சித்தர்களின் காலத்திலிருந்தே ரசவாதம் எனும் உலோக மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகள் நிலவிவந்தன அதனால்தான் பாம்பாட்டி சித்தர்
“ செப்பரிய மூன்றுலகம் செம்பொன் ஆக்குவோம் “ என்று பாடியிருக்கிறார் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் செயற்கையாக தங்கம் பெறமுடியுமா என ஆராய்ந்து வந்துள்ளனர்.
அறிவியலில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுத்த ரூதர்போர்டு , ரான்ட்ஜென், ஹென்றிபெக்குரோல் போன்றோர் அணுக்களை பற்றிய தெளிவான கருத்துகளை கூறினர் இதன் மூலம் ஓர் உலோக அணுவினை மற்றொரு உலோக அணுவாக மாற்ற முடியுமா என அறிவியல் நோக்கில் ஆராயதொடங்கினர் இருந்தாலும் ஆரம்பக்காலங்களில் அதற்கு தேவையான கருவிகள் இல்லாததால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை .
எந்த ஓரு அணுவின் உள்ளும் எலெக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான் என மூன்று அடிப்படைத்துகள்கள் உள்ளன.எலெக்ட்ரான்கள் எதிர் மின்சுமை பண்பும், புரோட்டான் நேர்மின்சுமை பண்பும் , நியூட்ரான் மின்சுமையற்றும் இருக்கும் . புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து உட்கருவை தோற்றுவிக்கின்றன. உட்கருவை எலெக்ட்ரான்கள் சுற்றுகின்றன எலெக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான் ஒவோரு உலோகத்திற்க்கும் வேறுபடும் இவைகள்தான் ஒரு உலோகத்தின் பண்பினை தீர்மானிக்கிறது
அறிவியல் நோக்கில் ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
லெட் எனப்படும் காரீயத்தின் உட்கருவின் எடை (அணு எடை) 207 ஆகும் இதில் 82 புரோட்டான்களும் 125 நியூட்ரான்களும் உள்ளன . சைக்க்ளோட்ரான் எனும் கருவியின் துனை கொண்டு உட்கருவினைச்சிதைத்து 3 புரோட்டான்களும் சில நியூட்ரான்களும் வெளியேற்றிவிட்டால் 79 புரோட்டானகளும் அதற்கு இனையான நியூட்ரான்களும் கொண்ட தங்க அணு கிடைத்து விடும் இவ்வாறு உலோக மாற்றம் செய்யும் போது சில கதிரியக்க ஐசோடாப்புகளும் கிடைக்கும் இவற்றை மாசு நீக்கி சுத்தம் செய்வதற்க்கு மிக மிக அதிக செலவாகும் சுருங்க சொன்னால் ஒரு கிராம் தங்கம் பெறுவதற்கே சில இலட்சரூபாய்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பூமியின் சுரங்கங்களில் இருந்து தங்கம் வெட்டி எடுத்து சில ஆயிரங்களில் கிடைக்கும் போது சில இலட்சங்கள் செலவு செய்து தங்கம் உருவாக்குவானேன் என நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது நண்பர்களே . அலுமினியம் அறிமுகம் ஆன போது அதை பணபலம் மிக்க செல்வந்தர்கள் மட்டுமே வாங்கும் பொருளாக இருந்தது ஆனால் இன்று அலுமினியம் பாத்திரங்களின் பயன்பாடும் மின்சாதன பொருட்களின் பயன்பாடும் என அலுமினியம் ஏழை எளிய மக்களின் தோழனாக விளங்குகிறது .
உலோகமாற்றச்சோதனைகள் இப்போதுதான் அறிவியல்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறது. யாருக்கு தெரியும் வருங்காலங்களில் இத்துறையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் ஏற்ப்பட்டால் உற்பத்தி செலவு குறைந்து தங்கம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாகவும் மாறக்கூடும் ஆம் நண்பர்களே அறிவியல் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.