Saturday 1 September 2012

உயிர் வாழ்வின் ஆதாரமும் பரிமாணச்சங்கிலியும் அழிந்து போகுமா ?

,

இன்று உலகெங்கும் காலநிலைமாறிக்கொண்டு வருகிறது புவிவெப்பமயமாகி வருகிறது ,பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுகிறது  மனிதன் காடுகளை அழித்து குடியிருப்புகள் என்ற பெயரில் கான்ங்கிரீட் தீவுகளை ஏற்படுத்தி வருகிறான்  வேதிப்பொருள்களால் மண்ணை மலடாக்கியதால் உணவுத்தேவைக்கு மரபனுமாற்ற பயிர்களை உருவாக்கி வருகிறான்  இதனால் பரிமாணச்சங்கிலி உடைந்து  போகும் அபாயம் இருக்கிறது .
பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருவது இயற்கையின் தீர்க்க முடியாத புதிர்களில் ஒன்று கண்னுக்கு தெரியாத மிகமிகச்சிறிய உயிரினமான மைக்ரோபிளாஸ்மா முதல் மிகப்பெரிய நீலத்திமிங்கலம் வரை உணவுத்தேவைக்கு இயற்கையை நம்பி உள்ளன. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் நடத்தும் விபரீத விளையாட்டில் தனது உயிர் வாழ்வின் ஆதாரமான பல்லுயிரியத்தை சேதாரமாக்கிக்கொண்டு இருக்கிறான் வாருங்கள் நண்பர்களே அந்த விபரீத விளைட்டினை எட்டிப்பார்ப்போம்.
பல்லுயிரியம்
மூன்று கோடிக்கும் அதிகமான  உயிரின வகைகள் நிலப்பரப்புகள், ஆழ்கடல், காற்றுமண்டலம் என இந்த பூமி முழுவதும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருந்தாலும் மத்தியரேகைப்பகுதிகள் ,வெப்பமண்டல கடல்பகுதிகளின் பவள பாறைகளிலும் போன்ற சில பகுதிகளில் பல்வேறு வகையான உயிரினங்கள் அடர்ந்து காணப்படுகிறது . இத்தகைய அனைத்து உயிர்களும் அவற்றின் வகை மாதிரிகளுமே பல்லுயிரியம் எனப்படுகிறது. உலகெங்கும் 34 பல்லுரியப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பல்லுயிரியம் பயன்கள்
காலநிலை கட்டுப்பாடு
உணவுப்பொருள்கள் , மருந்து பொருட்கள், எரிபொருள் ,கட்டிடபொருட்கள்
வெள்ளம் , வறட்சி , வெப்பம் காற்று போன்றவற்றை கட்டுப்படுத்துதல்
சுற்றுச்சூழலில் மாசுக்களை நீக்குதல் என பட்டியல் நீளும் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரமான  பல்லுயிரியம் தற்போது வேகவேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அவற்றில் சில காரணங்கள்
வாழ்விடங்களின் சிதைவு
மனிதன் தன் வாழ்வியல் தேவைக்கு 80 சதவீதம் பல்லுயிரியத்தைச்சார்ந்து இருக்கிறான் ஆனாலும் நாகரீக தேவைக்கு பல்லுயிரியத்தை அதிகமாக சுரண்டுவதால் பல உயிரினங்கள் அழிவை நோக்கி செல்கின்றன .
அன்னிய உயிரினங்கள் அறிமுகம்
ஒரு பகுதி உயிரியை மற்றொரு பகுதிக்கு அறிமுகம் செய்து அப்பகுதியைச்சார்ந்த உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் . தமிழகத்தில் அறிமுகமான பார்த்தீனியம் செடி மற்ற தாவரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது
சுற்றுசூழல் மாசு
வேதிப்பொருள்கள் நிலம்,நீர்,காற்று போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரிகளுக்கு ஆபத்தாகிறது ,
பருவநிலை மாற்றம் 
வளிமண்டலத்தில் காணப்படும்  கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, CFC  போன்ற பசுமையக வாயுக்கள் பூமியில் பசுமைகுடில் (Green House effect ) விளைவினை ஏற்ப்படுத்துகின்றன அதாவது சூரியனிலிருந்து பெறப்படும் வெப்பத்தை இந்த வாயுக்கள் பூமியிலே தக்கவைப்பதால் பூமியின்  வெப்பநிலையை  உயருகிறது  தற்போதைய நிலை நீடித்தால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 0.3 செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் இதனால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் கடல் மட்டம் 6 செ.மீ உயரும்  இந்நிலை நீடித்தால் 2030 இல் கடல் மட்டம் 28 செ.மீ முதல் 30 செ.மீ வரை உயர்ந்து கடலோர நகரங்கள் அழிந்துவிடும் மேலும் கடல் நீர் உட்புகுவதால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களும் , விலங்கினங்களும்  அழியப்போகிறது
உலகெங்கும் பல்லுயிரியத்தைக்காக்க பல்வேறு அமைப்புகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன பல்லுயிரியப்பகுதிகள்(Hot Spot)என அறிவிக்கப்பட்டு அதி முக்கியத்துவம் தரப்படுகிறது IUCN எனும் அமைப்பு ஆண்டுதோறும் அழியும் நிலையில் உள்ள உயிரிகளைப்பற்றி  Red Data Bookஎனும்  புத்தகத்தை
வெளியிடுகிறது
பல்லுயிரியத்தைக்காப்பது நமது மிக முக்கிய செயல் நாம் வாழும் இப்பூமியை நமது சந்ததிகளுக்கு பாதுகாப்பாக கொடுப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை

டிஸ்கி
பதிவின் நீளம் கருதி பல்லுரியத்தை பற்றிய பல தகவல்கள் தரப்பட வில்லை நண்பர்கள் விரும்பினால்  அதைப்பற்றிய தகவல்களை தனிப்பதிவாக இடுகிறேன்

7 comments to “உயிர் வாழ்வின் ஆதாரமும் பரிமாணச்சங்கிலியும் அழிந்து போகுமா ?”

  • 1 September 2012 at 20:04

    சகோ குரு,

    அருமையான பதிவு. Biological Diversity என்பத்ற்கு பல்லுயிரியம் அருமையான தமிழாக்கம் ,பல்லுயிரியம் என்பது இயற்கையால் நெடுங்காலமக் பாதுகாக்கப் பட்டு வந்த விடயம்.இத்னை அழிக்கும் மனிதனின் செயல் தனக்கே தீங்கு செய்யும் செயல்.

    தொடர்கிறேன்.
    நன்றி

  • 1 September 2012 at 20:06

    Dear Bro Kindly attach the followers widget in your blog.
    Thank you

  • 1 September 2012 at 20:43
    Guru says:

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றிகள் தோழர் , மதம் , அறிவியல் கலைகள் , கணிதம் , பரிமாண தத்துவம் என்று சகல துறைகளைப்பற்றியும் மிக மிக தெளிவாகவும் இரசிக்கும்படியாக எழுதுவதில் சுஜாதாவிற்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன் உங்களை உள்ளன்போடு பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறேன் . எனது வலைப்பூவின் அடிப்புறம் கூகுள் கனெக்ட் பின் தொடர்பர்கள் விட்ஜெட் உள்ளது சகோ நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என நினைக்கிறேன்

  • 1 September 2012 at 20:48

    Thank you brother,I am following you

  • 5 September 2012 at 22:31
    Rasan says:

    பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்.

  • 6 September 2012 at 07:16
    Guru says:

    Thank u Rasan

  • 16 September 2012 at 21:37
    Unknown says:

    மனிதனின் செயல் தனக்கே தீங்கு அருமை

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates