனுப்ப பயன்படுத்தி வந்தனர் பறவைகள் வலசைபோதலைப்பற்றி நமது இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்வோம் .
பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல் 
பூமியின் வடதுருவத்தில் தோன்றிய பறவையினம் பிளிஸ்டோசின் காலத்தின் இறுதிப்பகுதி வரை வசித்தபின்  அங்கே பனிக்கட்டிகள் தோன்றிய பூமியின்  தென் அரைக்கோளத்திற்கு சென்றுவிட்டு வடதுருவத்தில் பனி குறைந்தபின் மீண்டும் வடதுருவத்திற்கு திரும்பின
மீண்டு திரும்பும் பறவைகள்
பறவைகள் அற்புதமான வழியறியும் உயிரினம் ஆகும் வலசை செல்லும் பறவைகள் சூரியன், காற்றுவீசும் திசை ,நிலக்குறியீடுகள், நிலா , நட்சத்திரங்கள் , புவியீர்ப்புவிசை , பூமியின் காந்தப்புலம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள்  வலசை சென்றுவிட்டு மீண்டும் தன் வாழிடத்திற்கே திரும்புவது அதிசயமான ஒன்றுதான்
பறக்கும் வேகம் – டாப்ளர் ரேடர்
வலசை செல்லும் சில வகை பறவைகள் மணிக்கு 90 கி.மீ தூரத்தை கடக்க கூடியன  வலசை பறவைகளின்  வேகமானது டாப்ளர் ரேடார் மூலம் கணக்கிடப்படுகிறது . ஒலி மூலத்தின் சலனத்தாலோ காற்றின் சலனத்தாலோ ஒலியின் அதிர்வெண்ணில் மாறுதல் ஏற்படுவது போல தோன்றுவது டாப்ளர் விளைவு ஆகும் இதன் அடிப்படையில் அமைந்தது டாப்ளர் ரேடார் ( டாப்ளர் விளைவினை மிக எளிதாக விளங்கி கொள்ள  புகைவண்டி நிலையத்தில் நிலையாக நிற்பவரை நோக்கி வரும் புகைவண்டியின் ஊதல் ஒலி அருகில் வர வர அதிகமாகும் அதை போலவே புகை வண்டி விலகிச்செல்ல செல்ல ஊதல் ஒலி குறைந்து கேட்கும் )
வலசை போக காரணம்
பறவைகளின் சிற்றினங்களுக்குள் ஏற்படும் உணவு, எல்லை , கூடுகட்டுமிடம்  ஆகிய காரணங்களுக்காக போட்டிகள் ஏற்படுகின்றன எனவே வேறு இடங்களுக்கு இடம்பெயரும் தேவை ஏற்படுகிறது மேலும் சூழல்மாற்றம் , காற்றுதிசைமாற்றம் ஆகியவை பறவைகள் வலசை செல்ல தூண்டுகின்றன  பறவைகள் வலசைசெல்வது  மரபியல்படி அவைகளுக்கு உதவுகிறது  அதிகதூரம் பயணிக்கும் பறவை குளிர்கால வாழிடங்கள் , மிதவெப்ப நாடுகளில் பல்வேறு இனப்பெருக்க பகுதிகளை தேர்ந்தெடுக்கிறது  அங்கு நிலவும் வெவ்வேறு சூழல் மற்றும் தகவமைப்பு பகிர்வுகளினல் திடீர்மாற்றம் ஏற்பட்டு  புதிய இனங்கள் தோன்றி பரிமாண வளர்ச்சி வீதம் அதிகரிக்கிறது
பறவைகள் வலசை செல்வதை அறியும் முறைகள்
பல்வேறு வகையான பறவையினங்கள் இரவுநேரத்திலும்,பகல்நேரத்திலும்  வலசைபோகின்றன பனிமூடிய சிகரங்கள் , பெருங்கடல்கள் வழியே செல்லும் அவற்றை ஆய்வு செய்வது கடினம் ஆனாலும் ரேடியோடெலிமெட்ரி முறையிலும் , பறவைகாலில் வளையமிடுதல் முறையின்மூலமும் பறவைகள் வலசைபோதலை அறிவியல் அறிஞர்கள் கண்டறிகின்றனர்
ரேடியோடெலிமெட்ரி என்பது பறவையின் கழுத்துப்பகுதியில் மிகநுண்ணிய டிரான்ஸ்மீட்டரை பொருத்தி பறவைகள் பறந்து செல்லும் பகுதிகளை ரீசிவர் மூலம் கண்காணித்தல் ஆகும் .
பறவை காலில் வளையமிடுதல் முறை என்பது பரவலாக அனைத்து நாடுகளும் பின்பன்றும் ஒரு முறையாகும் வண்ண பிளாஸ்டிக் வளையங்களில் எண், நாடு, நிறுவனப்பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு அதை பறவையின் காலில் கட்டி விடுகின்றனர் வண்ணவளையமிடப்பட்ட அயல்நாட்டுப்பறவைகள்  வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு இரு நாடுகளின் வலசை ஆய்வு மையங்கள் தகவலை பறிமாற்க்கொள்ளுகின்றன . அமெரிக்காவின் லாரல் மற்றும் மேரிலாண்ட் நிறுவனம் 30 மில்லியன்  வண்ணவளைய தகவல்களை பதிவு செய்துள்ளது  இந்தியாவில் பறவையியல் நிபுணரான டாக்டர் சலீம் அலி அவர்களின் தலைமையில் மும்பாய், ராஜஸ்தானின் பரத்பூர் , மற்றும் தமிழ்நாட்டின் கோடியக்கரை  போன்ற பகுதிகளில் வண்ணவளையங்களை ஆய்வு செய்ய ஆய்வு மையங்கள் உருவாக்கப்பட்டன . பல தன்னார்வ பறவையாளர்கள் உலகெங்கும் பறவை வலசைபோதலை ஆராய்ந்து வருகின்றனர் .


3 comments to “திசைமாறும் பறவைகள் அறிவியல் விளக்கம் - வலைசைபோதல் ”

  • 22 October 2012 at 21:13

    அறியாத பல விடயங்களை அறிந்து கொண்டேன்
    நல்ல பகிர்வு

  • 1 November 2012 at 16:41

    புதிய தகவல்கள் நன்றி சார்

  • 26 December 2012 at 19:55
    Guru says:

    வாசிப்புக்கும் நேசிப்புக்கும் நன்றி நண்பர்களே

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates