நவீனக் காலத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொருள்களின் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக அமைவது அறிவியல் சிந்தனைத் திறனே ஆகும். மனிதனின் சிந்தனைப் பெருக பெருக இயற்கை வளங்களை மனிதனுக்கு தேவையான அடிப்படைப் பொருளாக மாற்றுவதற்குரிய வழிமுறைகளும், அறிவியல் சிந்தனைகளால் உருவாக்கப்படுகின்றன.
இன்றைய தகவல் தொழில் நுட்பம், கணினி மற்றும் இணையம் உலகின் எந்த பகுதியிலும் உள்ள
தகவல்களை அறியக் கூடிய வாய்ப்பு, இயற்கை வளங்களின் இருப்பு உட்பட அனைத்து வித தகவல்களையும், எந்தவொரு
மனிதனும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை அறிவியல் சிந்தனைகளே நமக்குத் தருகின்றன. ஆகவேதான் இயற்கையின் எல்லா வளங்களைக் காட்டிலும் மனித வளம் என்றழைக்கப்படும்
மனிதனின் அறிவியல் சிந்தனை வளமே தலையாயதாகக் கருதப்படுகிறது .தொடக்க காலங்களில் அறிவியல் ஆய்வுக் கூடங்களிலும் பல்கலைக்...