Tuesday 25 September 2012

ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரியா சமாதானத்தின் தூதுவரா ?

,


நோபல் பரிசு இந்த ஒரு அங்கீகாரத்திற்காக உலகின்  அனைத்து விஞ்ஞானிகள் மட்டுமல்ல இலக்கியவாதிகளும்,
 சமூகவியல் அறிஞர்களும்
அயரது பாடுபட்டு வருகின்றனர் . ஒவ்வொரு நாட்டின் குடிமகனும் தனது
நாடு நோபல் பரிசு வாங்கி விட்டால் பெருமிதம் கொள்கிறான் .
ஆனால் இந்த நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரி
என உலகமே அவரை  திட்டித்தீர்த்தது  என உங்களுக்கு தெரியுமா ?
வாருங்கள் நண்பர்களே வரலாற்றை புரட்டிப்பார்ப்போம்

ஆயுதவியாபாரியின் மகன்
கிபி 1833 அக்டோபர் மாதம் 21 தேதி ஸ்வீடனின் ஸ்டாக்கோம் நகரில் பிறந்தார்
தந்தை இம்மானுவேல் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களைச்செய்யும்
ஒரு புகழ்பெற்ற ஆயுதவியாபாரி தந்தையுடன் சேர்ந்து போர்
ஆயுதங்கள் செய்யும் தொழிலில் ஆல்பிரட்  ஈடுபட்டார்
ஆயுத தயாரிப்பு தந்தைக்கும் மகனுக்கும் பெரும் பொருள் ஈட்டித்தந்தது


நீரில் மிதக்கும் கன்னி வெடிகள்
கிபி 1853 முதல் 1856 வரை நடை பெற்ற கிரீமிய போரில்  கப்பல்களை
வெடித்து சிதறவைக்க நீரில் மிதக்கும் கன்னி வெடிகளை தந்தையும் மகனும் சேர்ந்து தயாரித்தனர் .
மிதக்கும் கன்னி வெடியில் ஒரு கண்ணாடி குழாயில் கந்தக அமிலம் இருக்கும்
கண்ணாடிகுழாய் கப்பலில்  மோதி  உடையும் போது கந்தக அமிலமானது
பொட்டாசியம் குளோரேட் மற்றும் கந்தகம் கலந்த கலவையின் மீது கொட்டும்
இதனால் வெடி விபத்து  ஏற்படும் ஆனால் இந்தகைய வெடிகளினால்
பெரிய போர்கப்பல்களுக்கு சேதத்தினை  ஏற்ப்படுத்த முடியவில்லை
எனவே புதிய திறன் மிக்க வெடிபொருள் கண்டுபிடிக்க வேண்டும்
என ஆல்பிரட் ஆராய்ச்சியில் இறங்கினார்.

