Sunday, 29 April 2012

நானோ டெக்னாலஜியில் இந்தியனின் அதிசய கண்டுபிடிப்பு

,

நானோ டெக்னலாஜி பற்றி வாத்தியார் சுஜாதா என்ன சொல்றானு முதல்ல பார்போம் நண்பர்களே “நானோ டெக்னலஜி என்பது மனிதனை சைன்ஸ்பிக்ஸனுக்கு அருகில் அழைத்து செல்லும் சாத்தியங்களை காட்டுகிறது .தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் பாக்டீரியாக்கள், தானகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள் , பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள் வயதாவதை தாமதப்படுத்தும்  நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாக சொல்கிறார்கள் இதில் எது நிகழும் எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும் இந்த புதிய தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளா விட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் , நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள் . உலகம் நம்மை புறக்கணித்துவிட்டு எங்கே ஓடிபோய்விடும் “ நன்றி நானோடெக்னாலஜி – உயிர்மை பதிப்பக வெளியீடு
நண்பர்களே நானோ டெக்னாலஜி பற்றி விக்கிபீடியாவின் அறிமுகத்தையும் எனது முந்தைய பதிவுகளையும்  படித்து பார்க்க கீழே உள்ள சுட்டிகளை இயக்கி படித்து பாருங்கள்
 மேற்கண்ட சுட்டிகளின் மூலம் நானோ டெக்னாலஜி பற்றிய புரிதல்கள் கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன் வாருங்கள் நண்பர்களே இந்தியர் ஒருவர் நானோ டெக்னாலஜியில் செய்த அளப்பறிய சாதனையை தெரிந்து கொள்வோம் கேரளாவை சேர்ந்த அஜயன் என்ற விஞ்ஞானி பயோடெக்னாலஜியில் பயன்படும் கார்பன்நானோ டியூப்களை தயாரிக்க புதிய கருமையான உலோகத்தை கண்டுபிடித்துள்ளார்.

 அருகில் உள்ள புகைப்படத்தில் அஜயன் தான் கண்டுபிடித்த கருப்பு உலோகத்தை கையில் பிடித்து உள்ளார் அருகில் அவரது ஆராய்ச்சி உதவியாளர் திரு Lijie Ci . இவர் கண்டுபிடித்த கருப்பு உலோகமானது 99.9 சதவீதம் ஒளியை உட்கவர்ந்து கொள்கிறது . இதன் மூலம் சூரிய ஆற்றலை மின் சக்தியாக மாற்றி பல சாதனைகளை செய்யமுடியும் தற்போது அமெரிக்காவின் Rice பல்கலைகலத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் அஜயன் நானோடெக்னாலஜியில் வியத்தகு சாதனைகளை படைக்க அவரை வாழ்துவோம்.

Saturday, 28 April 2012

ஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை பல்பை கண்டுபிடித்தது யார் !

,

1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கு கொடுத்த மிக உன்னத பரிசு எலெக்ட்ரிக் பல்பு என நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களா ? எடிசன் மிகப்பெரிய விஞ்ஞானிதான் ஆனால் அவர் மிக மேசமான அறிவியல் வியாபாரி என்று உங்களுக்கு  தெரியுமா ? ஏழை விஞ்ஞானி ஜோசப் ஸ்வான் முதலில் கண்டு பிடித்த பல்பை தனதாக்கி வரலாற்றில் மோசடி புகழ் பெற்றது உங்களுக்கு  தெரியுமா ?  வாருங்கள்  நண்பர்களே வரலாற்றை புரட்டி பார்போம் .

1828ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஒரு எளிய குடும்பத்தில் ஜான் ஸ்வான் மற்றும் இசெபெல்லா தம்பதியினர்க்கு மகனாக பிறந்த ஜோசப் ஸ்வான் தனது குடும்ப வறுமையை நிலையிலும் இயற்பியல் , வேதியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மிகச்சிறந்த புலமை பெற்றார் தனது குடும்ப வறுமையை போக்க ஏதாவது கண்டுபிடிப்பு செய்து அதன் மூலம் வறுவாய் ஈட்டலாம் என நினைத்தார் .
தனது 22 ஆம் வயதிலே அதாவது 1850 ஆம் ஆண்டிலேயே பல்பினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஜோசப் ஸ்வான்  கண்ணாடியிலான வெற்றிடக்குழாயில் மெல்லிய கம்பியிலான இழையை(Filament) சூடாக்குவதின் மூலம் ஒளியை பெற முடியும் கண்டறிந்தார் அதிக மின்சாரம் பாய்வதால் கம்பியிலான இழையை சூடு தாங்காமல் அறுந்து அறுந்து போனது  தனது முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத ஸ்வான்  வேறு வேறு உலோகங்களை மெல்லியகம்பி இழையாக பயன்படுத்த முடியுமா என்று சோதித்து பார்த்தார் இதே சமயம் தாமஸ் ஆல்வா எடிசன்,  ஹம்பிரிடேவி ,ஜேம்ஸ் பவ்மான்      போன்ற பலரும் பல்பினை கண்டுபிடிக்க ஆராய்ந்து வந்தனர் .

 1875 இல் ஜோசப் ஸ்வான் அதிக மின்தடையை தாங்கும் கார்பன் இழையை கொண்டு பல்பினை தயாரித்தார்  அதை மேலும் மேலும் மெருகேற்றி 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் விஞ்ஞானிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார் 1879 ஆம் ஆண்டு ஜனவரி 17 பொதுமக்களுக்கும் நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பித்தார் அதை காப்புரிமைக்கு விண்ணப்பித்தார் ஆனால் அவரது காப்புரிமை விண்ணப்பம் சரியாக நிரப்பப்படவில்லை என்று அவரது காப்புரிமை நிராகரிக்கப்பட்டது அவருக்கு பின்  சற்றேறக்குறைய அவரை போலவே பல்ப் தயாரித்து 1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் வெளியிட்டு தனது செல்வாக்கால் காப்புரிமை பெற்றுக்கொண்டார் ஆனால் ஜோசப்ஸ்வானால் ஏழ்மையாலும் ஆதரவின்மையாலும் எடிசனுடன் போட்டி போட முடியவில்லை  . ஸ்வான் எங்கே தனியே வேறு முறையில் பல்ப் செய்து வரலாற்றில் இடம்பிடித்துவிடுவாரென்று பயந்து ஜோசப்ஸ்வானை தன்னுடன் கூட்டு சேருமாறு அழைத்தார் தன் குடும்ப வருமையை போக்க ஜோசப்ஸ்வான் எடிசனுடன் கூட்டு சேர்ந்தார்  .  பின்னர் பல முயற்சிக்களுக்கு பிறகு எடிசன் டங்ஸ்டனை மின் இழையாக கொண்டு தற்போது  நாம் பயன்படுத்திவரும் எலெக்ட்ரிக்பல்பினை கண்டுபிடித்தது தனி வரலாறு எடிசனை பற்றிய ஒரு வரலாற்று பதிவிடல் செய்யும் போது இதை பற்றி மேலும் அறிந்துகொள்வோம் எப்படியோ பல்பினை கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு நாம் ஜோசப்ஸ்வான் என்று  பதில் கூறுவதில்லை எடிசன் என்றுதான் கூறுகிறோம் தனது செல்வாக்கால் ஜோசப்ஸ்வானுக்கு கிடைக்க வேண்டிய புகழை தட்டி பறித்துக்கொண்டார் தாமஸ் ஆல்வா எடிசன் .

Friday, 27 April 2012

ஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா ?

,
ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அழிப்பது கொலை ஆனால் ஒரு இனத்தையே  அழிப்பது ஹாலோ காஸ்ட் ஆகும் இரண்டாம் உலகப்போரின்போது  ஹிட்லரும் அவரின் நாஜி படைகளும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களை கொன்று குவித்தது ஹாலோகாஸ்ட் ஆகும்  ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதக கூறி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை விஷவாயு சிறையிலிட்டும் , காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டும் யூத இனத்தை அழித்த நிகழ்வு ஹாலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது

 ஆண்ட இனமாம் எம் தமிழனத்தை கொன்று கொக்கரிக்கும் மகிந்தராஜபக்க்ஷேவும்  ஹாலோ காஸ்ட் செய்தவன்தான் யூதர்களை கொன்றவன் தற்கொலை செய்துகொண்டான் என் தமிழினத்தை அழித்தவனின் முடிவு ?

உலகநாடுகளின் நேரத்தை கணக்கிடுகிம் கிரீன்விச் முறை தெரியுமா

,

உலகம் முழுவதும் நேத்தை கணக்கிட ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை கிரீன்விச் முறை  . இதன் மூலம்  நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
பூமி தன்னைதானே  சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 24 மணிநேரம் (1440 நிமிடங்கள் ) ஆகிறது அதாவது சூரிய ஒளி பூமியில் ஒரு இடத்தில் பட்டு மீண்டும் அதே இடத்தில் பட ஒரு நாள் ஆகிறது பூமியின் மேல் வடக்கு தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகளே தீர்க்கரேகைகள்  . இங்கிலாந்து நாட்டில் கிரீன்விச் எனுமிடத்தை 0 தீர்க்க ரேகையாக கொண்டும் அதற்கு கிழக்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் மேற்க்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் ஆக மொத்தம் 360 தீர்க்கரேகைகளும் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டது .

பூமி உருண்டையின் மேல் உள்ள 360 தீர்க்கரேகைகளின் மீதும் ஒளிபட 24 மணிநேரம் அல்லது 1440 நிடங்கள் ஆகின்றது
360 தீர்க்கரேகைக்கு =1440 நிமிடம் எனில்  ஒரு தீர்க்கரேகைக்கு
1440*1/360= 4 நிமிடங்கள்
சூரிய ஒளி ஒரு தீர்க்கரேகையை கடக்க நான்குநிமிடங்கள்  ஆகின்றது  15 தீர்க்கரேகைகளை கடக்க 15*4=60 நிமிடங்கள் ஆகின்றது இதன் அடிப்படையில் ஒரு ஊர் எந்த தீர்க்கரேகையில்  அமைந்துள்ளது என்பதை வைத்து அந்த ஊரின்  நேரம் கணக்கிடப்படுகிறது   ஒரு ஊர் 45 தீர்க்கரேகையில் இருந்தால்  0 தீர்கரேகையில் இருந்து அந்த ஊரை சூரிய ஒளி கடக்க ஆகும் நேரம் 45*4=180 நிமிடங்கள் அதாவது மூன்று மணிகள் ஆகும் அந்த ஊர் தீர்க்க ரேகையின் கிழக்கு பக்கம் இருந்தால் 12 மணியை கூட்டிக்கொள்ள வேண்டும் , மேற்க்குபக்கம் இருந்தால் 12 மணியை கழித்துக்கொள்ள வேண்டும்.
 இந்தியா கிழக்கு மேற்காக 68 கிழக்கு தீர்க்கரேகையில் இருந்து 97 கிழக்கு தீர்க்கரேகை வரை பரவியுள்ளது  ஒவ்வொரு தீர்க்கரேகைக்கும் நேரம் கணக்கிட்டால் இந்தியாவில் வட , தென் மாநிலங்களில் வேறு வேறு நேரம் கிடைக்கும் அதனால் நேர குழப்பம் ஏற்படும் எனவே  இந்தியாவில் அலகாபாத் அருகே செல்லும் 82 1/2 தீர்க்கரேகையை மத்தியதீர்க்கரேகையாக கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரே நேர அளவு கணக்கிடப்படுகிறது
இந்தியா 82 1/2 கிழக்கு தீர்க்கரேகையில் உள்ளதால்
 82 ½*4 =330 நிமிடங்கள்  அதாவது 5 மணி 30 நிமிடங்களை கிரீன்விச்நேரத்துடன்  கூட்டிக்கொள்ள வேண்டும்
என்ன நண்பர்களே  நேரத்தை இப்படித்தான் வகுத்து தந்து இருக்கின்றனர் விஞ்ஞானிகள்  ஆனால் நேரத்தில்  நாம் என்ன செய்ய வேண்டும் என வகுத்து செயல்பட்டால் தான் வாழ்வில் உயரமுடியும்

இலவச மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் கவனிக்கவேண்டியவை

,

1.   இலவசம் என்ற  காரணத்திற்காக கிடைக்கும் எல்ல மென்பொருள்களையும் டவுன்லோடிங் செய்யாதீர்கள் தேவையற்ற மென்பொருள்கள் உங்கள் கணினியின் வேகத்தை குறைத்து விடும்.
2.   ஒரு மென்பொருளை ஒரு முறைதான் பயன்படுத்தவேண்டும் எனும் சூழ்நிலையில்  அந்த மென்பொருளை டவுன்லோடிங் செய்வதைவிட  ஆன்லைனில் அந்த வேலையை செய்துகொள்ளுங்கள் .
3.   ஒரு தளத்தில் இருந்து மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் அந்த மென்பொருளை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துள்ளனர் அதற்கு யாரவது கருத்து சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள் குறிப்பாக அதிகம் டவுன்லோடிங் செய்யப்பட்ட மென்பொருளை டவுன்லோடிங் செய்யுங்கள்
4.   நீங்கள் மென்பொருள் டவுன்லோடிங் செய்யும் தளம் வைரஸ் , மால்வேர் போன்ற தாக்குதல் இல்லதவையா என உறுதி செய்துகொள்ளுங்கள்
5.   ஒரே தேவைக்கு பல மென்பொருள்கள் பயன்படுத்துவதை தவிருங்கள் உதாரணமாக player , cleaner , போட்டோவை மாற்ற செயல்பாடுகளுக்கு பல மென்பொருளை பயன்படுத்தாதீர்கள்

6.   எந்த ஒரு மென்பொருளையும் அதன் தயாரிப்பு தளத்தில் இருந்து டவுன்லோடிங் செய்வதை தவிருங்கள் ஏன் எனில்  அவர்களின் மென்பொருளை அவர்கள் உயர்த்திதான் சொல்வார்கள்

7.   கேம்ஸ்  போன்றவற்றை டவுன்லோடிங் செய்யும் போது மிக கவனம் தேவை ஏன் எனில் சில கேம்ஸ்வுடன் இணைந்து வரும் மால்வேர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு எண் முக்கியமான பாஸ்வேர்டு போன்றவைகளை  திருடி  அதை தயாரித்தவருக்கு தெரியபடுத்திவிடும்

8.   குறிப்பிட்ட தேவைக்கு  உங்களின் நண்பர்கள் என்ன வகையான  மென்பொருளை பயன்படுத்துகிறார்கள்  அதனால்  அவர்களுக்கு பயன் கிடைத்ததா  எனக்கேட்டுபாருங்கள் அல்லது கூகுள் மூலம் அந்த மென்பொருளின் Review வை தேடி படித்துபார்த்து பின் டவுன்லோடிங் செய்யுங்கள்

Thursday, 26 April 2012

ஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ

,

நெஞ்சம் நெகிழ்கிறது , ஆனந்தத்தில் கண்கள் பனிக்கிறது ,எனது வலையுலக சொந்தங்களே உங்களுக்கு  நன்றி சொல்ல வார்த்தைகளற்று தவிக்கிறேன்

இன்று ஆனந்தவிகடனின்(02.05.2012) வலையோசை பக்கத்தில் எனது வலைப்பூ வந்து உள்ளது . 2008 ஏப்ரல் 2 இல் வலைப்பூ என்னவென்று தெரியாமலே மெயில் ஐடி மூலம் வலைப்பூவை உருவாக்கி விட்டேன் அதில் hai friends this is my first blog pls say about blog. my id aguruking@gmail.com என்று ஒரு பதிவிடல் செய்திருந்தேன் (அந்த பதிவிடலை பார்க்க http://www.haiguru.blogspot.com/ ) தமிழ்கூறும் நல்லுலகம் என்னை திரும்பிகூட பார்க்காத காரணத்தால் ஒரு சுபயோகசுபதினத்தில் உருவாக்கிய  வலைப்பூவை மறந்தேபோனேன் . 

கல்வி சார்ந்த செய்திகளின் கருவூலமாக ஒரு வலைப்பூவை நடத்தி வருபவரும்www.teachersalem.blogspot.in கணினி நுட்பங்களை கற்று கொடுத்த குருவுமான ஆசிரிய நண்பர் திரு விஜய்சந்தரின் வழிகாட்டுதலின் படி ஒரு வலைப்பூவை மீண்டும் தொடங்கி பதிவிட ஆரம்பித்தேன் .எதை பதிவிடுவது எனத்தெரியவில்லை பள்ளி பாட புத்தங்களை வாசித்த நேரத்தை காட்டிலும் கல்கி, புதுமைபித்தன் , சுஜாதா, சுந்தரராமசாமி, கு.அழகிரிசாமி , ச.கந்தசாமி, நாஞ்சில்நாடன், கி.ராஜநாரயணன் , வண்ணதாசன், வண்ணநிலவன் , அசோகமித்திரன் , அறிவுமதி, கல்யான்ஜி , மீரா,  போன்றோரின் படைப்புகளை தேடி தேடி படித்த நேரம்தான்  அதிகம் அவர்களைப்போல கதைகள் கவிதைகள் எழுதலாம் என்றால் புலியை பாத்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடும்  எனவே என் சிற்றறிவிற்கு எட்டியவற்றை பதிவிட்டு வருகிறேன்.

வலையுலகம் மிகப்பெரிய கடல்  நமக்கோ அரைகுறை நீச்சல் என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் அன்புத்தம்பி என்டர் த வேர்ல்டு (www.wesmob.blogspot.com )  ஸ்டாலின் ஆபத்தாண்டவனாக வந்து தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறார் ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ வருவதற்கு மிக முக்கிய காரணம் எனக்கு சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை  மேலும் மேலும் எழுத வைத்தது  வலையுலக  நண்பர்களாகிய நீங்கள்தான் எனவே   இந்த  ஆனந்த தருணத்தில்  உங்களை இருகைகூப்பி  வணங்குகிறேன் . ஆனந்தவிகடனின் வெளியீட்டினை பார்த்துவிட்டுஎனக்கு மின் அஞ்சல் , தொலைபேசி, குறுந்தகவல் வழியாக வாழ்த்து கூறிய பள்ளி , கல்லூரி தோழர்களுக்கும் தோழிகளுக்கும் எனது மனங்கனிந்த வாழ்துகள் .   என்னை நேசிக்கும் நெஞ்சங்களாகிய உங்களுடனான   நட்புபயணத்தில் உங்களுடன் கைகோர்த்து வருகிறேன் வாருங்கள் தோழர்களே நாம் வாழும் சமுதாயத்திற்கு  நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம் . வீழ்வது நாமாக இருப்பினும் வெல்வது தமிழாக இருக்கட்டும்   .



 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates