ஞாயிறு, 20 நவம்பர், 2011

பூக்களில் இத்தனை நிறங்களா – அறிவியல் விளக்கம்

,

கற்பனைக்கே  எட்டாத  நிறங்களில் மலர்ந்து  சிரிக்கும் வண்ண வண்ண பூக்களின் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை ஆனால் பூக்களின் வண்ணங்களுக்கான அறிவியல் காரணம்  யாருக்கும் தெரிவது இல்லை வாருங்கள்  நண்பர்களே பூக்களின் நிறங்களுக்கான அறிவியலை அறிந்து கொள்வோம்.

பூக்களின் பல்வேறு நிறங்களுக்கு காரணம் ஆந்தோசயனின் எனும் நிறமி ஆகும் . ஆந்தோசயனின்( ஆந்தோபூ  சயனின்நீலம் )  என்பது  சர்க்கரைப்பகுதி இணைந்த ஒரு கரிமச்சேர்மம் இது .பூக்கள், கானிகள், இலை, வேர் என தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது . 1920-களில் சர் ராபர்ட்  ராபின்சனும் அவரது குழுவும் ஆந்தோசயனின்  நிறமிகளை மூன்று வகைப்படுத்தினர் அவைகள் 
1.பெலார்கோனிடின் , 2.சயனிடின் ,3.டெல்பினிடின் ஆகும்  
ஆந்தோசயனில்  ஹைட்ராக்ஸில்  தொகுதிகள் எனப்படும் OH தொகுதிகளின் எண்ணிக்கை , பினைக்கப்பட்ட இடம் , வினையில்  ஈடுபடுவதற்ககான திறம் ஆகியவற்றைப்பொருத்து  நீலம், ஊதா, சிவப்பு , மஞ்சள் என பூக்களின் நிறங்கள் அமைகின்றன.

1943 –இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பூக்களின் நிறங்களுக்கும் உலோகங்களுக்குமான  தொடர்புகள் ஆராயப்பட்டது பூக்களின்  நீல நிறத்திற்க்கு காரணம்  அலுமினியச்சத்துகள், ஊதா நிறத்திற்க்கும் , சிவப்பு நிறத்திற்க்கும் காரணம் இரும்புடன்  சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட உலோகங்கள் காரணம் என கூறப்பட்டது . மேலும்  தாவரங்களில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிறங்கள் மூலம் அறிந்து அதற்கு தகுந்த  நடவடிக்கை  எடுத்தால்  தாவரங்கள் செழித்து வளரும் எனவும் கூறப்பட்டது.

ஒரு பூவில்  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆந்தோசயனின்கள் இருக்கலாம் மேலும் குளோரோபில்கள்  போன்ற  அரோமேட்டிக் கரிமச்சேர்மங்கள் இருக்கலாம் . ஆந்தோசயனின்கள் அரோமேட்டிக் கரிமச்சேர்மங்களுடன் இணைந்து  பல்வேறு நிறங்களில் பூக்களை பூக்கச்செய்கின்றன மேலும் பருவகாலமாற்றங்கள் , மரபியல் மாற்றங்கள் போன்றவற்றால்  ஆந்தோசனிகள் மாற்றங்களுக்கு உட்படுகின்றன . ஆந்தோசயனின்களை குரோமோட்டோகிராபி  எனப்படும் வண்ணபகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவற்றின் வேதிக்கட்டமைப்பினை  அறியமுடியும்  இதனால் புதிய புதிய வண்ணங்களில் பூக்களினை பூக்கச்செய்ய முடியும். பூக்களின் அழகில் மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள், பூச்சிகள் , வண்டுகள்  போன்றவைகளும் கவரப்படுகின்றன இதனால் தாவரங்களில் அயல்மகரந்தச்சேர்க்கை  நடைப்பெற்று தாவரங்களின்  இனப்பெருக்கத்திற்கு  ஆந்தோசயனின்கள்  உதவுகின்றன

2 கருத்துகள் to “பூக்களில் இத்தனை நிறங்களா – அறிவியல் விளக்கம்”

  • 20 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:46

    நல்ல தகவலை பகிர்தமைக்கு நன்றிகள்.

  • 21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:16
    suryajeeva says:

    அருமையான தகவல்கள், பகிர்வுக்கு நன்றி

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates