செவ்வாய், 17 ஜனவரி, 2012

செயற்கை மழையின் இரகசியம் தெரியுமா ?

,

பூமியில் உயிரினங்களை தோற்றுவித்தும் காத்தும் வருவது மழை , மழை பொய்து போனால் மனித சமுதாயம் உட்பட அனைத்து உயினங்களுக்கும் ஏற்படும் இன்னல்கள் ஏராளம்.அதனால்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள்வாழ்த்துக்கு பிறகு வான்சிறப்பு எனும் அதிகாரத்தை மழைக்காக ஒதுக்கியுள்ளார்

சூரிய வெப்பத்தினால் நிலத்தில் உள்ள நீர் ஆவியாகி , நீராவி மேலெழும்பி மேகமாக மாறுகிறது வளி மன்டலத்தில் உயரே செல்ல செல்ல காற்றின் அழுத்தம் குறைகிறது இதனால் மேகம் மேலே செல்ல செல்ல விரிவடைவதுடன் அதனுடைய வெப்பநிலையும் குறைந்து கொண்டே வருகிறது  மேலும் காற்றினால் அடித்து செல்லப்படும் சிறு தூசுகள் ஒரு கவர்ச்சி மையமாக செயல்பட்டு பல நீர் திவலைகளை ஒன்றினைத்து மழையை பொழிவிக்கிறது . அட இதைதான் நாங்க பள்ளிகூடத்திலே படிச்சுட்டோமே மறுபடியும் எதுக்குன்னு நீங்க கேக்கிறது எனக்கு புரியுது  சரி சரி நான் செயற்கை மழைக்கு வருகிறேன்.

1970 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் செயற்கைமழைக்கான ஆராய்ச்சிகள் தொடங்கியது விஞ்ஞானி ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய பெர்னார்டு வென்னிகாட் இருவரும் செயற்கை மழையை பொழிய வைக்க பல வகையான உத்திகளை முயற்சித்து பார்த்தானர் எதுவும் வெற்றிதரவில்லை காற்றினால் அடித்து செல்லப்படும் சிறு தூசிகள் கவர்ச்சிமையமாக செயல்பட்டு மழையை பொழிவிக்கிறது  எனவே செயற்கையாக கவர்ச்சி மையத்தை உருவாக்க முயன்றனர் . பனித்திவலைகளை ஒத்த வெள்ளி அயோடைடு இதற்கான மாற்று என கண்டனர் இவர்களுக்கு பின் வந்த டாக்டர் சிம்சன் போன்றோர் செயற்கை மழை ஆராய்ச்சியை செழுமையாக்கினர்

முதல் விமானம் மூலம் மேகத்திற்கும் மேலே சென்று வெள்ளி அயோடை மேகத்தின் மீது தூவி செயற்கை மழை முயற்ச்சிகள் அமெரிக்காவின் புளோரிடா , கனாடவின் கியூபெக் போன்ற இடங்களில்  நடைபெற்றது  தற்போதும் உலகின்  பல நாடுகளில் செயற்கை மழையை பொழிய வைத்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

செயற்கை மழை என்றதும் ஆக செயற்கை மழையை பொழிய வைத்து சகாராவையும் , தார் பாலைவனத்தையும் பசுஞ்சோலையாக்கி விட முடியும் என்று எண்னிவிடாதீர்கள்  செயற்கை மழை என்பதுஓரிடத்தில் பொழிய வேண்டிய மழை மேகத்தை வேறு ஒரு பகுதியில் செயற்கையாக பெய்ய வைக்கும் முயற்சி ஆகும் செயற்கை மழை உலகின் ஒரு பகுதியில் பொழிய வேண்டிய மழையை குறைத்து பாலைவனமாக்கிவிட்டு மற்றொரு பகுதியை செழுமையாக்கி விடும் மேலும் பருவநிலை மாறுபாடுகளை தோற்றுவித்துவிடும் . செயற்கை மழை கண்டுபிடிக்கப்பட்டவுடன் கனாடாவின் கியூபெக்கில் நடைபெற்ற செயற்கை மழை ஆராய்ச்சியினால் மூன்று மாதங்களில் 60 க்கும் அதிமான நாட்கள் மழை பொழிந்து பெருத்த சேதம் ஏற்பட்டது .

செயற்கை மழையை ஒரு நாடு பொழிய வைத்தால் மற்றொரு நாடும் செயற்கைமழையை பொழிய வைக்கு போட்டா போட்டியில் ஈடுபடும் இதானால் நாடுகளுக்குள் பிரச்சனைகள் அதிகரிக்கும் மேலும் இயற்கையின் பருவமாற்றங்களில் அதிகப்படியான மாறுதல்கள் ஏற்பட்டு உலகில் பேரிடர்கள் தோன்றிவிடும். எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதாக அமைய வேண்டும் மாறாக மக்களின் வாழ்க்கையை அழித்துவிடக்கூடாது  நாம் பொறுத்திருந்து பார்போம் செயற்கை மழை ஆராய்ச்சிகள் மனித குலத்திற்கு வரமா ? சாபமா என்று .

3 கருத்துகள் to “செயற்கை மழையின் இரகசியம் தெரியுமா ?”

 • 17 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:40

  மெயில் அனுப்பி இருக்கேன் சார் ...

 • 17 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:41

  செயற்கை மழை சாபம் தான் ...

 • 18 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:56

  அன்புள்ள சகோ ஸ்டாலின் உங்களின் மெயில் கிடைத்தது , விரைவில் பீட்பர்னர் வசதியை செயல்படுத்துகிறேன் உங்களை போன்ற தொழில்நுட்ப பதிவர்களால்தான் என்னை போன்ற புதியவர்களுக்கு வலையுலகின் சூட்சுமங்கள் புரிகின்றன. கருத்துரையில் நான் கேட்டதிற்க்கு வீடியோ இனைப்பினையும் சரியா லிங்குகளையும் உங்களின் கடின வேளைகளுக்கு மத்தியிலும் எனக்கு அனுப்பியதிற்க்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
  தமிழால் இணைந்து இருப்போம் , வாழ்த்துகளுடன்
  அ.குரு

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates