Thursday, 18 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 1

,

 

நவீனக் காலத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொருள்களின் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக அமைவது அறிவியல் சிந்தனைத் திறனே ஆகும். மனிதனின் சிந்தனைப் பெருக பெருக இயற்கை வளங்களை மனிதனுக்கு தேவையான அடிப்படைப் பொருளாக மாற்றுவதற்குரிய வழிமுறைகளும், அறிவியல் சிந்தனைகளால் உருவாக்கப்படுகின்றன.

இன்றைய தகவல் தொழில் நுட்பம், கணினி மற்றும் இணையம் உலகின் எந்த பகுதியிலும் உள்ள தகவல்களை அறியக் கூடிய வாய்ப்பு, இயற்கை வளங்களின் இருப்பு உட்பட அனைத்து வித தகவல்களையும், எந்தவொரு மனிதனும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை அறிவியல் சிந்தனைகளே நமக்குத் தருகின்றன. ஆகவேதான் இயற்கையின் எல்லா வளங்களைக் காட்டிலும் மனித வளம் என்றழைக்கப்படும் மனிதனின் அறிவியல் சிந்தனை வளமே தலையாயதாகக் கருதப்படுகிறது .

தொடக்க காலங்களில் அறிவியல் ஆய்வுக் கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு அரசுத் துறைகளிலும், பெரிய நிறுவனங்களிலும் பயன்படுத்தப் பட்டன. அதன்பின் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சிறு சிறு வணிக நிறுவனங்களுக்கும் பரவின. இன்றைக்கு வீடுகளிலும்கூட கணினிகள் உலா வருகின்றன.

வீட்டுப் பயன்பாடுகள் என்பவை பெரும்பாலும் பொழுதுபோக்கு மென்பொருள்களாகும். இன்றைக்கு, ஏறத்தாழ அனைத்து வீடுகளிலும் கணினிகள் இன்றிமையாத பொழுதுபோக்குச் சாதனமாக இடம் பெற்றுள்ளது. அதுபோலக் கணினியையும் வீட்டிலுள்ள குழந்தைகளும் பெரியவர்களும் பயன்மிக்க சாதனமாகப் பயன்படுத்துவதற்கு வழியுள்ளது. அதற்கான மென்பொருள் தொகுப்புகளைப் பார்ப்போம்.

ஊடக இயக்கிகள் (Media Players)

இந்த வகை மென்பொருள்கள் இசைப் பாடல்களைக் கேட்பதற்கும், நிழற்படக் காட்சிகளைப் பார்ப்பதற்கும் பயன்படுகின்றன. தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல் திரைப்படங்களைக் கணினியில் கண்டு களிக்க முடியும். இசைப்பாடல் ஆல்பங்கள், திரைப்பாடல் திரட்டுகள் கேட்பொலிக் குறுவட்டுகளில் (Audio CDs) , இணையத்தில் கிடைக்கின்றன.. அவற்றைக் கணினியிலுள்ள குறுவட்டு ( Hard disk ) இயக்கத்தில் வைத்து இயக்க முடியும். ஊடக இயக்கி மென்பொருள் அவற்றை இயக்குகிறது. இன்றைக்கு விண்டோஸ் மீடியா பிளேயர், வி எல் சி பிளேயர் , ரியல் பிளேயர், குவிக்டைம் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படும் ஊடக இயக்கிகளாகும்.

குரல் பதிவிகள் (Voice Recorder)

பேசுவதையும் பாடுவதையும் கணினியில் பதிவுசெய்து, கோப்புகளாக வட்டுகளில் சேமிக்க முடியும். அந்தக் கோப்புகளை இயக்கிப் பேச்சையும் பாட்டையும் மீண்டும் கேட்டு மகிழ முடியும். குரல் பதிவி (Voice Recorder) மென்பொருள் இதற்குப் பயன்படுகிறது. விண்டோஸ் இயக்க முறைமையில் ஒலிப்பதிவி (Sound Recorder) மென்பொருள் உள்ளிணைக்கப் பட்டுள்ளது.

பயன்பாட்டு மென்பொருட்கள் ( Application software)

 அலுவலகப் பயன்பாடுகள் , வரைகலை பயன்பாடுகள் , போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காக  மென்பொருள்கள் ஒருங்கிணைக்கப்பட்டு  வணிக நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் , அடோப் நிறுவனத்தின் தயாரிப்புகள்  உலகத்திலேயே மிகவும் அதிகமான கணினிகளில் பயன்படுத்தப் படுகிறது. இவற்றிற்கு மாற்றாக கட்டற்ற திற மூல மென்பொருட்கள் கிடைக்கின்றன .

அறிவியல் கற்பித்தல் மென்பொருள்கள்

               அறிவியல் கற்றல் கற்பித்தலில் பல்வேறு வணிக , இலவச மென்பொருள்கள் உள்ளன . இதன் ஒரு பகுதியாக  அறிவியல் உருவகப்படுத்துதல் (Science simulations )மென்பொருள்கள் பயன்படுகின்றன. இவ்வகையான உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் Online / Offline முறையில் கிடைக்கின்றன .

அறிவியல் கற்பித்தலில் அறிவியல் ஆய்வகம் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்க வல்லவை . இவைகளை உருவாக்க மிகுந்த பணச்செலவு ஆகும் மேலும் அதிக முன் எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும் ஏன் எனில் ஒரு சிறு தவறும் அதிக பாதிப்பினை உண்டாக்க கூடும் . ஆனால் அறிவியலில் உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் விர்ச்சுவல் லேப் ஆக செயல்படுகின்றன. இவ்வகையான மென்பொருளில் அறிவியல் ஆய்வகத்தில் நாம் செய்து கற்பது போலவே உருவகப்படுத்தும் மென்பொருளில் செய்து கற்க முடியும் இதனால் பொருட்செலவின்றியும் மிக மிக பாதுகாப்பாகவும் அறிவியல் ஆய்வுகளை மாணவர்கள் செய்து பயன் பெற முடியும் . 


மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்......


 

Tuesday, 26 October 2021

திரைப்பதிவு ( Screen Recording ) - Part 3

,

 

நம்முடை புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்வது எப்படி  ?

முதல் நிலை தேர்வு மெனுவில் Capture எனும் மெனுவின் கீழ் உள்ள  Upload என்பதை தேர்வு செய்தால் கூகுள் உள்ளிட்ட பல்வேறு தளங்களுக்கு நமது புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்து கொள்ளலாம் .

நமது தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு செய்வது எப்படி ?

நமது தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு செய்யும் முன் ShareX மென்பொருளின் இரண்டாம் நிலை தேர்வு நிலையில் உள்ள Task settings  என்பதில் Screen recorder  screen recording option என்பதை தேர்வு  தேர்வு செய்து அதில் Audio source என்பதில் நாம் கணினியில் இணைத்துள்ள  ஒலி மூலத்தை தேர்வு செய்ய வேண்டும்  அப்பொழுதுதான் திரைப்பதிவில் நாம் பேசும் ஒலியும் சேர்ந்து பதிவாகும் இல்லையெனில் ஒலி பதிவாகாது.

 

நமக்கு வேண்டிய விடியோக்களை திரைப்பதிவினை பதிவு செய்ய முதலில் ShareX மென்பொருளை திறந்து கொள்ள வேண்டும் பின் அதில் முதல் நிலை தேர்வில் உள்ள


Workflows                 start /Stop screen recording

என்பதை தேர்வு செய்தால் வீடியோ திரைப்பதிவாக பதிவாக தொடங்கும் நம்முடைய   செயல்பாடு முடிந்தவுடன் Stop என்பதை க்ளிக் செய்தால் நம்முடைய செயல்பாடு வீடியோ ஆக சேமிக்கப்பட்டு இருக்கும் .

நம்முடைய புகைப்படம் / வீடியோ எங்கு சேமிக்கப்பட்டு இருக்கும்  ?

ShareX மென்பொருளில் நாம் சேமித்த புகைப்படங்கள் / வீடியோக்களை காண வேண்டும் என்றால்  மூன்றாம் நிலை தேர்வு மெனுவில் Screenshot folder என்பதை தேர்வு செய்தால் அந்த folder திறக்கும் அதை நாம் தேவையான இடங்களிலோ அல்லது பெண்டிரைவ் போன்ற சோமிப்பகங்களிளோ சேமித்துக்கொள்ளலாம் .




ShareX மென்பொருளில் மூன்றாம் நிலை தேர்வு மெனுவில் History  என்பதை தேர்வு செய்தால் நாம் செய்த அனைத்து செயல்களின் History அங்கே சேமிக்கப்பட்டு இருக்கும் . மேலும் Image History என்பதை தேர்வு செய்தால் புகைப்படம் சார்ந்து நாம் செய்த அனைத்து செயல்களின் History அங்கே சேமிக்கப்பட்டு இருக்கும் .


 ShareX மென்பொருளின் சிறப்பியல்புகள் 

ShareX மென்பொருளில் பல்வேறு சிறப்பியல்பு மென்பொருள் கருவிகள் உள்ளன . நாம் திரைப்பதிவாக சேமிக்கும் புகைப்படங்களை இமேஜ் எடிட்டர் மூலம் அழகாக்கி கொள்ளலாம்  . மேலும் பத்திற்கும் மேற்பட்ட சிறப்பியல்பு கருவிகள் உள்ளன .                                                                                                                                        நமக்கான குறுக்கு விசைகளை (Shortcut keys) உருவாக்கி கொள்வது எப்படி ?

