Wednesday 5 September 2012

ஐன்ஸ்டீன் ஒளியை வளைத்தாரா ?

,
ஒளி நேர்க்கோட்டில்தான் செல்லும் மின்விசையோ, காந்த விசையோ ஒளியை வளைக்க முடியாது என்பது பள்ளில் நாம் படித்தது ஆனால் ஐன்ஸ்டீனோ ஒளியை வளைக்க முடியும் என்று கூறினார் அக்கூற்று மெய் எனவும் நிறுபிக்கப்பட்ட  நிகழ்வு உங்களுக்கு  தெரியுமா ?
முதலில்  ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் பற்றி தெரிந்து கொள்வோம்
ஒரு இரப்பர் விரிப்பின் நடுவே இரும்பு குண்டை வைத்தால் அதன் விளைவாக ஒரு பள்ளம் ஏற்படும் . அதன் அருகே வேறு ஒரு குண்டை வைத்தால் வளைவில் வளைந்தோடும் அல்லவா அது போல வின்வெளியில் உள்ள நிறை மிகுந்த கோள்கள், வின்மீன்தொகுதிகள் போன்றவற்றால் நமது வின்வெளியே ஆங்காங்கே குழி போல குழிந்து காணப்படும் அதன் அருகே வேறு எந்த பொருள் வந்தாலும் மிகுந்த நிறை காரணமாக அந்த பொருள்  ஈர்க்கப்படும்   ஆக மொத்ததில் வெளியின் வடிவம்எப்படி இருக்க வேண்டும் என பருப்பொருள்(Matter)   கூறுகிறது  அதே சமயம் மறுபுறத்தில் பருப்பொருள் எவ்வாறு  இயங்க வேண்டுமென வெளி கூறுகிறது .
ஒளியை வளைத்த நிகழ்வு
சூரியன் போன்ற  நிறை மிகுந்த பொருட்களின்  அருகில் ஒளி பாயும் போது ஒளி வளையும் என்று தனது புரட்சிகர கருத்தை 1915 இல் ஐன்ஸ்டீன் கூறினார்  அவ்வளவுதான்  அறிவியல் யுகம்  பொங்கி எழுந்தது  ஐன்ஸ்டீன் முட்டாள்தனமாக கூறுகிறார் . ஒளியாவது  வளைவதாவது  இதெல்லாம்  சாத்தியமே இல்லை என கூக்குரல் இட்டது ஆனால்  ஐன்ஸ்டீனோ தன் வாழ்வில் மிகப்பெரிய சாதனையை செய்து முடித்ததாக தன் மகனுக்கு கடிதம் எழுதினார்  . அவரின் ஆய்வினை ஏன் அறிவியல் உலகம் உடனடியாக ஏற்கவில்லை எனில் ஒளியானது சில சமயம்  அலை போலவும் சில சமயம் துகள் போலவு செயல்படுகிறது . ஒளியின் துகளை போட்டான் என அழைக்கின்றனர் இது வினாடிக்கு சுமார் 3 இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில்  நேர்க்கோட்டில் செல்லும் இதன் ஆற்றல் ஒளியின் நிறத்தை பொறுத்து 1.5எலெக்ட்ரான் வோல்ட் முதல் 3.5 எலெக்ட்ரான் வோல்ட் வரை  மாறுபடுகிறது . இவ்வளவு  வேகத்தில் செல்லும் ஒளியை வளைக்க வேண்டும் எனில் எதன் மூலம் வளைப்பது , யார் வளைப்பது என பல்வேறு கேள்விகளை கேட்டனர்  ஆனால் 1919 இல் ஐன்ஸ்டீனின் கூற்றை மெய் என நிறுபனம்  செய்ய  ஐன்ஸ்டீனின் தீவிர ஆதரவாளர் ஆர்தர் எடிங்டன் எனும் விஞ்ஞானிக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது 1919 மே 29 ஆம் தேதி  நடைபெற்ற  முழு சூரிய கிரகணத்தை ஆராய  உலகின் இரண்டு மூலைகளுக்கு  இரண்டு குழுக்களை அனுப்பினார் . ஆப்பிர்க்காவில் ஒரு குழு பிரேசிலில் ஒரு குழு என இரண்டுகுழுக்களும்  சூரிய கிரகணத்தை ஆராய்ந்தது
நடந்தது என்ன ?
முழுச்சூரிய கிரகணத்தின் போது சூரியன்  நிலாவினால் சில நிமிடங்களுக்கு  முழுமையாக மறைக்கப்பட்டது அப்போது சூரியனுக்கு பின் புறம் உள்ள வின்மீன்கள் தெரிந்தன  அதாவது ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவப்படி  விண்மீன்களின்  ஒளி சூரியனது நிறையினால் ஈர்க்கப்பட்டதால்   ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவப்படி குழிந்த வெளியின் மீது வரும் போது  ஒளி தனது நோர்க்கோட்டு பதையில் இருந்து விலகியது  ஆகையால் சில விண்மீன்கள் இருக்க வேண்டிய இடத்திலிருந்து  இடம் மாறி உள்ளதாக புலப்பட்டது  ஆகையால்  ஐன்ஸ்டீன் கூறியது உண்மை என நிறுபிக்கப்பட்டது .

4 comments to “ஐன்ஸ்டீன் ஒளியை வளைத்தாரா ? ”

  • 5 September 2012 at 21:03

    நல்ல பகிர்வு...
    பகிர்வுக்கு நன்றி

  • 5 September 2012 at 22:46
    Rasan says:

    பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
    என்னுடைய தளத்தில்

    தன்னம்பிக்கை -3

    தன்னம்பிக்கை -2

  • 15 September 2012 at 14:06
    Jayadev Das says:

    தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். அவற்றை ஒரு அலசு அலசலாம் என இருக்கிறேன், பல ருசிகரமான அறிவியல் தகவல்களுடன் சிறப்பாக உள்ளது. தாங்கள் எந்தத் துறையில் ஆசிரியராக இருக்கிறீர்கள் என்று அறிய ஆவல்.

  • 15 September 2012 at 14:18
    Jayadev Das says:

    \\ஆக மொத்ததில் வெளியின் வடிவம்எப்படி இருக்க வேண்டும் என பருப்பொருள்(Matter) கூறுகிறது அதே சமயம் மறுபுறத்தில் பருப்பொருள் எவ்வாறு இயங்க வேண்டுமென வெளி கூறுகிறது.\\ வாவ்..........!! நச்சுன்னு இருக்கு!!

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates