
உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.
1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள்...