வியாழன், 9 மே, 2013

பேரிளம் பெண்ணொருத்தியின் அலைபேசி எண்

,

பேருந்தின் முன்னிருக்கையில்
பேரிளம் பெண்ணொருத்தி
காமம் தின்ற பேச்சுகளை
துப்பிக்கொண்டிருந்தாள்
அருகிலிருப்பவரோ
அவளின்பால் வீரியமாகி
கொண்டிருந்தார்
அவளோ பேச்சினுடே
சிணுங்கிகொண்டு
அலைபேசி எண்னை 
தெரிந்ததெப்படியென
வினவிக்கொண்டிருந்தாள் ….
தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்க்களில்
சம்மனமிட்டுக்கொள்கிறது
வாழ்க்கை ……
விரைந்து செல்கிறது பேருந்து.

0 கருத்துகள் to “பேரிளம் பெண்ணொருத்தியின் அலைபேசி எண் ”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates