Sunday, 26 June 2011

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

,
 முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.இந்த
மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...செய்யவும் அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.பின்குறிப்பு:நாம்
Opera
கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்


0 comments to “மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க”

Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates