Saturday, 21 April 2012

மௌனத்தை மொழிபெயர்க்கும் கருவி

,
வாழ்வின் தீராத
பக்கங்களில்
நிரம்பியிருக்கும்
நம் மௌனத்தின்
வார்த்தைகளை
மொழி பெயர்க்கும்
கருவி
காதல்

தோற்றபின்னும் தொடரும் காதல்.

,
காமமாகி கசிந்துருகி
விம்மி அடங்கும்
தருணங்களில்
எனை ஏமாற்றியதை
மறந்து போயிருப்பாய்……
எதிர்படும் விளம்பரபலகையில்
உன் பெயரை  
பார்த்து
அவஸ்தையுடன்
கடந்து போகையில் எங்கிருந்தோ
ஒலிக்கும் உனது
அலைபேசியின் அழைப்புமணி
பாடல்

Sunday, 15 April 2012

அட்டகாசமான கேம்ஸ்கள் , Flash Games , வால்பேப்பர்கள், இலவச டவுன்லோட்

,
அட்டகாசமான கேம்ஸ்கள், வால்பேப்பர்கள் , சாப்ட்வேர்கள், போன்றவற்றின்  அறிமுகத்தோடு அவற்றின் நேரிடையான டவுன்லோட் லிங்குகள் அடங்கிய நோட்பேட் டாக்குமென்டை பதிவேற்றி உள்ளேன் . உங்களுக்கு தேவையானவற்றை நேரிடையாக  டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் . சில டவுன்லோட் லிங்குகளில் 20 , 15, கேம்ஸ்கள் தொகுப்பாக காணப்படும் . டவுன்லோட் செய்து விளையாடி மகிழுங்கள்
                  

Friday, 13 April 2012

முகம் பொலிவு பெற மூலிகை ப்ளீச் செய்யும் முறைகள்

,
வீட்டில் கிடைக்கும் எளிய மூலிகை பொருட்களின் மூலம் மூலிகை ப்ளீச் நாமே தயாரிக்கலாம் இது எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது . கடைகளில் கிடைக்கும் விதவிதமான கிரீம்களை வாங்கி பூசுவதன் மூலம்  நமது முக அழகை நாம் கெடுத்துக்கொள்கிறோம் இந்த மூலிகை ப்ளீச்சை ஆண்களும் பயன்படுத்தலாம்
மூலிகை ப்ளீச்  செய்ய தேவையான பொருட்கள்
தக்காளி -1
ஆரஞ்சு-1
பப்பாளி -1 துண்டு
வாழைப்பழம் -1
வெள்ளரிக்காய்-1 துண்டு
கேரட் -1  
எழுமிச்சை - 1
முள்தானி மட்டி பவுடர் -1 பாக்கெட்
( பேன்ஸி ஸ்டோர்களில் எளிதாக கிடைக்கும் )

செய்முறை
தக்காளி ,ஆரஞ்சு,பப்பாளி,வாழைப்பழம்,வெள்ளரிக்காய்,கேரட் , எழுமிச்சை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து அதில் முள்தானி மட்டி பவுடர் சேர்த்து கலக்கவும் . இந்த கலவையை முகம் முழுவதும் பூசி ஒரு அரை மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும் .  இதை ஒரு சில வாரங்கள்  தொடர்ந்து  செய்யவும் உங்களின் முகம் பொலிவாக மாறும் .
உடனடி ப்ளீச் செய்ய சில குறிப்புகள்.
* உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து  முகத்தில் பூசி 15 நிமிடங்கள் பின்பு கழுவினால், முகம் ப்ளீச் செய்யப்பட்டு  புத்துணர்ச்சியாக காணப்படும்

* வெள்ளரிச்சாறு , எழுமிச்சைச் சாறு  இரண்டையும்  கலந்து பூசி 15  நிமிடங்கள் பின்பு கழுவினால் , முகம் ப்ளீச் செய்யப்பட்டு  புத்துணர்ச்சியாக காணப்படும்

Wednesday, 11 April 2012

சுஜாதாவின் நாடகங்கள் இலவச பதிவிறக்கம்

,

நண்பர்களே  காலத்தை வென்ற கலைஞன்  சுஜாதாவின்  சில நாடகங்களை  PDF வடிவில் இலவசமாய்
தந்துள்ளேன்  ஏற்கன்வே  PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள்  ஒரே  இடத்தில் என்ற பதிவு  இட்டு  இருந்தேன்

http://www.nilanilal.blogspot.com/2012/04/pdf.html

 நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்குகாக  அவரின்  நாடகங்கள்  சிலவற்றையும்  தற்போது  பதிவேற்றுகிறேன் .
இணையத்தில்  இலவசமாய்  கிடைத்தவற்றை  உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்
 உரிமை  உள்ளவர்கள்  ஆட்சேபம்  தெரிவித்தால்  வலையில்  இருந்து  நீக்கி விடுவேன்
கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி  மூலம் பதிவிறக்கி படித்து  இன்புறுங்கள்





Wednesday, 4 April 2012

PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்

,


நண்பர்களே  சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி  இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ஜாம்பவானின் 19 படைப்புகளை உங்களுக்கு தந்துள்ளேன்  இனைய தேடலில் எனக்கு கிடைத்த நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .உரிமை உரியவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால்  வ்லையில் இருந்து நீக்கி விடுவேன் .


பதிவிறக்கச்சுட்டி
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates