நண்பர்களே
தமிழில் யுனிகோட், வானவில் , டாம், டாப் , திஸ்கி,
செந்தமிழ், ஸ்ரீலிபி , சாப்ட்வியூ போன்ற கணக்கற்ற
எழுத்துரு வகைகள் இருக்கின்றன இவற்றை கையாள அழகி , குறள் , கூகுள் தமிழ் உள்ளீடு , கீமேன் ,
NHM
ரைட்டர் போன்ற விசைப்பலகை இயக்கிகள் இருக்கின்றன இருந்தாலும் தமிழின்
அனைத்து எழுத்துருக்களையும் ஆதரிக்கும் தமிழ் மென்பொருள் இல்லை இக்குறையை நீக்க புதியதாக
ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதை உருவாக்கியவர்
பாண்டிச்சேரியில் வசிக்கும் ஆசிரியர் திரு .முத்துக்கருப்பன் ஐயா அவர்கள் . இதில் தமிழில் உள்ளீடு செய்வது மட்டுமில்லாமல் தமிழ் எழுத்துரு மாற்றியும் உள்ளது . எந்த வகையில் தட்டச்சு
செய்திருந்தாலும் நாம் விரும்பும் எழுத்துரு
வகைக்கு மாற்றிகொள்ளலாம் . மேலும் எண்களை கொடுத்தால்
அதற்குரிய மதிப்பினை தமிழில் பெற்றுக்கொள்ளலாம் . இந்திய நாணயக்குறியீடு போன்ற குறியீடுகளையும்
பெற்றுக்கொள்ளலாம் இது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில்
உள்ளது போல Auto correct வசதியும் உள்ளது அவரின்
வலைத்தளம் சென்று இனிய தமிழ் மென்பொருளை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் . போர்டபிள் மென்பொருளும் உள்ளது பயன்படுத்தி பாருங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா
வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி ஸ்டாலின் . தங்களது குடும்பத்தில் அனைவரும் நலந்தானே மேலும் தங்களது உயர்கல்வி எந்த நிலையில் உள்ளது ?