வணக்கம் நண்பர்களே
நீண்ட இடைவேளைக்கு பின்பு பயனுள்ள பதிவு ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . டேன்கிராம்
எனும் சீன கணித விளையாட்டில் ஏழு கணித உருவ துண்டுகளைப்பயன்படுத்தி பல்வேறு கணித உருவங்களை
உருவாக்க முடியும் . இந்த விளையாட்டில் ஒரு சதுர வடிவ தாள் ஆனது இரு பெரிய செங்கோண
முக்கோணம் , கொஞ்சம் சிறிய செங்கோண முக்கோணம் அதைவிட சிறிய இரு செங்கோண முக்கோணம்
, ஒரு சதுரம் , ஒரு இனைகரம் என ஏழு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அந்த உருவங்களை மாற்றி
மாற்றி பொருத்துவதின் மூலம் பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடுவதாகும் . 19 ஆம்
நூற்றான்டிலேயே சற்றேறக்குறைய 6500 வடிவங்களை உருவாக்கி இருந்தனர் .
உங்கள் குழந்தைக்கு ஒரு சதுரவடிவ தாளினை படத்தில் காட்டியவாறு ஏழு துண்டாக்கி பிரித்து கொடுங்கள் . பின்பு அவர்களின் கற்பனை வளத்திற்கேற்றவாறு பல்வேறு
உருவங்களை உருவாக்கி விளையாடி மகிழ முடியும்
. உருவங்களின் மாதிரி வேண்டுமெனில்
கீழ்கண்ட எனது முந்தைய பதிவில் இருந்து
PDF வடிவிலான மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
டேன்கிராம் விளையாட்டினை கணினியிலேயே விளையாட முடியும்
கீழ்கண்ட பிளாஷ் வடிவிலான அப்பிகேஷனை பதிவிறக்கம் செய்து அதை திறந்தால் ஏழு துண்டுகள்
கிடைக்கும் அதை அருகில் இருக்கும் படத்தை போல் மவுஸால் படத்துண்டுகளை இணைக்க வேண்டும் . புதிய உருவம் வேண்டுமெனில் அருகில் உள்ள படத்தை
கிளிக் செய்தால் புதிய உருவம் கிடைக்கும் . உங்களின் குட்டிச்செல்லங்களுக்கு பதிவிறக்கி
கொடுத்து அவர்களின் கணித அறிவினை வளப்படுத்துங்கள் .
பின்குறிப்பு
நண்பர்களே நான்
4shared தளத்தின் பதிவிறக்கச்சுட்டியை பகிர்ந்துள்ளேன் . பதிவிறக்கம் செய்யும்போது
உங்களிடம் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கேட்டால் உங்களின் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக
உருவாக்கி கொள்ளுங்கள் இல்லையெனில் www.bugmenot.com
எனும் தளத்திற்கு சென்று 4shared.com என டைப் செய்யுங்கள் அங்கு பல்வேறு யூசர்நேம்
, பாஸ்வேர்ட் கிடைக்கும் அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
அது போல வேறு ஏதாவது கட்டண தளங்களின் யூசர்நேம் , பாஸ்வேர்ட் தேவைப்பட்டாலும் www.bugmenot.com தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள
முடியும் .