புதிய  எமன்

1847 இல்  நைட்ரோகிளிசரின்  என்ற வெடிக்கும் தன்மையுடைய திரவம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது .
சாதாரன வெப்பநிலையில் கூட நைட்ரோகிளிசரின் திரவத்தை கையாளுவது
மிகா ஆபத்தாக இருந்தது ஆனால் ஆல்பிரட்டோ நோபல்  நைட்ரோ கிளிசரின்
மூலம் திறன் மிக்க வெடிபொருளை உருவாக்க முடியுமென தீர்க்கமாக
நம்பியதல் தன்னுடைய ஆயுத தொழிற்சாலையில் அதன் மீது பல
ஆய்வுகளை நடத்தி நைட்ரோ கிளிசரினை வெடிக்க வைக்க ஒரு
கருவியை கண்டுபிடித்து 1863 இல் பேடன்ட் உரிமையையும் வாங்கி
விட்டார். ஆனல் 1864 இல் நோபலின் தொழிற்சாலையில்  நைட்ரோகிளிசரினால்
பெரிய வெடி விபத்து  ஏற்பட்டது இந்த விபத்தில் ஆல்பிரட் தன்னுடைய தம்பி
எமில் மற்றும் நான்கு தொழிலாளர்களும் இறந்து போயினர் இதன் காரணமாக
அரசு ஆல்பிரட்டின் நைட்ரோகிளிசரின் வெடி தயாரிப்புக்கான உரிமத்தை
இரத்து செய்து விட்டது  எனவே தம் தொழிற்சாலையை ஜெர்மனியில்
உள்ள ஹாம்பர்க் நகருக்கு மாற்றினார் நைட்ரோகிளிசரினை விற்று பெரும்
பொருள் சம்பாதித்தார் ஆனால்  நைட்ரோகிளிசரினில் இருந்த  அபாயத்தை
குறைக்க முடியவில்லை ஆல்பிரட் நோபல் கப்பல்களில்  நைட்ரோகிளிசரினை
அனுப்பும்போது துத்தநாகபீப்பாய்களில் அடைத்து அதை மரப்பெட்டிகளில்
வைத்து
அதை சுற்றிலும் மரத்தூளை நிரப்பி அனுப்புவார் ஆனால் இந்த பம்மாத்து
வேலைக்கெல்லாம்  அடங்கவில்லை நைட்ரோகிளிசரின்  எமன் இதனால்
விபத்துக்கு மேல் விபத்து ஏற்ப்பட்டது .உலகெங்கும்  நைட்ரோகிளிசரினை
எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றது இதனால் பல நாடுகள்
நைட்ரோகிளிசரினுக்கு தடை போட ஆரம்பித்து விட்டனர்
எங்கே தனது ஆயுததயாரிப்பிற்கு மிகப்பெரிய பொருளாதார பேரழிவு
ஏற்பட்டுவிடுமோ  என அஞ்சினார்  ஆல்பிரட் நோபல்  எனவே
நைட்ரோகிளிசரினை ஆபத்தில்லாமல் கையாள ஒரு வழியை கண்டுபிடிக்க
அயராது பாடுபட்டார் ஆல்பிரட்நோபல் .

டைனமைட் தாண்டவம்

தனது தொழிற்சாலை அமைந்துள்ள ஹம்பர்க் நகரின் அருகே உள்ள
மலைக்குன்றுகளில் கிடைக்கும் ஒரு வகை ஒரு வகை
களிமண் நைட்ரோகிளிசரினின் வீரியத்தை அடக்கும்  என தற்செயலாக
கண்டுபிடித்தார் . அந்த களிமண் நைட்ரோகிளிசரினை  எளிதாக
ஈர்த்துக்கொண்டது அந்தக்களிமண்ணினை தேவையான வடிவத்தில்
அச்சுக்களாக செய்து ஆபத்து இல்லாமல் அனுப்ப முடிந்தது அந்த
களிமண்ணில் மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து அதை வெடிக்க வைத்து
வெற்றி கண்டார் 1867 இல் டைனமைட்  என பெயரிட்டு விற்பனைக்கு கொண்டு
வந்தார் .டைனமைட் வியாபாரம் சக்கைபோடு போட்டதால் உலகின்
மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆனார் ஆல்பிரட் நோபல் . ஆனாலும்
திருப்தி அடையாத ஆல்பிரட்நோபல்1875 இல் நைட்ரோ செல்லுலோஸ் மற்றும்
நைட்ரோகிளிசரின் ஆகியவற்றை சேர்த்து வெடிக்கும் தன்மையுடைய ஜெலட்டின்
என்ற பொருளை உருவாக்கினார்.1887 இல் நைட்ரோ செல்லுலோஸ்,
நைட்ரோகிளிசரின் மற்றும் கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து பாலிசைட்
என்ற வெடிபொருளை உருவாக்கினார்

விஞ்ஞான வித்தகர்
ஆல்பிரட்நோபல் டைனமைட்க்காக உலகம் முழுவதும் அறியப்பட்டாலும்
,இயற்பியல் , மின்வேதியல்,உயிரியல்,மனிதஉடலியல்,கண்பார்வையியல்
போன்றபல துறைகளில் கண்டுபிடிப்புகள் செய்து 350 க்கும் மேற்ப்பட்ட
பொருள்களுக்கு பேடன்ட் வாங்கி இருந்தார் டைனமைட் பல ஆயிரம்
பேரை கொன்று குவித்ததால் அவர் வாழ்ந்த காலத்தில் உலகம் அவரை தூற்றியது

சமாதான தூதுவராக்கிய சம்பவங்கள்

அழிவு ஆயுதங்களின் தந்தை ஆல்பிரட்நோபல்  என உலகம் தூற்றினாலும்
ஆல்பிரட்டின் அடிமனதில் அவருக்கே தெரியாமல் அன்பும் கருணையும்
துடித்துக்கொண்டு இருந்தது .ஒரு நாளிதழுக்கு கிடைத்த தவறான தகவலால்
ஆல்பிரட்நோபல் இறந்துவிட்டதாக கருதி " மரணத்தின் மொத்த வியாபாரி
இறந்துவிட்டார் "  என செய்தி வெளிட்டது அந்த நாளிதழை பார்த்த
ஆல்பிரட்நோபலுக்கு வருங்காலம்  தன்னை எவ்வாறு சொல்லப்போகிறது
என சிந்திக்க தொடங்கினார் மேலும் ஆல்பிரட் நோபலிடம் ஒரு காலத்தில்
பணியாற்றிய பார்த்தா எனும் பெண்மனி மனிதாபிமானமும் உலக சமாதானத்தில்
ஆர்வமும் கொண்டவர் அவர் எழுதிய "ஆயுதங்களை கீழே போடுங்கள்"
எனும் புத்தகம் உலகம் முழுவதும் புயலை கிளப்பியது அதனால் பலர் சமாதான
வழிக்கு திரும்பினர் ஒருமுறை பார்த்தா தன்னுடைய முன்னாள் முதலாளியுடன்
உரையாடும் போது அவரால் உலகில்  ஏற்ப்பட்ட ஆயுத பெருக்கத்தினையும் அதனால்
ஏற்ப்பட்ட உயிர் இழப்புகளையும் கண்ணீருடன் குறிப்பிட்டார் ஆனால் அதை
ஏற்றுக்கொள்ள ஆல்பிரட்டின் கௌரவம் இடம் தரவில்லை பேரழிவு ஆயுதங்கள்
இருந்தால் மற்ற நாடுகள் போர் செய்ய தயங்கும் அதனால் உலகில் சமாதானம்தான்
பெருகும்  என்று கூறி சமாளிக்கப்பார்தார் ஆனால் பார்தாவின் வாதங்களுக்கு அவரால்
பதில் கூற முடியவில்லையானலும் அவற்றை  ஏற்றுக்கொள்ள ஆல்பிரட் தயாராக
இல்லை  எனவே இனி உங்களை நான் சாகும் வரை சந்திக்கவே மாட்டேன் என
கூறிவிட்டு பார்த்தா சென்றுவிட்டார்

நோபல் பரிசு உதயம்

திருமணம் செய்து கொள்ளாமலே வெடிபொருள் ஆராய்ச்சி ,
பணத்தை தேடல்  என்று வாழ்க்கையை கழித்த ஆல்பிரட்டின் கடைசிகாலத்தில்
தனிமை அவரை வாட்டியது வாழ்வின் மீதான புரிதல்கள் அவருக்கு பிடிபட
தொடங்கியது தன்னுடைய கண்டுபிடிப்புகள் எத்தனை ஆயிரம் உயிர்களை
கொன்றுள்ளது இன்னும்  எத்தனை கோடி உயிர்களை கொல்லும்  என்ற
எண்ணம் அவர் நெஞ்சை பதற வைத்தது  எனவே 1985 நவம்பர் மாதம்
தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் ஒரு அறக்கட்டளையாக்கினார் அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,இலக்கியம்,
உலகசமாதானம்  ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகள்
கொடுக்கச்செய்தார் .முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு முதல்
வழங்கப்படுகிறது உலக மக்களுக்கு பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு
அங்கீகாரமு, உலக சமாதானத்திற்கு ஊக்கமும் கொடுத்தால் உலகில் அமைதி
ஏற்படும்  என நம்பினார் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் இறந்தார்

டிஸ்கி

1905 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பார்த்தாவிற்கு கிடைத்தது







0 comments to “ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரியா சமாதானத்தின் தூதுவரா ?”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates