Resume என்பது வேலை தேடுபவர்களின் மந்திர சொல் திறமையிருந்தும் Resume ஐ சரிவர தயாரிக்காத்தால் வேலை இழந்தவர்கள் பலர். Resume என்பது உங்களைப்பற்றிய தெளிவான அறிமுகத்தை கொடுத்து உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாகும் . எனவே Resume தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் Resume தயாரியுங்கள் .
Sunday, 18 September 2011
Saturday, 17 September 2011
கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது செயற்கை உயிரி
Posted by
Guru
,
தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபனுக்களை மாற்றம் செய்து பல்வேறு சாதனைகளை விஞ்ஞானம் படைத்திருந்தாலும் முதல் முறையாக கணினி மென்பொருள் மூலம் செயற்கை மரபனுவை வடிவமைத்து செயற்கை இரசாயணங்கள் மூலம் புதிய உயிரி உருவாக்கப்பட்டுள்ளது.
PDF வடிவில் இலவச ஆங்கிலம் - தமிழ் கணினி Dictionary
Posted by
Guru
,
அண்ணா பல்கலைகழகத்திற்காக தமிழ் கணினி அறிஞர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஆங்கிலம் – தமிழ் கணினி அகராதி இணைய தேடலில் எனக்கு இலவசமாக கிடைத்தது . நான் பெற்ற பயன் அனைவரும் பெற வேண்டும் என்பதால். ஆங்கிலம் – தமிழ் அறிஞர்களுக்கு எனதுஉருவாக்கிய தமிழ் அறிஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை கூறிவிட்டு ஆங்கிலம் – தமிழ் கணினி டிக்ஸ்னரியை பதிவிடுகிறேன்
கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி மிகுந்த பயன் பெற வாழ்த்துகள்
அசத்தலான செக்போஸ்ட் IQ புதிர்
Posted by
Guru
,
சென்னையிலிருந்து சேலம் வரை 25 செக்போஸ்ட்கள் உள்ளன .நீங்கள் இரண்டு மூட்டையில் மூட்டைக்கு 25 தேங்காய்கள் வீதம் கொண்டு வருகிறீர்கள் .ஒவ்வொறு செக் போஸ்டிற்க்கும் ஒரு மூட்டைக்கு ஒரு தேங்காய் சுங்க வரியாக தர வேண்டும் . மூட்டையின் கொள்அளவு 25 தேங்காய்கள் மட்டுமே . நீங்கள் புத்திசாலி எனில் சேலம் வரும் போது உங்களிடம் 12 தேங்காய்கள் வைத்திருக்க முடியுமா ?
Friday, 16 September 2011
Wednesday, 14 September 2011
மரணத்தை வெல்லப்போகிறாதா ஸ்டெம்செல் ஆராய்ச்சி ?
Posted by
Guru
,
சித்தர்களில் தொடங்கி இன்றைய நானோ தொழில்நுட்பம் வரை மனிதனுக்கு ஒரு தீராத தாகம் இருக்கிறது அது 100 வருடம் வாழ்வது எப்படி என்ற தாகம்தான் அதற்காகத்தான் ஒரு பக்கம் ஆண்மீகம் , யோகாசனம் என்ற பெயரில் கார்பரேட் சாமியார்கள் நுனிநாக்கு ஆங்கிலம் மூலம் மக்களை மாக்களாக்கி(விலங்குகள்) கொண்டு வருகிறார்கள் .எங்கேயாவது தீர்வு இருக்கிறதா என மருத்துவதுறையும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது .
ஸ்டெம் செல் ஆராய்ச்சி என்பது பெண்ணின் கருமுட்டையில் உள்ள உட்கருவை நீக்கிவிட்டு ஆணின் விந்தணுச்செல்லின் உட்கருவுடன் இனைத்து புதிய கரு உண்டாக்கப்படுகிறது 8 , 9 வாரங்களில் “எம்பிரியோ” எனப்படும் வளர்ச்சி நிலை உருவானதும் நமக்கு தேவையான மரபணுச்செல்களை பிரித்து அதன் வளர்ச்சிப்பாதையை மாற்றி நமக்கு தேவையான சிறுநீரகமோ, இதயமோ , கல்லீரலோ செய்து கொள்ளலாம்.
ஸ்டெம் ஆராய்ச்சி மூலம் சிறுநீரகமோ, இதயமோ , கல்லீரலோ புத்தம் புதிதாய் தயாரித்து மனிதனுக்கு பொருத்தினால் அவன் ஆரோக்கியமுடையவன் ஆகிறான் . இதே ரீதியில் கண்கள், மூக்கு, காது , நுரையீரல் என மாற்றிக்கொண்டே போனால் மனிதனின் வாழ்நாள் நீண்டுகொண்டே போகும் .மனிதனின் உடல் உறுப்புகள் புதிதாகும் போது மனிதனும் புதியவனாகிறான் . இந்த முறைக்கு “மறு அமைப்பு சித்தாந்தம்”(Reset Theory) என்று பெயர் ஆகவே மனிதன் மரணத்தை வென்று சாகவரம் பெற சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
இத்தகைய ஆராய்ச்சிகள் அமெரிக்க உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சோமோர் பென்சர் ஆராய்ச்சி கூடத்தில் மிக மிக ரகசியமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது . உலகின் வேறு பகுதிகளிலும் நடைபெற்று கொண்டு இருக்கின்றது . இது வருங்காலத்தையே மாற்றக்கூடியா ஆராய்சியாக இருப்பதால் ஆதரவும் ,எதிர்ப்பும் அதிகமாக காணப்படுகிறது . மனிதன் மரணத்தை வெல்ல பார்க்கிறான்
இயற்கைதான் இதற்க்கு தீர்ப்புசொல்லும்
Subscribe to:
Posts (Atom)


