Sunday, 2 September 2012

அரசனின் ஏழு மகள்களும் முத்துக்களும் – கணிதப்புதிர்

,
ஒரு அரசனுக்கு ஏழு மகள்கள் இருந்தனர் அவனிடம் 49 முத்துக்கள் இருந்தன அதில் முதல் முத்தின் மதிப்பு ஒரு பொற்காசுகள் , இரண்டாவது முத்தின் விலை இரண்டு பொற்காசுகள் , மூன்றாவது முத்தின் மதிப்பு மூன்று பொற்காசுகள் நான்காவது முத்தின் மதிப்பு நான்கு பொற்காசுகள் இப்படியாக 49 வது முத்தின் மதிப்பு 49 பொற்காசுகள் . அரசன் தனது 49 முத்துக்களையும் தனது ஏழு மகள்களுக்கும் ஏழு  ஏழு முத்துக்களாக
பிரித்து தர வேண்டும்  ஆனால் முத்துக்களின் மதிப்பு சமமாக இருக்க வேண்டும் . நண்பர்களே உங்களால் 49 பொற்காசுகளின் மதிப்பு சமமாக பிரிக்க முடியுமா ?
முயற்சித்து பாருங்கள் இல்லை எனில் விடையை கீழே பாருங்கள்

கணிதப்புதிரின் விடை

நண்பர்களே  இந்த கணக்கு இயல்எண்களின் கூடுதலில்  அமைந்துள்ளது
1+2+3+4+................49
எனவே இயல்எண்களின் கூடுதல் காண சூத்திரம் = n(n+1)/2
                                             = 49(49+1)/2
                                             = 49(50)/2
                                             = 49(25)
                                             = 1225
அரசனுக்கு ஏழுமகள் எனவே 1225 ஐ  7 ஆல் வகுக்க
                                             = 1225/7
                                             = 175
எனவே 49 முத்துக்களின் மொத்த மதிப்பு 1225 இதை ஏழால் வகுத்தால் கிடைப்பது  175  . அரசன் தனது 49 முத்துக்களையும் தனது ஒவ்வொரு  மகள்களுக்கும் ஏழு முத்துக்களை கொடுத்தார் ஏழு முத்துக்களின் மதிப்பு 175  ஆக இருக்குமாறு பிரித்துக்கொடுத்தார்

வேர்டு பார்மெட்டில் 60 ரெஸ்யூம்கள் MS Word Format 60 Resume’s

,
Resume என்பது வேலை தேடுபவர்களின் மந்திர சொல் . திறமையிருந்தும் Resume ஐ சரிவர தயாரிக்காத்தால் வேலை இழந்தவர்கள் பலர். Resume என்பது உங்களைப்பற்றிய தெளிவான அறிமுகத்தை கொடுத்து உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாகும்  . எனவே Resume தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் . Resume தயாரிப்பு என்பது இன்றை இளைஞர்களுக்கு  சரிவர தெரிவது இல்லை  Resume தயாரிக்க உதவ பல இணைய தளங்கள் இருப்பினும் அதன் மூலம் சரியாக தயாரிக்க முடிவது இல்லை எனவே வேர்டு பார்மெட்டில் 60 மாடல் ரெஸ்யூம்களை தயாரித்து உள்ளேன்  இதை இலவசமாக பதிவிறக்கி  உங்கள் பெயர் முகவரி, திறமைகள் போன்றவற்றை எடிட் செய்து கொள்ளுங்கள் அவ்வாறு செய்யும் போது கீழ் கண்ட உதவிக்குறிப்புகளையும் கவனத்தில் கொள்ளுங்கள் . 60 மாடல் ரெஸ்யூம்களை வின் ஸிப் செய்து உள்ளேன் அதை நீங்கள் Extract செய்து கொள்ளுங்கள்



*  நீங்கள் எந்த நிறுவனத்திற்கு Resume அனுப்பும் போதும் ,எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை ஒரு விண்ணப்பமாக எழுதி அதனுடன் Resumeஐ இணைத்து அனுப்புங்கள் .
* Resume எழுதும் போது தாளின் இடது ஓரத்தில் முதலில் உங்கள் பெயரினை தெளிவாக எழுதுங்கள், வலது ஓரத்தில் உங்களின் சமீபத்திய தெளிவான புகைப்படத்தை இணையுங்கள்.

*  அதிகப்படியான கட்டங்கள், கலர்ஷேடுகள், தெளிவற்ற ஃபான்ட் , அதிகமான அடிக்கோடு இடுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்
*  இமெயில் முகவரியை குறிப்பிடும் போது உங்களின் பெயரோடு தொடர்புடைய இமெயில் முகவரியை கொடுங்கள் அதை விட்டு Jollyboy_Rsp@gmail.com போன்ற பெயர்கள் உடைய  இமெயில் முகவரியை கொடுக்காதீர்கள் அது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும்

*  நோக்கங்களை(Objective) தெளிவாக குறிப்பிடுங்கள்
*  கல்வித்துறை குறித்த தகவல்களை எளிமையாக கொடுங்கள்
*  உங்களின் தனித்துவமான திறனை குறிப்பிடுங்கள் அதை  தவிர்த்து கல்லூரியில் படித்த பாடங்களையெல்லாம் கொடுக்காதீர்கள்  உதாரணமாக
கல்லூரியில் படித்த J2EE,Visual Basic, Oracle, C++, HTML, Data Management போன்றவைகளை Resume இல் கொடுத்து இருந்தீர்களானால் அதை பற்றி உங்களை 10 நிமிடம் பேச சொன்னால் உங்களால் தொடர்ச்சியாக பேச முடியுமா  என யோசியுங்கள்.

* பிறந்த தேதி,திருமணநிலை, பாலினம், மதம் , தெரிந்த மொழிகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை சரியாக கொடுங்கள்.
*  Hw r u , Looking 4 ur reply , போன்ற SMS பாணியில் விவரங்களை கொடுக்காதீர்கள்
* நீங்கள் தயாரித்த Resumeஐ உங்களின் இரண்டு அல்லது மூன்று நண்பர்களிடம் கொடுத்து சரிபார்த்த பின்பே நிறுவனங்களுக்கு  அனுப்புங்கள்

*  இமெயிலில் அனுப்பும் போது PDF வடிவில் அனுப்புங்கள் இதனால்  ஃபான்ட் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்  
*  இமெயிலில் அனுப்பும் போது அட்டாச்மென்ட்களில் உங்களது Resumeக்கு உங்களின் பெயரில் பெயரிடுங்கள் உதாரணமாக   Guru resume போன்று கொடுங்கள் வெறுமனே Resume என  கொடுக்காதீர்கள்
*  இமெயிலில் அனுப்பும் போது சப்ஜெக்ட் லைனிலேயே முக்கியமான வார்த்தைகளை குறிப்பிடுங்கள் எக்காரணம் கொண்டும் சப்ஜெக்ட் இல்லாமல் இமெயில் அனுப்பாதீர்கள்
* உங்களது Resumeஐ அடிக்கடி புதிப்பியுங்கள் ஒரு முறை பிரின்ட் எடுத்துவிட்டு அதையே எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் .
Dear friends here I am attached 60 model Resume in Ms word format if you want model Resume please click here

Saturday, 1 September 2012

உயிர் வாழ்வின் ஆதாரமும் பரிமாணச்சங்கிலியும் அழிந்து போகுமா ?

,

இன்று உலகெங்கும் காலநிலைமாறிக்கொண்டு வருகிறது புவிவெப்பமயமாகி வருகிறது ,பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுகிறது  மனிதன் காடுகளை அழித்து குடியிருப்புகள் என்ற பெயரில் கான்ங்கிரீட் தீவுகளை ஏற்படுத்தி வருகிறான்  வேதிப்பொருள்களால் மண்ணை மலடாக்கியதால் உணவுத்தேவைக்கு மரபனுமாற்ற பயிர்களை உருவாக்கி வருகிறான்  இதனால் பரிமாணச்சங்கிலி உடைந்து  போகும் அபாயம் இருக்கிறது .
பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருவது இயற்கையின் தீர்க்க முடியாத புதிர்களில் ஒன்று கண்னுக்கு தெரியாத மிகமிகச்சிறிய உயிரினமான மைக்ரோபிளாஸ்மா முதல் மிகப்பெரிய நீலத்திமிங்கலம் வரை உணவுத்தேவைக்கு இயற்கையை நம்பி உள்ளன. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் நடத்தும் விபரீத விளையாட்டில் தனது உயிர் வாழ்வின் ஆதாரமான பல்லுயிரியத்தை சேதாரமாக்கிக்கொண்டு இருக்கிறான் வாருங்கள் நண்பர்களே அந்த விபரீத விளைட்டினை எட்டிப்பார்ப்போம்.
பல்லுயிரியம்
மூன்று கோடிக்கும் அதிகமான  உயிரின வகைகள் நிலப்பரப்புகள், ஆழ்கடல், காற்றுமண்டலம் என இந்த பூமி முழுவதும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருந்தாலும் மத்தியரேகைப்பகுதிகள் ,வெப்பமண்டல கடல்பகுதிகளின் பவள பாறைகளிலும் போன்ற சில பகுதிகளில் பல்வேறு வகையான உயிரினங்கள் அடர்ந்து காணப்படுகிறது . இத்தகைய அனைத்து உயிர்களும் அவற்றின் வகை மாதிரிகளுமே பல்லுயிரியம் எனப்படுகிறது. உலகெங்கும் 34 பல்லுரியப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பல்லுயிரியம் பயன்கள்
காலநிலை கட்டுப்பாடு
உணவுப்பொருள்கள் , மருந்து பொருட்கள், எரிபொருள் ,கட்டிடபொருட்கள்
வெள்ளம் , வறட்சி , வெப்பம் காற்று போன்றவற்றை கட்டுப்படுத்துதல்
சுற்றுச்சூழலில் மாசுக்களை நீக்குதல் என பட்டியல் நீளும் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரமான  பல்லுயிரியம் தற்போது வேகவேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அவற்றில் சில காரணங்கள்
வாழ்விடங்களின் சிதைவு
மனிதன் தன் வாழ்வியல் தேவைக்கு 80 சதவீதம் பல்லுயிரியத்தைச்சார்ந்து இருக்கிறான் ஆனாலும் நாகரீக தேவைக்கு பல்லுயிரியத்தை அதிகமாக சுரண்டுவதால் பல உயிரினங்கள் அழிவை நோக்கி செல்கின்றன .
அன்னிய உயிரினங்கள் அறிமுகம்
ஒரு பகுதி உயிரியை மற்றொரு பகுதிக்கு அறிமுகம் செய்து அப்பகுதியைச்சார்ந்த உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் . தமிழகத்தில் அறிமுகமான பார்த்தீனியம் செடி மற்ற தாவரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது
சுற்றுசூழல் மாசு
வேதிப்பொருள்கள் நிலம்,நீர்,காற்று போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரிகளுக்கு ஆபத்தாகிறது ,
பருவநிலை மாற்றம் 
வளிமண்டலத்தில் காணப்படும்  கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, CFC  போன்ற பசுமையக வாயுக்கள் பூமியில் பசுமைகுடில் (Green House effect ) விளைவினை ஏற்ப்படுத்துகின்றன அதாவது சூரியனிலிருந்து பெறப்படும் வெப்பத்தை இந்த வாயுக்கள் பூமியிலே தக்கவைப்பதால் பூமியின்  வெப்பநிலையை  உயருகிறது  தற்போதைய நிலை நீடித்தால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 0.3 செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் இதனால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் கடல் மட்டம் 6 செ.மீ உயரும்  இந்நிலை நீடித்தால் 2030 இல் கடல் மட்டம் 28 செ.மீ முதல் 30 செ.மீ வரை உயர்ந்து கடலோர நகரங்கள் அழிந்துவிடும் மேலும் கடல் நீர் உட்புகுவதால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களும் , விலங்கினங்களும்  அழியப்போகிறது
உலகெங்கும் பல்லுயிரியத்தைக்காக்க பல்வேறு அமைப்புகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன பல்லுயிரியப்பகுதிகள்(Hot Spot)என அறிவிக்கப்பட்டு அதி முக்கியத்துவம் தரப்படுகிறது IUCN எனும் அமைப்பு ஆண்டுதோறும் அழியும் நிலையில் உள்ள உயிரிகளைப்பற்றி  Red Data Bookஎனும்  புத்தகத்தை
வெளியிடுகிறது
பல்லுயிரியத்தைக்காப்பது நமது மிக முக்கிய செயல் நாம் வாழும் இப்பூமியை நமது சந்ததிகளுக்கு பாதுகாப்பாக கொடுப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை

டிஸ்கி
பதிவின் நீளம் கருதி பல்லுரியத்தை பற்றிய பல தகவல்கள் தரப்பட வில்லை நண்பர்கள் விரும்பினால்  அதைப்பற்றிய தகவல்களை தனிப்பதிவாக இடுகிறேன்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates