புதன், 26 டிசம்பர், 2012

ஆன்ட்ராய்ட் OS இலவச பதிவிறக்கம் - ANDROID OS Free Download

,

    நண்பர்களே BSNL விலை குறைந்த டேபிளட்களை வெளியிட்டாலும் அவற்றில் சில டேபிளட்களில் ஆன்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் தீடீரென்று ஹேங் ஆகிவிடுகிறது . ஆர்வக்கோளாறு காராணமாக நான் வாங்கிய டேபிளட்டும் ஒரே வாரத்தில் ஹேங் ஆகிவிட்டது . இதற்கிடையில் பிரபல பதிவர் ரகிம்கஸாலி இணையம் மூலம் புக் செய்து வாங்கிய டேபிளட்டும் இது போல மக்கர் செய்ததை பற்றி வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு வேறு நினைவுக்கு வந்தது  நல்லவேளை  இணையம் மூலமாக நான் புக்கிங் செய்திருந்தாலும் அதன் மூலம் வாங்காமல்  டீலரிடம் வாங்கியிருந்தேன் அதனால் அவரிடம் சென்றேன் . நான் டேபிளட் வாங்கியதற்கான சான்றுகளின் நகலை பெற்று கொண்டு அவர் வைத்திருந்த ஆண்டிராய்ட் OS ஃபேக்கப் மெமரி கார்டு மூலம் டேபிளட்டில் OS சரி செய்து தந்தார் அவரிடம்  அந்த OS யை பென்டிரைவில் காப்பி செய்து தருமாறு கேட்டேன் அவரோ நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும்  தரமுடியாது இது பென்டா டேபிளட் நிறுவனம் தந்தது எனக்கூறிவிட்டார் நானும் டேபிளட்டை  சரி செய்து தந்ததே  போதுமென்று மகிழ்ச்சியுடன் வந்துவிட்டேன் ஆனால் எனது மகிழ்ச்சி சில மாதம் கூட நீடிக்க வில்லை  . டேபிளட்டில் Game விளையாடிய நண்பரின் மகன் தெரியாமல்  OS  ஐ பார்மெட் செய்துவிட்டான் .எனவே இந்த முறை டீலரிடம் செல்லாமல் இதற்கான தீர்வை இணையத்தில் தேடினேன் நான் கண்ட தீர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நண்பர்களே ஒரு சிறு குறிப்பு .
 ஒரு நல்ல Card Reader இல் 2GB Micro SD மெமரி கார்டினை பொருத்தி USP போர்டினுள் சொருகி விடுங்கள் உங்களது கணினியில் கண்டிப்பாக
 வின்டோஸ் xp இருந்தால் மட்டுமே ஆன்ட்ராய்ட்  OS பெறமுடியும் . வின்டோஸ் 7 இல் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சரி வாருங்கள் ஆன்ட்ராய்ட் OS பெறும் வழிமுறை அறிவோம்
முதலில் கீழ்கண்ட பதிவிறக்கச்சுட்டிகளின் மூலம் ஆன்ட்ராய்ட் 2.3 OS யினை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்  முதல் பதிவிறக்கச்சுட்டியில் HDMI போர்ட் உள்ள டேபிளட்டிற்கானது  இரண்டாவது பதிவிறக்கச்சுட்டி HDMI போர்ட் இல்லாத டேபிளட்டிற்கானது

ஆன்ட்ராய்ட்  பதிவிறக்கம் செய்து விட்டீர்களா 
உங்களுக்கு WIN Rar ZIP பார்மெட்டில் ஒரு File கிடைத்து இருக்கும் அதை unzip செய்து கொள்ளுங்கள் இப்பொழுது உங்களுக்கு கிடைத்து இருக்கும் போல்டரை திறந்தால் உள்ளே இரண்டு போல்டர் போல்டர்கள் இருக்கும் அதில் iuw1.2(Tool)எனும் போல்டரை திறந்து கொள்ளுங்கள் அதில் அதில் iuw1.2எனும் .exe பைல் இருக்கும் அதை ரன் செய்யுங்கள் . கீழே உள்ளது போல் ஒரு விண்டோ திறக்கும்

 அதில் Choose on SD card எனுமிடத்தில் நீங்கள் மெமரி கார்டினை USP போர்டினுள் பொருத்தியிருந்தால் Removeable Diskஎன வந்து இருக்கும் தற்போது அதற்கு மேல் pathஎனுமிடத்தில் Browse என்பதை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்த போல்டரினுள் முதல் போல்டரில் IS701cAndroid .ius என முடியும் Wrapped இமேஜ் வடிவில் இருக்கும் file ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் தற்பொழுது burn எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் ஆன்ட்ராய்ட் os ஆனது உங்களது மெமரி கார்டினில் burn ஆகதொடங்கும் .

 burn completeஎன வந்த பிறகு உங்களது டேபிளட்டில் Micro SD மெமரி கார்டினை சொருகி பவர் பட்டினை ஆன் செய்யுங்கள் அதன் பின்பு டேபிளட் ஸ்கீரீனில் சொல்லப்படும் எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்களது டேபிளட்டினில் ஆன்டிராய்ட் 2.3  os பதிவு செய்து கொள்ளுங்கள் .   சந்தேகங்கள் இருப்பின் கருத்துரையில் கேட்கவும் 

8 கருத்துகள் to “ஆன்ட்ராய்ட் OS இலவச பதிவிறக்கம் - ANDROID OS Free Download”

 • 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:29

  நல்ல தகவல்தான்.டேப்லட் கணினி இல்லையென்றாலும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

 • 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:37

  mika sirandha padivu

 • 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:45

  நல்ல தகவல். நானும் முயற்சி செய்கிறேன் சார். முடியாவிட்டால் உங்களை தொடர்பு கொள்கிறேன். உங்கள் போன் நம்பர் கிடைக்குமா? பொதுவில் கொடுக்க சங்கடப்பட்டால் என் மெயிலுக்கு அனுப்புங்கள். rahimgazali@gmail.com

 • 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:32

  பயனுள்ள தகவல் நண்பரே.எனது முதல் வருகையிலே உங்கள் தளத்தின் உறுப்பினராகிவிட்டேன்

 • 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:51

  பலருக்கும் பயன்படும் தகவல்...:)

 • 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:27

  நானும் தளத்தில் இணைந்துகொண்டேன்! அருமையான பயன்மிக்க தகவல் நண்பா!

 • 8 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 5:18

  நன்றி சகோ .......... உங்கள் பதிவுகளை தொடருங்கள் .

 • 21 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 9:48

  if any doubts in all pental tablets contact me

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates