Thursday 18 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 1

,

 

நவீனக் காலத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொருள்களின் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக அமைவது அறிவியல் சிந்தனைத் திறனே ஆகும். மனிதனின் சிந்தனைப் பெருக பெருக இயற்கை வளங்களை மனிதனுக்கு தேவையான அடிப்படைப் பொருளாக மாற்றுவதற்குரிய வழிமுறைகளும், அறிவியல் சிந்தனைகளால் உருவாக்கப்படுகின்றன.

இன்றைய தகவல் தொழில் நுட்பம், கணினி மற்றும் இணையம் உலகின் எந்த பகுதியிலும் உள்ள தகவல்களை அறியக் கூடிய வாய்ப்பு, இயற்கை வளங்களின் இருப்பு உட்பட அனைத்து வித தகவல்களையும், எந்தவொரு மனிதனும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை அறிவியல் சிந்தனைகளே நமக்குத் தருகின்றன. ஆகவேதான் இயற்கையின் எல்லா வளங்களைக் காட்டிலும் மனித வளம் என்றழைக்கப்படும் மனிதனின் அறிவியல் சிந்தனை வளமே தலையாயதாகக் கருதப்படுகிறது .

தொடக்க காலங்களில் அறிவியல் ஆய்வுக் கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு அரசுத் துறைகளிலும், பெரிய நிறுவனங்களிலும் பயன்படுத்தப் பட்டன. அதன்பின் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சிறு சிறு வணிக நிறுவனங்களுக்கும் பரவின. இன்றைக்கு வீடுகளிலும்கூட கணினிகள் உலா வருகின்றன.

வீட்டுப் பயன்பாடுகள் என்பவை பெரும்பாலும் பொழுதுபோக்கு மென்பொருள்களாகும். இன்றைக்கு, ஏறத்தாழ அனைத்து வீடுகளிலும் கணினிகள் இன்றிமையாத பொழுதுபோக்குச் சாதனமாக இடம் பெற்றுள்ளது. அதுபோலக் கணினியையும் வீட்டிலுள்ள குழந்தைகளும் பெரியவர்களும் பயன்மிக்க சாதனமாகப் பயன்படுத்துவதற்கு வழியுள்ளது. அதற்கான மென்பொருள் தொகுப்புகளைப் பார்ப்போம்.

ஊடக இயக்கிகள் (Media Players)

இந்த வகை மென்பொருள்கள் இசைப் பாடல்களைக் கேட்பதற்கும், நிழற்படக் காட்சிகளைப் பார்ப்பதற்கும் பயன்படுகின்றன. தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல் திரைப்படங்களைக் கணினியில் கண்டு களிக்க முடியும். இசைப்பாடல் ஆல்பங்கள், திரைப்பாடல் திரட்டுகள் கேட்பொலிக் குறுவட்டுகளில் (Audio CDs) , இணையத்தில் கிடைக்கின்றன.. அவற்றைக் கணினியிலுள்ள குறுவட்டு ( Hard disk ) இயக்கத்தில் வைத்து இயக்க முடியும். ஊடக இயக்கி மென்பொருள் அவற்றை இயக்குகிறது. இன்றைக்கு விண்டோஸ் மீடியா பிளேயர், வி எல் சி பிளேயர் , ரியல் பிளேயர், குவிக்டைம் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படும் ஊடக இயக்கிகளாகும்.

குரல் பதிவிகள் (Voice Recorder)

பேசுவதையும் பாடுவதையும் கணினியில் பதிவுசெய்து, கோப்புகளாக வட்டுகளில் சேமிக்க முடியும். அந்தக் கோப்புகளை இயக்கிப் பேச்சையும் பாட்டையும் மீண்டும் கேட்டு மகிழ முடியும். குரல் பதிவி (Voice Recorder) மென்பொருள் இதற்குப் பயன்படுகிறது. விண்டோஸ் இயக்க முறைமையில் ஒலிப்பதிவி (Sound Recorder) மென்பொருள் உள்ளிணைக்கப் பட்டுள்ளது.

பயன்பாட்டு மென்பொருட்கள் ( Application software)

 அலுவலகப் பயன்பாடுகள் , வரைகலை பயன்பாடுகள் , போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காக  மென்பொருள்கள் ஒருங்கிணைக்கப்பட்டு  வணிக நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் , அடோப் நிறுவனத்தின் தயாரிப்புகள்  உலகத்திலேயே மிகவும் அதிகமான கணினிகளில் பயன்படுத்தப் படுகிறது. இவற்றிற்கு மாற்றாக கட்டற்ற திற மூல மென்பொருட்கள் கிடைக்கின்றன .

அறிவியல் கற்பித்தல் மென்பொருள்கள்

               அறிவியல் கற்றல் கற்பித்தலில் பல்வேறு வணிக , இலவச மென்பொருள்கள் உள்ளன . இதன் ஒரு பகுதியாக  அறிவியல் உருவகப்படுத்துதல் (Science simulations )மென்பொருள்கள் பயன்படுகின்றன. இவ்வகையான உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் Online / Offline முறையில் கிடைக்கின்றன .

அறிவியல் கற்பித்தலில் அறிவியல் ஆய்வகம் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்க வல்லவை . இவைகளை உருவாக்க மிகுந்த பணச்செலவு ஆகும் மேலும் அதிக முன் எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும் ஏன் எனில் ஒரு சிறு தவறும் அதிக பாதிப்பினை உண்டாக்க கூடும் . ஆனால் அறிவியலில் உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் விர்ச்சுவல் லேப் ஆக செயல்படுகின்றன. இவ்வகையான மென்பொருளில் அறிவியல் ஆய்வகத்தில் நாம் செய்து கற்பது போலவே உருவகப்படுத்தும் மென்பொருளில் செய்து கற்க முடியும் இதனால் பொருட்செலவின்றியும் மிக மிக பாதுகாப்பாகவும் அறிவியல் ஆய்வுகளை மாணவர்கள் செய்து பயன் பெற முடியும் . 


மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்......


 

0 comments to “அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 1”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates