Monday, 7 November 2011

மைக்ரோவேவ் ஒவன் உருவான விதம் உங்களுக்குத் தெரியுமா ?

,

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் , ஹிட்டலரின் நாஜிப்படைகளை கண்கானிக்க பல்வேறு உத்திகளை கண்டுபிடித்தனர் அதில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு மைக்ரோ அலைகள் எனப்படும் நுண்அலைகளை உருவாக்கும்மேக்னெட்ரான்ஆகும் இது ஒரு வெற்றிடக்குழாய் போல இருக்கும் இதை  ராடர் சாதனத்தில் பொருத்தி நாஜிக்களை வேவு பார்த்தனர் .

ரேதாயன்(Raytheon) “என்ற நிறுவனம்  இராணுவத்திற்க்கான பாதுகாப்பு தளவாடச்சாமான்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்  இதில் பணிபுரிந்த  பெர்சிலி பாரோன் என்ற விஞ்ஞானி மேக்னெட்ரான் கருவியின் மைக்ரோவேவ் மூலம் வேறு எந்த எந்த வகையில் பாதுகாப்பு செய்யலாம் என ஆராய்ந்து கொண்டு இருந்த போது அவரது சட்டையில் இருந்த சாக்லெட் துண்டுகள் உருகி வழிய ஆரம்பித்தது அப்போது அதன் காரணம் அப்போது அவருக்கு விளங்கவில்லை .வேறு ஒரு நாள்  தன் வீட்டில் சோதனை செய்து கொண்டு இருந்த போது மேக்னட்ரான் கருவியின் அருகில் இருந்த சில சோள விதைகள பொறிந்து இருப்பதை கண்டார் அவரின் மூளையில் மின்னல் அடித்தது தன்னுடைய சட்டைப்பையில் அன்று வைத்திருந்த சாக்லெட் துண்டுகள் உருகியதிற்க்கும் காரணம் மேக்னட்ரான் கருவி மூலம் உருவான மைக்ரோ அலைகள்தான் என கண்டு கொண்டார் அதை உருதிப்படுத்த மேலும் கொஞ்சம் சோளவிதைகளை மேக்னட்ரான் கருவியின் அருகில் வைத்தார் அவைகள் சில  நொடிகளில் பொறிந்தது இவ்விதம் தான் பாப்கார்ன் உருவானது.

மேக்னட்ரான் கருவி மூலம் உணவுப்பொருள் தயாரிக்க முடியுமா
என புதிய கோணத்தில் ஆராய்ச்சியை தொடங்கினார் பெர்சிலி பாரோன் . தன்னுடைய தளராத கடின முயற்சிக்குப்பின் சிறு கதவுடன் கூடிய உலோகப்பெட்டியை உருவாக்கினார் அதனுள் மின்காந்தப்பரப்பையும் உருவாக்கினார் இதனால் பெட்டியில்  உருவான ஆற்றல் வெளியேறுவது  தடுக்கப்பட்டது . இதனுள் வைக்கப்பட்ட உணவுப்பொருள்கள் ஒரு சில நிமிடங்களில் வெந்து போனது , உணவு பொருள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உணவு பொருள்களின் தன்மைகளும் மாறமல் இருந்த்து இக்கருவியின் சிறப்பம்சம் ஆகும்இந்த சாதனம் ஒரு பெரிய குளிர் சாதனப்பெட்டியின் அளவுக்கு இருந்தது  மேலும் அதற்க்கு 2000 வாட் மின்சாரமும் தேவைப்பட்டது பின்பு வடிவமும் மின்சர நுகர்வும் குறைக்கப்பட்டு அமெரிக்க மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது . பின்பு உலக நாடுகளுக்கும் பரவி மக்களின் அன்றாட உணவுப்பொருள் தயாரிப்பில் தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டது  மைக்ரோ ஓவன்.