ShareX மென்பொருளில் செயல்புரியும் போது குறுக்குவிசைகளை உருவாக்கி கொள்வது  நாம் செய்யும் செயல்கள் விரைவாகவும் எளிதாகவும் அமையும் குறுக்கு விசைகளை பெற இரண்டாம் நிலை தேர்வு மெனுவில் Hot key settings என்பதை தேர்வு செய்தால் குறுக்கு விசைகளை அமைத்துக்கொள்ளலாம்

ShareX மென்பொருளில் செயல்புரியும் போது மென்பொருளின் Settings களை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள  Task key settings உதவுகிறது . மென்பொருளின் பல்வேறு settings களை நாம் நம் விருப்பம் போல மாற்றியமைத்துக்கொள்ளலாம் .

விலை கொடுத்து வாங்கினாலும் கிடைக்காத பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த இலவச மொன்பொருள் ShareX  இல்  கிடைக்கின்றன . இந்த வசதிகள் மூலம் நாமே மிக மிக எளிதாக கல்வியல் சார்ந்த நமது சொந்த வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம் .


Part-1 

Part-2

Wednesday, 20 October 2021

திரைப்பதிவு ( Screen Recording ) - Part 2

,

 

ShareX எனும் மென்பொருளை இணையத்தில் இருந்து   பதிவிறக்கம் செய்து நமது கணினில் பதிவு(Instal) செய்து விட்டால் போதுமானது நமது கணினினியின் திரையினை திரைப்பதிவாக பதிவு செய்து கொள்ள முடியும் . இம்மென்பொருள் முற்றிலும் இலவசமானது மற்றும் மிக குறைந்த அளவு    7 MB நினைவக கொள்ளளவு உடையதால் விரைவாகவும் எளிதாகவும் பணியாற்ற முடியும்  . 


ShareX எனும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முதலில் கூகுளில் ShareX என தட்டச்சு செய்து தேட வேண்டும்  அதில் கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவினை ளிக் செய்தால் ShareX எனும் மென்பொருளின் அதிகாரபூர்வ தளத்திற்கு நாம் அழைத்து செல்லப்படுவோம்  அங்கே வின்டோஸ் , லினக்ஸ் , போன்ற கணினி இயக்க சூழலுக்கு ஏற்றவற்றை தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்  .

Download link

நமது கணினியில் ShareX எனும் மென்பொருளினை டவுன்லோட் செய்த பிறகு அதை இன்ஸ்டால் செய்து அதை திறந்தால் கீழ்கண்டவாறு அதன் முகப்பு தோற்றம் கிடைக்கும் இதில் இடது புறம் மெனுகளும் வலது புறம் நாம் மாற்றியமைக்க கூடிய குறுக்கு விசைகளும் இருக்கும் . 

இதில் மூன்று தேர்வு நிலைகளில் மெனுக்களும் சப்மெனுக்களும் உள்ளன .  இதில் முதல் நிலை தேர்வில்





v Capture

v Upload

v Workflows

v Tools

இரண்டாம் நிலை தேர்வில்

v After capture Task

v After Upload Task

v Destinations

v Application settings

v Task settings

v Hotkey settings

மூன்றாம் நிலை தேர்வில்

v Screen shots folder

v History

v Image histoy

v News

v Debug

v Donate

v About

ஆகிய மெனுக்கள் உள்ளன . இதில் முக்கோண வடிவில் உள்ள ஐகானை க்ளிக் செய்து தேர்வு செய்வதின் மூலம் துணை நிலை மெனுக்களை பெறலாம்

v புகைப்படங்களை திரைப்பதிவு செய்வது எப்படி ?

நமக்கு வேண்டிய புகைப்படங்க்ளை திரைப்பதிவினை பதிவு செய்ய முதலில் ShareX மென்பொருளை திறந்து கொள்ள வேண்டும் பின் அதில் முதல் நிலை தேர்வில் உள்ள


Capture    -     Full screen 

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும் .


Capture       Window

என்பதை தேர்வு செய்தல் கடைசியாக செயல்பட்ட செயல்களின் விண்டோக்கள்  இருக்கும் அதில் நமக்கு தேவையானவற்றை செலக்ட் செய்தால் அந்த விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும் .


Capture   -   Monitor  

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும் .


Capture         Region 

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை  புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . .


Capture  -     Region  (Light)

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை  புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . இம் மெனுவின் சிறப்பம்சம் நமது புகைப்படத்தின் பின்புறங்கள் நீக்கப்பட்டு இருக்கும்


Capture    -   Region  ( Transparent )

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை  புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . இம் மெனுவின் சிறப்பம்சம்மும் நமது புகைப்படத்தின் பின்புறங்கள் நீக்கப்பட்டு இருக்கும்

மீண்டும் அடுத்த பகுதியில் தொடருவோம்.....

 

 

Tuesday, 19 October 2021

திரைப்பதிவு ( Screen Recording ) -Part 1

,


 

திரைப்பதிவு ( Screen Recording ) என்பது நீங்கள் காணும் கணினி அல்லது அலைபேசியின் திரையை புகைப்படமாகவோ அல்லது காணொலியாகவோ பதிவு செய்வது ஆகும் . கணினியில் விளையாடும் விளையாட்டுக்களையோ , மென்பொருட்களின் செயல்பாடுகள்ளை விளக்கும் காணொலிகளையோ திரைப்பதிவாக பதிவு செய்ய முடியும் . திரைப்பதிவில் ஒளி மற்றும் ஒலி ஆகிய இரண்டையும் தனித்தனியாகவோ அல்லது இரண்டையும் ஒன்று சேர்த்தோ திரைப்பதிவு செய்ய முடியும் திரைப்பதிவு ( Screen Recording ) என்பது ஒரு பயன்மிக்க அம்சமாகும் .திரைப்பதிவினை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்க முடியும் . நம் நண்பர்களுக்கோ , உறவினர்களுக்கோ திரைப்பதிவினை அனுப்பி வைக்க முடியும்  .

ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள விரைவு பதில் (QR code) குறியீட்டிற்கு ஏற்ற காணொலிகளையோ ஆன்லைன் பாடதிட்டங்களையோ உருவாக்க திரைப்பதிவு ( Screen Recording )வினை பயன்படுத்த முடியும் மேலும் ஆன்லைனில் நேரிடையாக ஒளிபரப்பப்படும் படத்திட்டங்களை பதிவு செய்ய திரைப்பதிவு உதவுகின்றது .

கணினி அல்லது அலைபேசியின் முன்புறம் உள்ள கேமராவை  இயக்கினால் திரைப்பதிவுடன் திரையில் தோன்றி நாம் பேசும் சொந்த காணொலியையும் திரைப்பதிவி னையும் ( Screen Recording ) ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியும் .எந்த ஒரு மென்பொருள் பயன்பாட்டின் பயிற்ச்சிகளையும் பதிவு செய்வதற்கு திரைப்பதிவு சிறந்தது . யூடூப்பில் (Youtube ) காணொலிகள் பதிவேற்றம் செய்பவர்களோ , மென்பொருள் உருவாக்குநர்களோ தங்கள்பயன்பாடுகளின் பயன்பாட்டை விளக்க திரைப்பதிவு காணொலிகளையே பயன்படுத்துகின்றனர்  


திரைப்பதிவு செய்வதற்கு பல்வேறு வணிக மற்றும் இலவச மென்பொருள்கள் உள்ளன இதில் நாம் கற்றுக்கொள்ள போவது விலையில்ல கற்றற்ற மென்பொருள் (Free and open source ) ஆன ShareX எனும் பல்வேறு  சிறப்பம்சங்களை உள்ளடக்கிய  திரைப்பதிவு மென்பொருள் ஆகும் . மீண்டும் அடுத்த பதிவில் ShareX மென்பொருள் குறித்து விரிவாக கற்போம் .


Thursday, 13 September 2018

LMS - மின்வழி கற்றல் ஓர் எளிய அறிமுகம்

,
வணக்கம் நண்பர்களே மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் பதிவிட தொடங்குகிறேன். மின் வழி கற்றல் என்றால் என்ன அதற்கு தேவைப்படும் வளங்கள் என்ன என்று இந்த சிறு காணொலியில் கூறி இருக்கிறேன். இனி பிளாக்கரில் பதிவுகள் தொடர்கிறேன்

Tuesday, 2 June 2015

லீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் ?

,
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகும் இதைத்தான் நாம் ஒரு வருடம் என்கிறோம் . ஆனால் ஒரு லீப் வருடத்திற்கு மட்டும் 366 நாட்கள் வரும் காரணம் என்னவென்று தெரியுமா ?

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகிறதல்லவா இதில் 6 மணி நேரத்தை ஒதுக்கிவிட்டு 365 நாட்களை ஒரு வருடம் என்கிறோம் இந்த விடுபட்ட 6 மணி நேரம் இரண்டாம் ஆண்டு 12 மணிநேரமாகிறது . மூன்றாம் ஆண்டு  இன்னும் ஆறு மணிநேரம் சேர்ந்து 18 மணி நேரமாகிறது நான்காம் ஆண்டு 24 மணிநேரமாகிறது ஆகையால் இந்த நான்காம் ஆண்டு 365 நாட்களுடன் ஒரு நாள் சேர்ந்து 366 நாட்களுடன் லீப் வருடமாகிறது . 
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates