
நண்பர்களே அலைபேசியும்
, இணையமும் ஒன்றினைந்து இன்று உலகை சுருக்கியதால் .உலகெங்கும் ஒரு நொடியில் தொடர்புகொள்ள
முடியும் என்பதும் அடித்தட்டு மக்களும் நவீன தொழில்நுட்பத்தை இலகுவாக பயன்படுத்துகின்றனர்
என்பதெல்லாம் நன்கறிந்த விடயம் . அலைபேசியும்
, இணையமும் இல்லாமல் உலகெங்கும் இலவசமாய் பேச ஓரு கருவி உள்ளது அதை பற்றி உங்களுக்கு
தெரியுமா ? மேலும் அக்கருவிக்கு தொலைத்தொடர்பு சிக்னல்கள் தேவையில்லை என்பதும் உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே
அந்த அதிசய கருவியான பற்றி அறிவோம்.
ஹாம்ரேடியோ ஒரு
அறிமுகம்
ஹாம்ரேடியோ என்பது
ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்தும் ஒருகருவியாகும் . நிலநடுக்கம் ,சுனாமி போன்ற இயற்கை
பேரிடர்கள் நிகழும் போது மின்சாரம் , தொலைதொடர்பு ஆகியவை முற்றிலும் முடங்க்கி போகும்
அந்த இக்கட்டான சூழ்நிலைகளில் உலகிற்கு தகவல்...