பேருந்து விபத்துகளில் சிதறியிருக்கும் கண்ணாடி துகள்களை பார்த்து இருப்பீர்கள் கண்ணாடியின் முனைகள் மொழுக்கென்று இருக்கும் அது நமது உடல் மீது மோதினாலும் காயம் ஏற்படாது ஆனால் நாம் கண்ணாடியை உடைத்தால் கூர்மையாக உடைந்து ஆபத்தை விளைவிக்கும்.
எப்படி சிதறலாக உடையும் கண்ணாடி தயாரிகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் முன் மணலில் இருந்து கண்ணாடி தயாரிப்பது எப்படி என்ற எனது முந்தைய பதிவினை படித்தால் புரிதல் இன்னும் சுலபமாக இருக்கும் எனது முந்தைய பதிவினை படிக்க கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்
உடையாத கண்ணாடி கண்டுபிடிப்பின் சுவையான வரலாறு
1903 ஆண்டுவாக்கில் பாரீஸில் ஒரு புது வித மோகம் பரவியது அது என்னவென்றால் குதிரையை விட வேகமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதுதான் இதனால் தொடர் விபத்துகள் அதிகமாயின விபத்துகளின் போது கண்ணாடிகள் உடைந்து ஓட்டுநர்களின் உயிர்களை கொல்லும் செய்திகள் நாளிதழ்களில் வழக்கமான செய்திகளாயின இதை தவிர்க்க பல விஞ்ஞானிகள் மூளையை கசக்கி ஆராய்ந்து கொண்டு இருந்தனர் ஆனால் இவ்வித ஆராய்ச்சிகளில் ஈடுபடாத வேதிபொருள்களின் தன்மைகளை ஆராயும் எடொர்டு பெனிடிக்டஸ் என்ற பிரெஞ்சு வேதியியல் விஞ்ஞானி தன்னுடைய வழக்கமான சோதனைக்கு தேவைப்படும் ஒரு வேதிப்பொருள் உயரத்தில் ஒரு கண்ணாடி குடுவையில் இருந்தது . உதவிளார் இல்லாததால் தானே ஏணி மூலம் ஏறி அதை எடுத்தார் எடுக்கும் போது அருகில் இருந்த ஒரு காலியான கண்ணாடிகுடுவை கை தவறி கீழே விழுந்தது உடைந்த கண்ணாடிகுடுவையை பார்த்த எடொர்டு பெனிடிக்டஸ்க்கு தன் கண்களை தானே நம்ப முடியவில்லை ஏன் எனில் உடைந்த கண்ணாடி குடுவை கூர்மையாக உடையவில்லை சிதறலாக உடைந்து இருந்தது மேலும் குடுவையின் உருவம் கூட மாறவில்லை . இந்த அதிசயம் எப்படி என்று யோசித்த எடொர்டு பெனிடிக்டஸ்க்கு ஒன்று நினைவில் வந்தது பல மாதங்களுக்கு முன்பு அந்த குடுவையில் “ செல்லுலோஸ் நைட்ரேட் “ என்ற பொருளை வைத்து இருந்ததும் அதை சரியாக மூடிவைக்காததும் நினைவுக்கு வந்தது “ செல்லுலோஸ் நைட்ரேட் “ முழுதும் ஆவியாகி இருக்கிறது ஆனால் கண்ணாடி குடுவையில் “ செல்லுலோஸ் நைட்ரேட் “ ஆனது ஒரு மெல்லிய படலத்தை உருவாக்கி இருந்து இருக்கிறது அதனால்தான் கண்ணாடி குடுவை கீழே உடைந்தும் கூர்மையக உடையாமல் சிதறலாக உடைந்து இருக்கிறது என்று எடொர்டு பெனிடிக்டஸ் அறிந்து கொண்டார் . எதிர்பாராதவிதமாக தற்செயலாக நிகழ்ந்த இந்நிகழ்ச்சியின் மூலம் விபத்துகளின் போது பாதிப்பினை ஏற்ப்படுத்தாத கண்ணாடியினை கண்டுபிடித்து புகழின் உச்சிக்கு போனார்.
தற்பொழுது பேருந்துகளின் கண்ணாடிகள் உட்புறகண்ணாடி அடுக்கு மற்றும் வெளிப்புற கண்ணாடி அடுக்கிற்கு நடுவில் செல்லுலோஸ் என்ற பிளாஸ்டிக் அடுக்கு என மூன்று அடுக்குகளால் தயாரிக்கப்படுகிறது இதனால்தான் விபத்துகளின் போது கண்ணாடி கூர்மையாக உடையாமல் சிதறலாக உடைந்து பல லட்சம் உயிர்களை காத்து வருகிறது மேலும் அழகு மிளிரும் கட்டிடங்கள் கட்டும் துறையிலும் , பாதுகாப்பு துறையிலும் தவிர்க்கமுடியாத பொருளாக உள்ளது உடையாத கண்ணாடிகள்
அருமையா எழுதுறீங்க .........
தொடருங்கள் ..
நன்றி