Sunday, 6 November 2011

ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படங்கள் ஒரு அறிமுகம்

,
ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படங்கள் பார்க்க பார்க்க பரவசத்தை ஏற்படுத்தி நம்மை மாய உலகத்திற்கு அழைத்து செல்பவை இந்த புகைப்படங்களை பார்க்க 3டி கண்ணாடிகள் தேவையில்லை வெறும் கண்களால் பார்க்க முடியும் .
ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படங்களை கண்களுக்கு ஒரு அடி தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் புகைப்படத்தின் ஏதாவது ஒரு புள்ளியில் இரண்டு கண்களின் பார்வைகளையும் குவித்து ஒரு சில நிமிடங்கள் பார்க்க வேண்டும் பின் மெதுவாக அந்த புகைப்படம் முழுவதையும் பார்க்க வேண்டும் அப்படி பார்த்தால் புகைப்படத்தின் ஒரு சில இடங்கள் பள்ளமாகவும் சில இடங்கள் மேடாகவும் தெரிய ஆரம்பிக்கும் பின்பு  மேலும் கூர்ந்து கவனித்தால் ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படத்தில் மறைந்து இருக்கும் உருவம் தெரிய ஆரம்பிக்கும் நம்மை மாய உலகத்திற்கு அழைத்து செல்லும்.







   
எந்த ஒரு 3டி படத்தை பார்த்தாலும் அதில் மறைந்து இருக்கும் உருவம் தெரிய ஆரம்பித்து உங்களை வியப்பில் ஆழ்த்தும் முதல் முறை பார்க்கும் போது கண்களை அதிக சிரமப்படுத்தி பார்க்காதீர்கள். ஒரு முறை 3டி புகைப்படங்களை பார்க்க பழகிக்கொண்டால் உங்களுக்கு பின் சிரமம் ஏற்படாது . 3டி புகைப்படங்களை பார்ப்பது ஒரு மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு அனுபவமாக உங்களுக்கு இருக்கும்.

டிஸ்கி 1
மொபைல் பதிவிடல் செய்வதால் சில 3டி புகைப்படங்களை மட்டுமே இனைத்துள்ளேன் . நீங்கள் Google மூலம் 3D அல்லது Stereogram  என டைப் செய்து படங்களை தேடினால் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் உங்களுக்கு கிடைக்கும். 3டி புகைபடங்களை பார்த்து மறைந்து இருக்கும் உருவங்கள் தெரிய ஆரம்பித்து நீங்கள் மாயஉலகத்தை உணர ஆரம்பித்தால்  கருத்துரை இடுங்கள் நண்பர்களே 

Friday, 4 November 2011

MS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்வது எப்படி ?

,

கணித சமன்பாடுகள் வாழ்வில் தவிர்க்கமுடியாதவை குறிப்பாக பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கணித சமன்பாடுகளின் பயன்பாடுகள் மிக மிக அதிகம் . நம்மில் பெரும்பாலோனர்கு MS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்யலாம் என்பது தெரியாமலே இருந்திருக்கும் .அன்புள்ள  நட்பு நெஞ்சங்களே வாங்க ! வாங்க ! MS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்ய கத்துக்கலாம்

MS Word 2003 அல்லது அதற்கு முந்தையை ஆபிஸ் பதிப்புகளில் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்ய  Insert மெனுவில் Object என்ற துனை மெனுவினுல் Microsoft Equation Editor என்பதை தேர்வு செய்ய வேண்டும் .பின்பு அதில் காணப்படும் வகைகெழுசமன்பாடு, தொகைகெழுசமன்பாடு ,அணிகள், Sin, Cos , Tan  போன்ற திரிகோணமிதி குறியீடுகள் என பல வகையான குறியீடுகள் உள்ளன . நமக்கு தேவையான  சமன்பாட்டு குறியினை தேர்வு செய்து x ,y,,z போன்ற மாறிகளையோ  அல்லது 1,2,3…… போன்ற மாறிலிகளையோ உள்ளீடு செய்து கொள்ளலாம்.

MS Word 2003 அல்லது அதற்கு பிந்தையை ஆபிஸ் பதிப்புகளில் Insert மெனுவின் கீழ் உள்ள பட்டியில் இருந்து Equation என்ற மெனுவினை நேரிடையாக தேர்வு செய்து கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்து கொள்ளலாம்

Thursday, 3 November 2011

உடையாத கண்ணாடி கண்டுபிடிப்பின் சுவையான வரலாறு

,

பேருந்து விபத்துகளில் சிதறியிருக்கும் கண்ணாடி துகள்களை பார்த்து இருப்பீர்கள் கண்ணாடியின் முனைகள் மொழுக்கென்று இருக்கும் அது  நமது உடல் மீது மோதினாலும் காயம் ஏற்படாது  ஆனால் நாம் கண்ணாடியை உடைத்தால் கூர்மையாக உடைந்து ஆபத்தை விளைவிக்கும்.

எப்படி சிதறலாக உடையும் கண்ணாடி தயாரிகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் முன் மணலில் இருந்து கண்ணாடி தயாரிப்பது எப்படி என்ற எனது முந்தைய பதிவினை படித்தால் புரிதல் இன்னும் சுலபமாக இருக்கும்  எனது முந்தைய பதிவினை படிக்க கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்

Wednesday, 2 November 2011

PDF வடிவில் தமிழில் முழுமையான இலவச மருத்துவ மென்நூல்

,

நண்பர்களே உங்களின் மொபைல்களிலும் , கணினிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய  
அழகு தமிழில் விரிவான  
இயற்கை மருத்துவதகவல்கள்  அடங்கிய மென்நூலை 
பதிவிட்டு உள்ளேன்
இது நான் உருவாக்கியது இல்லை இணைய தேடலில் எனக்கு கிடைத்தது தமிழ் கூறும் நல்லுலகம் ஆரோக்கியமுடன் திகழவேண்டும்  என்ற ஒரே காரணத்திற்காக  பதிவிட்டு உள்ளேன் இதை உருவாக்கியது முகம் தெரிய அன்பு உள்ளம் அனுராதா அவர்கள் .
திரு அனுராதா அவர்களின் கடின முயற்சிக்கு பாரட்டுதல்கள் தெரிவித்துவிட்டு பதிவிடுகிறேன் இந்நூலுக்கு உரியவர் ஆட்சேபம் தெரிவித்தால் இந்நூலை எனது வலையில் இருந்து நீக்கி விடுவேன் கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்படுத்துங்கள் இந்நூலின் சிறப்புகளை நான் சொல்வதைவிட கருத்துரையில் நீங்கள் சொல்வீர்கள் என நம்புகிறேன்  உங்களுக்கு பயன்கிடைத்தது எனில் கருத்துரை இடுங்கள்  நேசம் நிறைந்த நெஞ்சமுடன்
அ.குரு

Tuesday, 1 November 2011

சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ?

,

சயனைடுகளில் – பொட்டாசியம் சயனைடு(KCN) சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை அதிக நச்சு தன்மை கொண்டவை  இந்த வகை சயனைடுகளில் உள்ளா CN – அயனி தான் நச்சு பண்பிற்கு காரணம் .

சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினோடு இணைகிறது . ஹீமோகுளோபினுள் உள்ள இரும்பு அணுக்களோடு வினைபுரிந்து ஆக்ஸிஜன் இரத்தத்தில் சேருவதை தடை செய்கிறது இதனால் சுவாசம் தடைபடுகிறது மேலும் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் செல்ல முடியாத நிலையில் மரணம் சம்பவிக்கிறது . இத்துனை செயல்படுகளும் சில நொடிகளில் நடந்து முடிந்துவிடும் .சுருக்கமாக சொன்னால் சயனைடு உட்கொண்டு அது என்ன வித சுவை என உணரும் முன்பே மரணம் நிகழ்ந்துடும்.

சயனைடுகள் தங்கம் மற்றும் வெள்ளி சுத்தப்படுத்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது உண்மையில்  தங்கம்  ஜொலி ஜொலிக்க சயனைடும் ஒரு  காரணம்.
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates